Bhagavad-Gita

 

Buy this in eBook

      CONTENTS

1.அர்ஜுனனின் தடுமாற்றம் 6

படைத் தளபதிகள் அறிமுகம்.. 6

அர்ஜுனன் படையை சோதிக்க விரும்புகிறான்... 7

அர்ஜுனனின் தடுமாற்றம்138. 8

அர்ஜுனன் போரின் தீமைகளை விவரிக்கிறான்... 9

காலங்கள் கடினமாகும் போது, வலிமையானவர்கள் கூட ஏமாற்றப்படலாம்    9

2.ஆழ்நிலை அறிவு 10

அர்ஜுனன் போருக்கு எதிராகப் பேசுகிறான்... 10

கீதா உபதேசங்கள் தொடங்குகின்றன... 11

ஆன்மா நித்தியமானது, உடல் நிலையற்றது... 12

மரணமும் ஆன்மாவின் மறுஜனனமும்.. 12

ஒரு சத்திரியனான அவனது கடமையைப் பற்றி அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணா நினைவூட்டுகிறார். 13

வேதங்கள் பொருள் மற்றும் ஆன்மீக அம்சங்கள் ஆகிய இரண்டையும் பற்றி கூறுகின்றன     15

கர்மயோகத்தின் கொள்கையும் நடைமுறையும்.. 16

சுய அறிவு பெற்றவனின் அடையாளங்கள்... 17

கட்டுப்படுத்தாத புலன்களின் அபாயங்கள்... 17

புலன் கட்டுப்பாடு மற்றும் சுய அறிதலினால் அமைதியையும் மகிழ்ச்சியையும் அடைதல்    18

3.கர்ம யோகத்துக்கான பாதை.. 19

ஏன் ஒருவன் பிறருக்கு சேவைசெய்ய வேண்டும்?.. 20

ஒருவருக்கொருவர் உதவிசெய்வதே படைத்தவரின் முதல் கட்டளை...... 20

தலைவர்கள் முன்மாதிரியாகத் திகழவேண்டும்.. 21

எல்லா செயல்களும் இயற்கையின் செயல்களே..... 22

முழுமையின் பாதையில் இரு பெரும் தடைக்கற்கள்... 23

காமமே பாவத்தின் மூலம்.. 23

காமத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது... 24

4.அறிவுடன் துறவுப் பாதை.. 24

கர்ம யோகம் ஒரு பழமையான சட்டம்.. 24

கடவுள் அவதாரத்தின் நோக்கம்.. 25

வழிபாடு மற்றும் பிரார்த்தனையின் பாதை..... 26

ஒரு கர்ம யோகி கர்ம விதிகளுக்கு உட்பட்டவன் அல்லன்... 27

வெவ்வேறு வகையான ஆன்மீக நடைமுறைகள்... 28

ஆழ்நிலை அறிவு ஒரு கர்ம யோகிக்குத் தானாகவே வெளிப்படுத்தப்படும்    29

நிர்வாண நிலைக்கு ஆழ்நிலை அறிவு மற்றும் கர்ம யோகம் ஆகிய இரண்டும் தேவை         30

5.துறவறப் பாதை.. 30

ஒரு கர்ம யோகி கடவுளுக்காக செயல்புரிகிறான்... 31

சுய அறிவுப் பாதை..... 32

அறிவொளி பெற்றவனின் கூடுதல் அடையாளங்கள்... 32

மூன்றாவது பாதைபக்தி தியானம் மற்றும் ஆழ்சிந்தனைப் பாதை..... 33

6. தியானப் பாதை.. 34

ஒரு கர்ம யோகி ஒரு துறவியுமாகும்.. 34

யோகம் மற்றும் யோகி என்பதன் வரையறை...... 34

மனம் நண்பனும் எதிரியுமான இரண்டும் ஆகும்.. 35

தியானத்தின் வழிமுறைகள்... 35

ஒரு யோகி யார்?.. 37

மனதை அடக்கும் இருமுறைகள்... 38

வெற்றியடையாத யோகியின் இலக்கு... 38

சிறந்த யோகி யார்?.. 39

7. சுய அறிவும் அறிவொளியும் 40

மேலாம் ஆன்மாவே அனைத்திற்கும் அடிப்படை...... 40

யார் கடவுளைத் தேடுகின்றனர்?.. 41

எந்த ஒரு விரும்பும் வழிபாட்டு வடிவின் உருவத்திலும் கடவுளைப் பார்க்கலாம்    42

8. பரம்பொருள் 44

மேலான ஆத்மா, ஆத்மா, தனிப்பட்ட ஆத்மா மற்றும் கர்மம் பற்றிய வரையறைகள்    44

மறுபிறவி மற்றும் கர்மம் பற்றிய கொள்கை..... 44

கடவுளை அறிதலுக்கான ஒரு எளியமுறை...... 45

மரணத் தறுவாயில் கடவுளை தியானித்து விடுதலை அடையுங்கள்    45

படைப்பில் அனைத்தும் சுழற்சிகொண்டவை...... 46

புறப்படுவதற்கான இரு அடிப்படை பாதைகள்... 47

ஆழ்நிலை அறிவு விடுதலைக்கு வழிநடத்துகிறது... 47

9.மேலான அறிவு மற்றும் மாபெரும் இரகசியம் 48

உன்னதரின் இயல்பைப் பற்றிய அறிவுதான் மாபெரும் ரகசியம்.. 48

பரிணாமம் மற்றும் உள்ளுருளல் கொள்கை..... 49

ஞானிகள் மற்றும் மூடர்களின் வழிகள்... 49

அனைத்தும் முழுமையின் ஒரு வெளிப்பாடாகும்.. 50

அன்போடு கூடிய பக்தியால் முக்தி அடைதல்.. 50

அன்பு மற்றும் பக்தியின் காணிக்கைகளை...... 51

பகவான் ஏற்றுக்கொண்டு உட்கொள்ளுகிறார். 51

மன்னிக்க முடியாத பாவி ஒருவரும் இல்லை...... 52

பக்தியுள்ள அன்புப் பாதை எளிதானது... 52

10. ழுமையின் வெளிப்பாடு 53

கடவுளே எல்லாவற்றிற்கும் மூலம்.. 53

கடவுள் தமது பக்தர்களுக்கு அறிவை அளிக்கிறார். 54

மெய்மையின் உண்மைத் தன்மையை யாராலும் அறிய முடியாது... 54

எல்லாம் முழுமையின் ஒரு வெளிப்பாடே..... 55

வெளிப்படுத்தப்பட்ட படைப்பு முழுமையின் ஒரு மிகச் சிறிய பின்னமே       57

11. பேரண்ட வடிவத்தின் தரிசனம் 57

கடவுளின் தரிசனமே தேடும் ஒருவனின்... 57

இறுதி இலக்கு... 57

பகவான் கிருஷ்ணன் தமது பேரண்ட  வடிவத்தைக் காட்டுகிறார். 58

ஒருவன் கடவுளைப் பார்க்க தயாராக அல்லது தகுதியாக இல்லாமல் இருக்கலாம்    59

பேரண்ட வடிவத்தைக் கண்டு அச்சமடைந்த அர்ஜுனன்... 60

நாம் வெறும் தெய்வீகக் கருவி மட்டுமே..... 61

பேரண்ட வடிவத்திடம் அர்ஜுனனின் பிரார்த்தனைகள்... 61

ஒருவன் கடவுளை எந்த வடிவத்திலும் காணலாம்.. 63

அன்புடைய பக்தியினால் கடவுளைக்.. 64

காண முடியும்.. 64

12. பக்தி வழி. 65

தோற்றமுள்ள அல்லது தோற்றமற்ற கடவுளில் யாரை ஒருவன் வணங்க வேண்டும்?   65

கடவுளின் தனி வடிவத்தை..... 65

வணங்கக் காரணங்கள்... 65

கடவுளை அடையும் நான்கு வழிகள்... 66

கர்ம யோகம்தான் சிறந்த வழி... 66

ஒரு பக்தனின் பண்புநலன்கள்... 66

ஒருவன் முழுமனதுடன் தெய்வீகப் பண்புகளை மேம்படுத்த முயல வேண்டும்    68

13. படைப்பும் படைத்தவரும் 68

படைப்பின் கொள்கை..... 68

நிர்வாணத்துக்கான வழிகளாக நான்மடங்கு... 68

உன்னத உண்மை...... 68

கடவுளை உவமைகளால் மட்டுமன்றி வேறு எந்த வழியிலும் விளக்க முடியாது    69

மேலான ஆன்மா, ஆன்மா, பொருள் இயற்கை மற்றும் தனிப்பட்ட ஆன்மா      70

நம்பிக்கை மட்டுமே நிர்வாணத்திற்கு வழிகாட்ட முடியும்.. 71

ஆவியின் பண்புநலன்கள்... 72

14. இயற்கையின் மூன்று முறைகள் (குணங்கள்) 72

எல்ல உயிர்களும் ஆவி மற்றும் பொருளின் சேர்க்கையால் பிறக்கின்றன     73

பொருள் இயற்கையின் மூன்று முறைகளும் எவ்வாறு ஆத்துமாவை உயிரோடு பிணைக்கின்றன     73

இயற்கையின் மூன்று குணங்களின் இயல்புகள்... 74

மூன்று குணங்கள் தனிமனித ஆத்துமாவின் மறுபிறவிக்கான வாகனங்கள்    74

பொருள் இயற்கையின் மூன்று குணங்களைக் கடந்து நிர்வாணம் அடையவும்    75

மூன்று குணங்களுக்கு மேலாக எழும் செயல்முறை...... 75

மூன்று குணங்களின் பந்தங்களை பக்தியுள்ள அன்பால் அறுக்க முடியும்    76

15.மேலானவன். 76

மாயையின் ஆற்றல்களினால் உருவாக்கப்பட்ட ஒரு மரத்தைப் போல் படைப்பு இருக்கிறது    76

எவ்வாறு பந்தம் என்ற மரத்தை வெட்டி.. 77

விடுதலையை அடைவது... 77

அனுபவிக்கும் உள்ளடங்கிய ஆன்மா.... 77

ஆவியே அனைத்தின் உட்சாரம்.. 78

உன்னத ஆவி, ஆவி மற்றும்.. 79

படைக்கப்பட்டவைகள் எவை...... 79

16. தெய்வீக மற்றும் அசுரத் தன்மைகள் 79

முக்திக்காக பண்படுத்தப்பட வேண்டிய பெரும்.. 79

தெய்வீகத் தன்மைகளின் ஒரு பட்டியல்.. 80

விட்டுவிட வேண்டிய அரக்கப் பண்புகளின் பட்டியல்.. 80

இரு வகையான மனிதர்கள் மட்டுமே உள்ளனர்: 80

ஞானி மற்றும் மூடன்... 80

துன்பமே மூடர்களின் விதி... 82

காமம், கோபம், மற்றும் பேராசையே நரகத்தின் மூன்று வாயில்கள்    82

ஒருவன் வேதங்களைப் பின்பற்ற வேண்டும்.. 82

17. மும்மடங்கு நம்பிக்கை.. 82

அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா, வேத வழிகாட்டல்களை பின்பற்றாமல், நம்பிக்கையுடன் ஆன்மீக நடைமுறைகளை மேற்கொள்ளுபவர்களின் பக்தி முறை என்ன? அது நற்செயலா, பாசமா, அல்லது அறியாமையா, இவற்றில் என்ன முறை? .. 82

மூன்று வகை நம்பிக்கை..... 82

மூன்று வகை உணவு... 83

மூன்று வகை வேள்விகள்... 84

சிந்தனை, வார்த்தை மற்றும் செயல் தவம்.. 84

மூன்று வகை தவங்கள்... 84

கடவுளின் முந்நாமங்கள்... 85

18. சுயத்தை விட்டு முத்தி அடைதல் 85

துறவு மற்றும் தியாகத்தின் வரையறை...... 85

மூன்று வகையான தியாகம்.. 86

ஒரு செயலுக்கான ஐந்து காரணங்கள்... 87

மூன்று வகையான செயல்கள்... 87

மூன்று வகையான முகவர். 88

மூன்று வகை அறிவு... 88

மூன்று வகையான மனத்துணிவு, மற்றும் மானிட வாழ்க்கையின் நான்கு இலக்குகள்    89

இன்பத்தின் மூன்று வகைகள்... 89

வேலைப்பிரிவு ஒருவனின் திறனை அடிப்படையாகக் கொண்டது... 90

கடமை, கட்டுப்பாடு மற்றும் பக்தியின் மூலம் முக்தி அடைதல்.. 90

கர்ம பந்தமும் சுய சித்தமும்.. 92

சரணாகதிப் பாதையே கடவுளிடம் செல்லும் இறுதிவழி... 93

கடவுளுக்கான மிக உயர்ந்த சேவையும்.. 93

சிறந்த கொடையும்.. 93

கீதையின் அருள்... 94

அறிவு மற்றும் செயல் ஆகிய இரண்டும் தேவை...... 95


BHAGAVAD GITA IN TAMIL

பகவத் கீதை வசனங்கள்

(தமிழில் பகவத்கீதை ஸ்லோகம்)

(ஆங்கில மொழிபெயர்ப்பு: ஐஜிஎஸ்)

www.gita-society.com

 

1.    அர்ஜுனனின் தடுமாற்றம்

திருதராஷ்ட்டிர மன்னன் கூறினான்: சஞ்சயா, போர்செய்யும் ஆர்வத்துடன் குருஷேத்திரப் புண்ணிய பூமியில் அணிவகுத்திருந்த  என் மக்களும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்? (1.01) சஞ்சயன் கூறினான்: பாண்டவர்களின் போர் அணிவகுப்பைப் பார்த்து, மன்னன் துரியோதனன் தனது குருவை அணுகிப் பின்வருமாறு கூறினான்: (1.02) குருவே, தங்களுடைய மற்ற திறமை மிக்க சீடனால் அணிவகுக்கப்பட்டுள்ள பாண்டுவின் புதல்வர்களின் இந்த வலிமையான படையைப் பாருங்கள். பல மாபெரும் போர் வீரர்களும், வீர புருஷர்களும், வீரர்களும் வலிமை மிக்க வில்வீரர்களும் உள்ளனர். அவர்களில் சிலரின் பெயர்களை உங்களுக்குக் கூறுவேன். (1.03-06) மேலும் அறிந்துகொள்ளுங்கள், மனிதர்களில் சிறந்தவர்களை, நம் அணியில் இருக்கும் சிறப்பு வாய்ந்தவர்களை.

படைத் தளபதிகள் அறிமுகம்  

என் படையின் தளபதிகளையும், எனக்காக தங்கள் உயிரையும் இழக்கத் துணிந்த பிற பல வீரர்களின் பெயர்களையும் நான் கூறுவேன். அவர்கள் பல்வேறு ஆயுதங்களைக் தாங்கியவர்கள், மேலும் போர்த் திறம் வாய்ந்தவர்கள். (1.07-09) நமது படை வெல்ல முடியாதது. அவர்கள் படையோ எளிதில் தோற்கடிக்கக்கூடியது. ஆகவே, நீங்கள் எல்லோரும், எல்லா முனைகளிலும் உங்கள் பதவிக்கு ஏற்ப கடமையாற்றி, நமது தளபதியான பீஷ்மரைப் பாதுகாக்கவேண்டும் (1.10-11) குருகுலப் பரம்பரையின் மூத்தவரும், மகா வல்லவருமான பீஷ்மர், சிங்கம் போல் கர்ஜித்து தமது சங்கை எடுத்து ஊதி துரியோதனனுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தினார். (1.12) அதன் பின்னர், சங்குகள், மத்தளங்கள், கஞ்சங்கள், தாரைகள், மற்றும் ஊதுகொம்புகள் எல்லாம் ஒன்றாக ஒலித்தன. எழுந்த ஆரவாரம் அதிபயங்கரமாக இருந்தது. (1.13) பின்னர் கிருஷ்ண பகவானும் அர்ஜுனனும், வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட மகா ரதத்தில் அமர்ந்து தங்கள் சங்குகளை முழங்கினர். (1.14) கிருஷ்ணர் தமது சங்கை முழக்கினார்; பின்னர் அர்ஜுனனும் பல்வேறு படைப்பிரிவுகளின் மற்ற எல்லா தளபதிகளும் தங்கள் தங்கள் சங்குகளை முழக்கினார்கள். இந்தக் கொந்தளிப்பான ஆரவாரம் பூமியிலும் வானத்திலும் எதிரொலித்து கௌரவர்களின் இதயங்களைக் கிழித்தது. (1.15-19).

அர்ஜுனன் படையை சோதிக்க விரும்புகிறான்

கௌவரவர்கள் நிற்பதை பார்த்து, ஆயுதங்களை வீசிப் போர் தொடங்கப் போகும் நிலையில், பகவான் அனுமனின் சின்னத்தைப் பொறித்த கொடியை  உடையவனான அர்ஜுனன்,தனது வில்லை எடுத்துக்கொண்டு பகவான் கிருஷ்ணனைப் பார்த்து பின்வரும் வாத்தைகளைக் கூறினான்: பகவானே! என்னுடைய ரதத்தை இந்த இரண்டு படைகளுக்கும் நடுவில் நிறுத்துவாயாக. போர் செய்யும் ஆர்வத்துடன் யாரெல்லாம் இங்கு நிற்கிறார்கள் என்றும், இந்தப் போரை யாருடன் நான் நடத்த வேண்டும் என்றும் நான் பார்க்க வேண்டும். (1.20-22) இந்தப் போருக்காக அணிவகுத்து இங்கு வந்ததன் மூலம் தீய மனதுடைய கௌரவர்களுக்காக யாரெல்லாம் சேவையாற்றி அவர்களைத் திருப்திப்படுத்த விரும்புகிறார்கள் என்று நான் பார்க்க விரும்புகிறேன். (1.23) சஞ்சயன் கூறினான்: அரசனே! அர்ஜுனன் கேட்டுக்கொண்டபடி கிருஷ்ண பகவான் எல்லா தேர்களை விடவும் சிறப்பு வாய்ந்த ரதத்தை பீஷ்மர், துரோணர், மற்றும் அனைத்து அரசர்களுக்கும் எதிரில் இரண்டு படைகளுக்கும் நடுவில் நிறுத்தி அர்ஜுனனிடம் கூறினார்: அணிவகுத்து நிற்கும் கௌரவர்களைப் பார் (1.24-25). அங்கே, அர்ஜுனன், தனது மாமன்மாமார்கள், பாட்டன்கள், குருமார்கள், தாய்மாமன்மார்கள், சகோதரர்கள், மகன்கள், பேரன்கள் மற்றும் தோழர்களைப் பார்த்தான் (1.26)

அர்ஜுனனின் தடுமாற்றம்138

இரு படைகளின் முன்னணியிலும் நின்றுகொண்டிருந்த மாமன்கள், தோழர்கள் மற்றும் தனது அனைத்து உறவினர்களையும் கண்ட அர்ஜுனன், பெரும் பரிவுணர்வும் துயரமும் கொண்டவனாய்க் கூறினான்: கிருஷ்ணனே! போர்செய்யும் விருப்பத்துடன் நிற்கும் என் உறவினர்களைப் பார்த்து என் அவயவங்கள் தளர்ந்து போகின்றன என் வாய் உலர்ந்து போகிறது. என் உடல் நடுங்குகிறது என் மயிர்கள் சிலிர்க்கின்றன. (1.27-29) என் வில் என் கையில் இருந்து நழுவுகிறது, என் தோல் பற்றி எரிகிறது. என் தலை கவிழ்கிறது, என்னால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை, மேலும், கிருஷ்ணனே, நான் கெட்ட நிமித்தங்களைப் பார்க்கிறேன். என் உறவினர்களைப் போரில் கொல்வதால் ஒரு பயனும் இல்லை என்று நான் உணர்கிறேன். (1.30-31) நான் வெற்றியையோ, இன்பத்தையோ அல்லது ராஜ்யத்தையோ விரும்பவில்லை, கிருஷ்ணனே.  ராஜ்யத்தால், இன்பத்தால் அல்லது ஏன் வாழ்க்கையால் என்ன பயன், கிருஷ்ணனே? ஏனெனில், யாருக்காக நாம் ராஜ்யத்தையும், இன்பத்தையும்,மகிழ்ச்சியையும் விரும்புகிறோமோ அவர்கள் எல்லோரும் தங்கள் வாழ்க்கையையும் சொத்தையும் விட்டுவிட்டுப் போருக்காக இங்கே நிற்கிறார்கள். (1.32-33) நம்மைக் கொல்ல இருக்கும் என் ஆசான்களை, மாமன்களை, மகன்களை, பாட்டன்களை, தாய்மாமன்களை, மாமனார்களை, பேரன்களை, மைத்துனர்களை மற்றும் பிற உறவினர்களை மூன்று உலகங்களையும் ஆள்வதற்கும் கூட கொல்ல விரும்பாத போது, இந்த உலகத்தை மட்டும் ஆள்வதற்காக கிருஷ்ணா நான் கொல்ல விரும்பவில்லை. (1.34-35)

   கிருஷ்ண பகவானே, திருதராஷ்ட்டிரரின் மகன்களை கொல்வதனால் நமக்கு என்ன இன்பம் கிடைக்கும்? இந்தக் குற்றவாளிகளைக் கொல்வதனால் நாம் பாவத்தை சம்பாதிப்போம். (1.36) ஆகவே, திரிதராஷ்ட்டிரரின் மகன்களான நமது சகோதரர்களை நாம் கொல்லக் கூடாது. நமது உறவினர்களைக் கொல்வதன் மூலம் நமக்கு எவ்வாறு மகிழ்ச்சி கிடைக்கும், கிருஷ்ணனே? (1.37). பேராசையினால் குருடர்களாகிப் போன அவர்கள் குடும்பம் அழிந்து போவதில் உள்ள தீமையை அல்லது தோழர்களுக்கு துரோகம் செய்வதனால் ஏற்படும் பாவத்தை எண்ணிப் பார்க்கவில்லை.  ஆனால் நாமும் ஏன் அப்படி இருக்க வேண்டும்? குடும்பத்தின் அழிவில் இருக்கும் தீமையை நாம் தெளிவாகப் பார்க்கிறோம். பாவத்தில் இருந்து விலகி ஓட நினைக்கிறோம் இல்லையா, கிருஷ்ணா?  (1.38-39)

அர்ஜுனன் போரின் தீமைகளை விவரிக்கிறான்

குடும்பம் அழிக்கப்படும் போது நிரந்தரமான குடும்ப மரபுகளும் நெறிமுறைகளும் அழிக்கப்படுகின்றன. குடும்ப மரபுகள் அழிக்கப்படுவதால் ஒழுக்கக்கேடு அதிகமாகிறது. (1.40). மேலும் ஒழுக்கக்கேடுகள் பெருகும்போது, கிருஷ்ணா, குடும்பத்தின் பெண்களின் நல்லொழுக்கம் கெடுகிறது; பெண்களின் ஒழுக்கம் சிதையும் போது பல சமூகப் பிரச்சினைகள் எழுகின்றன. (1.41) சடங்காச்சாரமான  காணிக்கைகளான பிண்டம் மற்றும் நீர்க்கடன் வழங்கப்படாமல் மூதாதையர்களின் ஆவிகள் அவமதிக்கப்படுவதால் குடும்பத்தையும் குடும்பத்தை அழித்தவர்களையும்  நரகத்துக்குக் கொண்டு செல்கிறது. (1.42) தங்கள் குடும்பத்தை அழிப்போரின் சமூக ஒழுங்கு மற்றும் குடும்ப மரபுகள் என்ற நிரந்தரப் பண்புகள் ஒழுக்கக்கேடு என்னும் பாவச்செயலால் சிதைக்கப்படுகின்றன. (1.43) தங்கள் குடும்ப மரபுகள் அழிக்கப்பட்டவர்கள் நீண்ட காலம் நரகத்தில் உறைவார்கள் என்று நாம் கேட்டு வருகிறோமே, கிருஷ்ணா. (1.44)

காலங்கள் கடினமாகும் போது, வலிமையானவர்கள் கூட ஏமாற்றப்படலாம்

ஐயகோ! ராஜ்யபார இன்பமெனும் பேராசையால் நாம் நமது உறவினர்களைக் கொல்வதாகிய பாவத்தைச் செய்ய ஆயத்தமாக இருக்கிறோம். (1.45) நான் நிராயுதபாணியாக நிற்கும் போதும் எதிர்த்து தாக்காமல் இருக்கும் போதும் திருதராஷ்ட்டிரரின் புதல்வர்கள் போரில் தங்கள் ஆயுதங்களால் என்னைக் கொன்றுவிட்டால் அது எனக்கு நன்றாக இருக்கும். (1.46) சஞ்சயன் கூறினான்: போர்க் களத்தில் இவற்றை எல்லாம் கூறிவிட்டு தனது வில்லையும் அம்பையும் பக்கத்தில் வைத்துவிட்டு, அர்ஜுனன் ரதத்தின் இருக்கையில் தன் மனதில் துன்பம் நிறைந்தவனாக அமர்ந்துவிட்டான். (1.47)

2. ஆழ்நிலை அறிவு

சஞ்சயன் கூறினான்: பரிவுணர்வாலும் துன்பத்தாலும் நிறைந்திருந்த அர்ஜுனனின் கண்கள் கண்ணீரால் நிரம்பித் தாழ்ந்திருந்தன. அவனிடம் கிருஷ்ண பகவான் பின்வரும் வார்த்தைகளைக் கூறினார். (2.01) உன்னதமான பகவான் கூறினார்: இந்தக் கட்டத்தில் உனக்கு இந்த மனமுறிவு வந்தது எவ்வாறு? உன்னத மனமும் செயல்களும் கொண்ட ஒருவனுக்கு இது பொருத்தமானது அல்லவே. இது இழிவானது.   அர்ஜுனா, இது ஒருவனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லாது. (2.02) அர்ஜுனா, ஒரு கோழையாக மாறாதே. ஏனெனில் அது உனக்குத் தகாது. இந்த உன்னுடைய உள்ளத்தின் சாதாரண பலவீனத்தைப் புறந்தள்ளிவிட்டு, அர்ஜுனனே, போருக்குப் புறப்படு. (2.03)

அர்ஜுனன் போருக்கு எதிராகப் பேசுகிறான்

அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா, என் வணக்கத்திற்கு உரிய பீஷ்மரையும் துரோணரையும் அம்புகளால் போரில் எவ்வாறு நான் தாக்குவது? (2.04) இந்த உன்னத குருமார்களைக் கொன்று அவர்களது இரத்தம் தோய்ந்த சொத்தையும் இன்பங்களையும் அனுபவிப்பதை விட நான் இந்த உலகில் பிச்சை எடுத்துப் பிழைப்பது மேலான காரியமாக இருக்கும். (2.05) சண்டை இடுவது அல்லது விட்டு விலகுவது என்ற இரண்டில் எது நன்மை தரும் என்று நமக்கு தெரியவில்லை. நாம் அவர்களை வெல்வோமா அல்லது அவர்கள் நம்மை மேற்கொள்வார்களா என்பதும் நமக்கு தெரியவில்லை. நமக்கு முன்னால் நிற்கும் திருதராஷ்ட்டிரரின் புதல்வர்களைக் கொன்றுவிட்டு நாம் வாழவும் விருப்பப்பட மாட்டோம். (2.06)

     இரக்கத்தால் ஏற்படும் பலவீனத்தால் என் உணர்வுகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. கடமையைப் (தர்மம்) பற்றி என் மனம் குழப்பம் அடைந்துவிட்டது. எனக்கு எது நல்லது என்பதைப் பற்றி எனக்கு நீ திட்டவட்டமாக உரைப்பாயாக என்று நான் வேண்டுகிறேன். நான் உன் சீடன். உன்னிடம் யார் அடைக்கலம் புகுந்துள்ளார்கள் என்று எனக்கு போதிப்பாயாக (2.07) இந்த உலகத்தில் யாரும் எதிர்க்க முடியாத மற்றும் வளமான ராஜ்யத்தை அடைவது அல்லது தேவர்களை அடக்கி ஆள்வது ஆகிய யாதொன்றும் என் உணர்வுகளை உலரச் செய்யும் துக்கத்தைத் தீர்க்காது என்று உணர்கிறேன். (2.08) சஞ்சயன் கூறினான்: ராஜாவே, பகவான் கிருஷ்ணனிடம் இவ்வாறு கூறிவிட்டு, பராக்கிரமசாலியான அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கூறினான்: நான் போரிட மாட்டேன். அவன் மௌனமானான். (2.09) அரசனே, பகவான் கிருஷ்ணன், புன்னகைப்பது போல், இரு படைகளுக்கும் இடையில், துயரமுற்ற அர்ஜுனனிடம் இந்த வார்த்தைகளைக் கூறினான். (2.10)

கீதா உபதேசங்கள் தொடங்குகின்றன

உன்னதமான பகவான் கூறினார்: துயரத்திற்குத் தகுதி அற்றவர்களுக்காக நீ துயரம் அடைகிறாய்;ஆனாலும் ஞான வார்த்தைகளைப் பேசுகிறாய். ஞானி வாழ்பவனுக்காகவோ இறந்துபோனவனுக்காகவோ துயரப்படுவதில்லை. (2.11) முடிமன்னர்களான நீயோ அல்லது நானோ இல்லாமல் இருந்த ஒரு காலம் இருந்தது இல்லை அல்லது எதிர்காலத்தில் அப்படி ஒரு காலம் இருக்கப்போவதும் இல்லை. (2.12) வாழும் பண்புரு (ஆத்மா, ஜீவன், ஜீவாத்மா) ஒரு பிள்ளைப்பருவ உடல், ஓர் இளமை உடல், மற்றும் ஒரு முதுமை உடலை இந்த வாழ்வில் அடைகிறது. இதுபோலவே, இறப்புக்குப் பின் அது இன்னொரு உடலை அடைகிறது. ஞானிகள் இதனால் ஏமாற்றப்படுவதில்லை. (15.08 ஐயும் பார்க்கவும்) (2.13) உணர்வுகள், உணர்வைத் தூண்டும் பொருட்களுடன் தொடர்பு கொள்ளும்போது வெப்பம் மற்றும் குளிர், வலி மற்றும் இன்பம் என்ற உணர்வுகளை உருவாக்குகிறது. இவை மாறுபவை மற்றும் நிரந்தரமற்றவை. ஆகவே, அர்ஜுனா, அவற்றை பொறுத்துக்கொள்ள கற்றுக்கொள், (2.14) ஏனெனில் ஒரு அமைதியான நபர்இந்த புலனுகர்வுப் பொருட்களால் பாதிக்கப்படாதவர் மற்றும் வலியிலும் இன்பத்திலும் நிலையாக இருப்பவர்நித்தியத்திற்குத் தகுதியுடையவர் ஆகிறார், அர்ஜுனா. (2.15)

ஆன்மா நித்தியமானது, உடல் நிலையற்றது

புலனாகாத உயிர் (சத், ஆத்மா) நித்தியமானது, மேலும் இந்தப் புலனாகும் உலகம் (பௌதிக உடல் உட்பட) நிலையற்றது. இவை இரண்டின் உண்மை சத்திய முனிவர்களால் உறுதியாகப் பார்க்கப்பட்டன. (2.16) அண்டம் முழுவதும் வியாபித்து நிற்கும் உயிர் (ஆன்மா) அழிவற்றது.  அழிவற்ற உயிரை யாராலும் அழிக்க முடியாது. (2.17) நித்திய, பிறழாத, அறிய முடியாத ஆன்மாவின் உடல் அழியக் கூடியது. அர்ஜுனா, ஆகவே, போரிடு. (2.18) ஆன்மா அழிப்பது என்று எண்ணும் ஒருவர் மற்றும் அன்மா அழிக்கப்பட்டது என்று எண்ணும் ஒருவர் ஆகிய இருவருமே அறியாதவர்கள் ஆவர். ஏனெனில் ஆன்மா கொல்வதும் இல்லை கொல்லப்படுவதும் இல்லை. (2.19) ஆன்மா பிறப்பதுமில்லை அல்லது அது ஒருபோதும் இறப்பதும் இல்லை. அது இருப்புக்கு வருவதுமில்லை இல்லாமல் போவதும் இல்லை. அது பிறக்காதது, நித்தியமானது, மற்றும் முதன்மையானது. உடல் அழிக்கப்படும் போது ஆன்மா அழிவதில்லை. (2.20) அர்ஜுனா, ஆன்மா அழிக்க முடியாதது, நித்தியமானது, பிறக்காதது, மற்றும் பிறழ்ச்சி அடையாதது என்று அறிந்திருக்கும் ஒரு நபர் எவ்வாறு ஒருவரைக் கொல்ல முடியும் அல்லது ஒருவரைக் கொல்வதற்கு காரணமாக இருக்க முடியும்? (2.21)

மரணமும் ஆன்மாவின் மறுஜனனமும்

ஒரு நபர் பழைய ஆடைகளைக் களைந்துவிட்டுப் புது ஆடைகளை அணிவது போல வாழும் பண்புறு பழைய உடலை விட்டுவிட்டு புது உடலைப் பெறுகிறது. (2.22) இந்த ஆன்மாவை ஆயுதங்கள் வெட்டாது, நெருப்பு எரிக்காது, நீர் அதை நனைக்காது மற்றும் காற்று அதை உலரவைக்க முடியாது. ஆன்மாவை வெட்டவோ, எரிக்கவோ. நனைக்கவோ உலர்த்தவோ முடியாது. அது நிரந்தரமானது, எல்லாவற்றையும் ஊடுறுவி நிற்பது, மாற்றமில்லாதது, நகர்த்தமுடியாதது மற்றும் பழமையானது. (2.23-24). ஆன்மா விளக்க முடியாதது, புரிந்துகொள்ள முடியாதது மற்றும் மாற்றமில்லாதது என்று கூறப்படுகிறது.

ஆன்மா இப்படிப்பட்டது என்று அறிந்த பின்னர் நீ துயரமடையக் கூடாது. (2.25) இந்த வாழும் பண்புரு அல்லது உடல் பிறப்பெடுத்து நிரந்தரமாக இறக்கிறது என்று நினைத்தாலும் கூட, அர்ஜுனா, நீ இது போல துயரப்படக்கூடாது. ஏனெனில். பிறந்த ஒருவருக்கு இறப்பு உறுதி மேலும் இறக்கும் ஒருவருக்கு பிறப்பு உறுதியானது. ஆகவே தவிர்க்க முடியாத ஒன்று குறித்து நீ புலம்பக் கூடாது. (2.26-27) எல்லா உயிர்களும், அர்ஜுனா, வெளிப்படுத்தப்படாததுநமது பௌதிகக் கண்களுக்குப் புலனாகாததுபிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும். அவை பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் மட்டும் வெளிப்படுகின்றது. அதைப்பற்றி துயரப்பட என்ன  இருக்கிறது? (2.28) சிலர் இந்த ஆன்மாவை ஓர் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர், சிலர் அதை அதிசயமானதாக விவரிக்கின்றனர் மற்றும் பிறர் அதை ஒரு ஆச்சரியம் என கேட்கின்றனர். அதைப் பற்றி கேள்விப்பட்டாலும் ஒரு சிலரே அதை அறிவார்கள் (2.29) அர்ஜுனா, உடலில் தங்கி இருக்கும் ஆன்மா நித்தியமாக அழிக்க முடியாதது. ஆகவே, நீ எந்த உடலுக்காகவும் புலம்பக் கூடாது. (2.30)

ஒரு சத்திரியனான அவனது கடமையைப் பற்றி அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணா நினைவூட்டுகிறார்

ஒரு சத்திரியனாக உனது கடமையை கருதும்போது நீ தடுமாறக் கூடாது. ஏனெனில் ஒரு அறப் போரை விட ஒரு சத்திரியனுக்கு சிறப்பானது வேறொன்றுமில்லை. (2.31). அர்ஜுனா, அதிர்ஷ்டமுள்ள சத்திரியர்களுக்கு மட்டுமே தேடாத ஒரு போருக்கான வாய்ப்பு கிடைக்கிறது. அது சொர்க்கத்துக்கான ஒரு திறந்த வாசல். (2.32) இந்த அறப்போரில் நீ போரிடவில்லை என்றால், நீ உன் கடமையில் தவறுகிறாய், உன் புகழை இழக்கிறாய் மற்றும் பாவத்தைச் சம்பாதிக்கிறாய். (2.33) உன் இகழ்ச்சியைப் பற்றி மக்கள் என்றென்றும் பேசுவார்கள். மதிப்புடையவர்களுக்கு மதிப்பிழப்பு மரணத்தை விட மோசமானது. (2.34) நீ போரில் இருந்து அச்சத்தின் காரணமாக விலகி விட்டாய் என்று பெரும் போர்வீரர்கள் நினைப்பார்கள். உன்னை மிகவும் மதிப்பவர்கள் உன்னை இகழுவார்கள் (2.35) உன் எதிரிகள் உன்னைச் சொல்ல முடியாத சொற்களால் பேசுவார்கள் மற்றும் உன் திறமை குறித்து இகழ்வார்கள். இதைவிட வேதனை தருவது உனக்கு எதுவாக இருக்க முடியும்? (2.36) நீ கொல்லப்பட்டால் (கடமை வழி) சொர்க்கத்துக்குச் செல்வாய், அல்லது வெற்றி பெற்றால் உலகில் ஒரு பேரரசை ஆண்டு மகிழ்வாய். ஆகவே, அர்ஜுனா, போரிடும் தீர்மானத்தோடு எழுவாயாக. (2.37) இன்பத்தையையும் வலியையும், லாபத்தையும் இழப்பையும் மற்றும் வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாக எண்ணி உன் கடமையைச் செய்வாயாக. இந்த வகையில் உன் கடமையைச் செய்யும் போது நீ பாவம் செய்ய மாட்டாய். (2.38)

சுயநலமற்ற சேவையான கர்ம யோகத்தின் முக்கியத்துவம்

அர்ஜுனா, ஆழ்நிலை அறிவின் ஞானம் உனக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது சுயநலமற்ற சேவையான கர்ம யோகத்தைப் பற்றி கேட்பாயாக. இதை நீ பெற்றால் செயல் (கர்மம்) என்னும் அடிமைத்தனத்தில் இருந்து உன்னை நீயே விடுவித்துக் கொள்வாய். (2.39) கர்ம யோகத்தில் ஒரு முயற்சியும் எப்போதும் இழக்கப்படுவதில்லை. மேலும் மோசமான விளைவுகள் எதுவும் இல்லை. இந்தத் துறையில் பெறும் ஒரு சிறு பயிற்சியே ஒருவனை பிறப்பு இறப்பு என்னும் பெரும் பயத்தில் இருந்து பாதுகாக்கும். (2.40) அர்ஜுனா, ஒரு கர்ம யோகி கடவுளை அறிதலுக்கான ஓர் உறுதியான தீர்மானமானத்தோடு இருக்கிறான். ஆனால் உழைப்பின் பலனை அனுபவிக்க ஒருவன் ஆற்றும் செயல் முடிவற்றதும் பல கிளைகள் கொண்டதும் ஆகும். (2.41)

 

வேதங்கள் பொருள் மற்றும் ஆன்மீக அம்சங்கள் ஆகிய இரண்டையும் பற்றி கூறுகின்றன

வேதங்களின் உண்மையான நோக்கத்தை அறியாமல், பரலோக கதியை அடைவது ஒன்றிற்கான சடங்காச்சாரங்களைத் தவிர வேறு எதுவும் இல்லாதது போல

தவறாக வழிநடத்தப்பட்ட ஒருவன் வேதங்களின் இசைநயமான ஓதுதலில் மகிழ்ச்சி அடைகிறான். அர்ஜுனா, சிந்தித்துப்பார். (2.42) அவர்கள் பொருள் ஆசையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளார்கள். பரலோக கதியை அடைவதுதான் வாழ்க்கையின் மிக உயர்ந்த இலக்காக அவர்கள் கருதுகின்றனர். அவர்கள் செல்வத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் சிறப்பான சடங்குகளைச் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கிரியைகளின் விளைவே மறுபிறவி. (2.43) இன்பம் மற்றும் அதிகார வேட்கையில் ஈடுபாடு கொண்டிருப்பவர்களின் மனங்களில் சுய அறிதல் பற்றிய உறுதியான தீர்மானம் உருவாவதில்லை. மேலும் அவர்களது கணிப்புகள் இதுபோன்ற சடங்காச்சாரங்களால் மறைக்கப்படுகின்றன. (2.44) பொருள் இயல்பு பற்றிய மூன்று முறைகள் அல்லது குணங்கள் குறித்து வேதங்களின் ஒரு பகுதி கூறுகின்றது. எதிரிடைகளின் இணைகளில் இருந்து விடுபடுதல்; அடைவது மற்றும் காக்கும் சிந்தனைகளில் சமநிலையாகவும் அக்கறையின்றியும் இருத்தல். இந்த மூன்று நிலைகளில் இருந்து உயர்ந்து நில். சுய அறிவு உடயவனாக இரு, அர்ஜுனா. (2.45) சுய அறிதல் அடைந்த ஒருவனுக்கு, ஒரு மாபெரும் ஏரி இருக்கும் போது வேதங்கள் ஒரு சிறு நீர்தேக்கம் போன்ற பயனைக் கொண்டதே. (2.46)

கர்மயோகத்தின் கொள்கையும் நடைமுறையும்

உனக்குரிய கடமையின் மேல் மட்டுமே உனக்குக் கட்டுப்பாடு உள்ளது. ஆனால் விளைவுகளின் மேல் கட்டுப்பாடோ உரிமையோ இல்லை. செயலின் பலன் உனது நோக்கமாக இருக்கக் கூடாது. ஒருபோதும் நீ செயலற்றவனாக இருக்கக்கூடாது. (2.47) அர்ஜுனா, உன் முழுத்திறனுக்கு ஏற்ப உன் கடமையைச் செய். மனம் பகவானோடு ஒன்றி இருக்கட்டும். பலனின் மேல் உள்ள கவலை மற்றும் சுயநல பிணைப்பை விட்டுவிடு. மேலும் வெற்றி அல்லது தோல்வி இரண்டிலும் அமைதியாக இரு. மன அமைதியே கர்ம யோகம் என அழைக்கப்படுகிறது. (2.48) சுயநலமற்ற சேவை அல்லது கர்ம யோகத்தோடு ஒப்பிடும்போது சுயநல நோக்கத்தோடு செய்யப்படும் செயல்கள் மிகவும் கீழானவை ஆகும். ஆகவே, அர்ஜுனா, ஒரு கர்ம யோகியாய் இரு. தங்கள் செயலின் பலனை அனுபவிக்க வேண்டும் என்று மட்டும் செயலாற்றுகிறவர்கள் உண்மையில் மகிழ்ச்சியறவர்களாக இருக்கிறார்கள் (ஏனெனில் எவருக்கும் பலன்களின் மேல் கட்டுப்பாடு இல்லை). (2.49)

     ஒரு கர்ம யோகி இந்த வாழ்கையிலேயே தீமை மற்றும் நன்மை ஆகிய இரண்டில் இருந்தும் சுதந்திரமாகி விடுகிறான். ஆகவே, கர்ம யோகத்திற்காக முயற்சி செய். பலனின் மேல் உள்ள பற்றை அகற்றி ஒருவன் தன் முழுத் திறமையோடும் செயலாற்றுவதே கர்ம யோகம். (2.50) அனைத்து செயல்களின் பலன்களின் மேல் உள்ள சுயநலப் பற்றை அறுத்து ஞானமுள்ள கர்ம யோகிகள் மறுபிறப்பு என்ற கட்டில் இருந்து விடுபட்டு ஒரு பேரின்ப தெய்வீக நிலையை அடைகின்றனர். (2.51) உன் அறிவு, குழப்பத் திரையை முற்றிலுமாக கிழிக்கும் போது வேதங்களில் இருந்து நீ எதைக் கேட்டிருக்கிறாயோ மற்றும் எதை கேட்க வேண்டுமோ  என்பது குறித்து கவலையற்றவன் ஆகிறாய். (2.52)

     வேதங்களின் மாறுபாடான எண்ணங்கள் மற்றும் சடங்காச்சாரமான கொள்கைகளால் உன் அறிவு குழப்பம் அடையும் போது, பரம்பொருள் மீது உன் கவனத்தை நிலையாகவும் உறுதியாகவும் செலுத்து. அப்போது சமாதி நிலையில் நீ பரம்பொருளோடு ஐக்கியமாவாய். (2.53) அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா, அறிவு நிலையாக இருக்கும் அறிவொளி பெற்ற ஒருவனின் அடையாளங்கள் எவை? நிலையான அறிவுடையவன் எவ்வாறு பேசுகிறான்? அத்தகையவன் எவ்வாறு அமர்கிறான் மற்றும் நடக்கிறான்? (2.54)

சுய அறிவு பெற்றவனின் அடையாளங்கள்

புனிதமான பகவான் கூறினார்: அர்ஜுனா, ஒருவன் எப்போது மனதின் ஆசைகளில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு பரமானந்தத்தினால் பிரம்மத்துடன் திருப்தி அடைகிறானோ அப்போதே அவன் அறிவொளி பெற்றவன் என்று அழைக்கப்படுகிறான். (2.55) கவலையால் சஞ்சலப்படாத மனம் கொண்டு, இன்ப வேட்கை கொண்டலையாமல், பந்தம் மற்றும் கோபத்தில் இருந்து முற்றிலும் விடுபட்ட ஒருவனே நிலையான அறிவுடைய முனிவன் என்று அழைக்கப்படுகிறான். (2.56) எதனோடும் பற்றில்லாமல் இருப்பவர்கள், விரும்பும் முடிவுகளைப் பெறும்போது பெருமைப்படாமலும், விரும்பாத முடிவுகளால் துயரமடையாமலும் இருக்கிறவர்களின் அறிவே நிலையானது என்று கருதப்படுகிறது.  (2.57) தனது பாதுகாப்பிற்காக தனது அவயவங்களை ஓட்டுக்குள் இழுத்துக்கொள்ளும் ஆமையைப் போல் புலன்களைத் தூண்டும் பொருட்களிடம் இருந்து தன் புலன்களை அடக்கிக் கொள்ள ஒருவனுக்கு முடியும்போது அத்தகைய மனிதனின் அறிவே நிலையானது என்று கருதப்படுகிறது.  (2.58) ஒருவன் புலன் இன்பத்தில் இருந்து விலகும்போது, புலனின்ப விருப்பம் மங்கிப் போகிறது, ஆனால் புலனின்ப இச்சை இருக்கவே செய்கிறது. பரம்பொருளை அறிந்த ஒருவனுக்கு இந்த இச்சையும் மறைந்துபோகிறது. (2.59)

கட்டுப்படுத்தாத புலன்களின் அபாயங்கள்

  அர்ஜுனா, அமைதியற்ற புலன்கள் முழுமையை நாடும் ஒரு ஞானமுள்ள மனிதனின் மனதையும் பலவந்தமாக வழிவிலகச் செய்கிறது. (2.60) புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த உடன் அன்பெண்ணத்துடன் ஒருவன் தனது மனதை என் மேல் நிலைப்படுத்த வேண்டும். ஒருவனுடைய புலன்கள் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் போது அவனுடைய அறிவும் நிலைப்படுகிறது. (2.61) புலனைத் தூண்டும் பொருட்களைப் பற்றி எண்ணும்போது ஒருவனுக்கு புலனுகர்வுப் பொருட்கள் மீது பற்று ஏற்படுகிறது. புலனுகர்வுப் பொருட்களின் மேல் உள்ள பற்று அவற்றின் மேல் உள்ள விருப்பத்தில் இருந்து வருகிறது, மேலும் விருப்பங்கள் நிறைவேறாமையில் இருந்து கோபம் எழுகிறது. (2.62) மாயை அல்லது பொல்லாத எண்ணங்கள் கோபத்திலிருந்து எழுகின்றன. மனம் மாயையால் மனம் தடுமாற்றம் அடைகிறது. பகுத்தறிவு சிதையும் போது ஒருவன் சரியான பாதையில் இருந்து விலகுகிறான். (2.63)

புலன் கட்டுப்பாடு மற்றும் சுய அறிதலினால் அமைதியையும் மகிழ்ச்சியையும் அடைதல்

கட்டுப்பாடுள்ள ஒருவன், விருப்பு வெறுப்பற்ற கட்டுக்குள் இருக்கும் புலன்களால் புலனுகர் பொருட்களை அனுபவிக்கும் போது சாந்தி பெறுகிறான். (2.64) சாந்திநிலை அடையும் போது அனைத்துத் துயரங்களும் அழிக்கப்படுகின்றன. இத்தகைய சாந்தி பெற்ற மனிதனின் அறிவு விரைவில் முற்றிலும் நிலையானதாக மாறி பரம்பொருளோடு ஐக்கியமாகிறது. (2.65) பரம்பொருளோடு ஐக்கியம் ஆகாதவர்களுக்கு சுய அறிதலும் இருப்பதில்லை சுய புலன் உணர்வும் இருப்பதில்லை. சுய புலன் உணர்வு இல்லாதவிடத்து அமைதி இருக்காது. அமைதி இல்லை என்றால் மகிழ்ச்சி இருக்காது. (2.66)

     அலையும் புலன்களால் மனம் கட்டுப்படுத்தப்படும்போது, அது அதன் ஆன்மீகக் கரையான தன் இலக்கில் இருந்து புயலால் கொண்டுபோகப்படும் படகைப் போல அறிவைக் கொண்டு போய்விடுகிறது. (2.67) ஆகவே, அர்ஜுனா, புலனுகர் பொருட்களில் இருந்து புலன்கள் முற்றிலுமாக விலகும் போது அறிவு நிலையானதாக மாறுகிறது. (2.68) சுய கட்டுப்பாடுடைய ஒரு யோகி, மற்ற யாவருக்கும் இரவாக இருக்கும் போது விழிப்போடு இருக்கிறான். (2.69) (பெரும்பாலான மக்கள் உறங்கி இரவில் மாயையான உலகில் கனவுத் திட்டங்களை வகுக்கும்போது, இந்த உலகில் வாழ்ந்து கொண்டே உலகில் இருந்து விடுபட்டு ஒரு யோகி விழித்திருக்கிறான்.)

     ஓர் ஆற்றின் நீர் எந்தவிதத் தொந்தரவும் செய்யாமல் முழுக் கடலில் கலப்பது போல, அனைத்து ஆசைகளையும் எந்த வித மனக் கலக்கமும் இன்றி மனதோடு கரையும் போது ஒருவன் அமைதியை அடைகிறான். பௌதிகப் பொருள் மேல் ஆசை கொண்டவன் அமைதியை ஒருநாளும் அடைய முடியாது. (2.70) ஒருவன் அனைத்து ஆசைகளையும் துறந்து ஏக்கத்தையும்நான்மற்றும்எனதுஎன்ற உனர்வையும் விட்டு விலகும் போது அமைதியை அடைகிறான். (2.71) அர்ஜுனா, இதுவே உன்னத உணர்வு (பிரம்மம்) மன நிலை. இந்நிலையை அடைந்தவன் மாயைக்கு ஆட்பட மாட்டான். இந்த நிலையை ஒருவன் தன் வாழ்க்கையின் இறுதியில் அடைந்தாலும் கூட பிரம்மநிர்வாணத்தை அடைகிறான் (அல்லது முழுமையோடு இரண்டறக் கலக்கிறான்). (2.72)

3.    கர்ம யோகத்துக்கான பாதை

அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா, செயலை விட ஆழ்நிலை அறிவை அடைவது சிறந்தது என்று நீ கருதினால், ஏன் இந்தக் கொடூரமான போரில் நான் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறாய். முரண்பட்ட வார்த்தைகளை வெளிப்படையாகக் கூறி நீ என் மனதைக் குழப்புவதைப் போல்  தோன்றுகிறது. நான் பரம்பொருளை அடைவதற்கு உறுதியான ஒன்றை எனக்கு நீ கூறுவாயாக. (3.01-02) மேலான பகவான் கூறினார்: அர்ஜுனா, இந்த உலகில் என்னால் கடந்த காலத்தில் ஆன்மீக ஒழுக்கத்திற்கு ஒரு இருவழிப் பாதை கூறப்பட்டதுசிந்தனைக்கான சுய அறிவுப் பாதை (ஞான யோகம்), மற்றும் செயல்படுவதற்கான சுயநலமற்ற செயல் (சேவை, கர்ம யோகம்). (3.03) செயலைச் செய்யாது இருப்பதன் மூலம் ஒருவன் கர்மப் பற்றில் இருந்து விடுபட முடியாது. செயலை விட்டுவிடுவதன் மூலம் ஒருவன் முழுமை அடைய முடியாது. (3.04) ஏனெனில் ஒருவனும் செயலை ஒரு கணம் கூட விட்டுவிட முடியாது. உண்மையில் தவிர்க்க முடியாத வகையில் இயற்கை ஆற்றல்களால் அனைவரும் செயலுக்குள் தள்ளப்படுகின்றனர். (3.05)  ஏமாற்றப்படுபவர்கள், தங்கள் செயல் உறுப்புகளை அடக்குகின்றனர். ஆனால் மனதால் புலன் இன்பத்தில் திளைக்கின்றனர். இவர்கள் கபடதாரிகள் என அழைக்கப்படுகின்றனர். (3.06)

ஏன் ஒருவன் பிறருக்கு சேவைசெய்ய வேண்டும்?

அர்ஜுனா, பயிற்சி பெற்ற தூய மனதாலும் அறிவாலும் புலன்களை அடக்கி, செயல் உறுப்புகளை சுயநலமற்ற சேவைக்காகப் பயன்படுத்துகிறவன் மேலானவன். (3.07) செய்யவேண்டிய உன் கடமைகளைச் செய். ஏனெனில் சோம்பேறித்தனமாக இருப்பதை விட செயலாற்றுதல் உண்மையில் சிறந்தது. ஏனெனில் உழைப்பில்லாமல் உன் உடலைப் பேணுவது கூட சாத்தியமற்றது. (3.08) மனிதர்கள் செயலால் கட்டுண்டவர்கள். ஆனால் அவை சுயநலமற்ற சேவையாக ஆற்றப்படுவதில்லை. ஆகவே, அர்ஜுனா, செயலின் பலன்களில் கொண்டுள்ள சுயநல பந்தத்தில் இருந்து விடுபட்டு, உன்னுடைய கடமையை எனக்கான சேவையாகத் திறமையோடு செய். (3.09)

ஒருவருக்கொருவர் உதவிசெய்வதே படைத்தவரின் முதல் கட்டளை

படைப்பவரான பிரம்மா, ஆதியில் மனிதனை சுயநலமற்ற சேவையுடன் படைத்து (சேவை, வேள்வி, தியாகம்) பின் கூறினார்: வேள்வியால் நீ செழிப்படைவாய், மேலும் வேள்வி உன் அனைத்து விருப்பங்களையும் நிறைவுசெய்யும். (3.10) வானை ஆள்பவர்களை (தேவர்கள்) சுயநலமற்ற சேவையால் போஷித்தால் அவர்கள் உன்னை போஷிப்பார்கள். இவ்வாறு ஒருவருக்கொருவர் போஷிக்கும் போது நீ உன் உன்னத இல்க்கை அடையலாம். (3.11) வானை ஆள்பவர்கள், சுயநலமற்ற சேவையால் போஷிக்கப்பட்டு, நீ விரும்பும் பொருட்களை வழங்குவார்கள்.  தேவர்களின் கொடைகளை அனுபவித்துவிட்டுப் பதிலுக்கு ஒன்றையும் வழங்காமல் இருப்பவன் உண்மையில் ஒரு திருடன் ஆகும். (3.12) சுயநலமற்ற சேவையில் மீந்ததை உண்ணும் நீதிபரன் எல்லா பாவங்களில் இருந்தும் நிவிர்த்தி அடைகிறான். ஆனால் தனக்காக மட்டுமே உணவை சமைக்கும் இழிதகையாளன் (முதலில் எனக்குப் படைக்காமல் அல்லது பிறரோடு பகிர்ந்து கொள்ளாமல்) உண்மையில் பாவத்தையே உண்கிறான். (3.13) உயிர் வாழ்வன உணவு தானியங்களில் இருந்து பிறந்தவை; தானியங்கள் மழையால் உற்பத்தி செய்யப்படுகின்றன; கடமை சுயநலமற்ற சேவையாக ஆற்றப்படும்போது மழை பொழிகிறது (தேவர்கள் தரும் நன்மையாக) (4.32 ஐயும் பார்க்கவும்). வேதங்களில் கடமை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வேதங்கள் பிரம்மத்திடம் (நித்தியமாய் இருப்பது) இருந்து வருகிறது. இவ்வாறு எல்லாவற்றிலும் ஊடுறுவி இருக்கும் பிரம்மம் எப்போதும் சேவையில் உள்ளது. (3.14-15) சுயநலமற்ற கடமையின் (சேவை) மூலம் படைப்பு சக்கரத்தின் இயக்கத்துக்கு துணைநிற்காதவன் மற்றும் புலன் இன்பத்தில் களிப்பெய்துபவனாகிய பாவி வாழ்வதே வீண், அர்ஜுனா. (3.16) நித்தியமாய் இருப்பவனோடு மட்டுமே களிகூர்பவன், நித்தியமாய் இருப்பவனோடு மகிழ்பவன், நித்தியமாய் இருப்பவனோடு நிறைவடைகிறவனாகிய சுய அறிவுடையவனுக்கு கடமை இல்லை. (3.17) இத்தகைய மனிதனுக்கு எது செய்யப்படுகிறதோ அல்லது எது செய்யப்படவில்லையோ அது எதுவாக இருந்தாலும் அதில் ஆர்வம் இல்லை. சுய அறிதலுடைய ஒருவன் யாரையும் (கடவுளைத் தவிர) எதற்காகவும் சார்ந்திருப்பதில்லை. (3.18)

தலைவர்கள் முன்மாதிரியாகத் திகழவேண்டும்

ஆகவே, எப்போதும் உன் கடமையை திறமையோடும் பலனில் எந்த வித சுயநலப் பற்று இல்லாமலும் ஆற்ற வேண்டும். ஏனெனில் பற்றில்லாமல் செயலாற்றும்போது ஒருவன் மேலாம் நிலையை அடைகிறான். (3.19) ஜனக மன்னரும் பிறரும் சுயநல மற்ற சேவையின் (கர்ம யோகம்) மூலமே முழுமையை (அல்லது சுய அறிதலை) அடைந்தனர். உன் கடமையை மக்களுக்கு வழிகாட்டும் நோக்கத்தோடும் சமூகத்தின் அனைத்தும் தழுவிய நன்மைக்காகவும் ஆற்ற வேண்டும். (3.20) சான்றோர் எதுசெய்தாலும் பிறர் அதைப் பின்பற்றுவர். அவர்கள் உருவாக்கும் அளவுகோலை உலகம் பின்பற்றும். (3.21) அர்ஜுனா, மூவுலகத்திலும் (சொர்க்கம், பூமி மற்றும் கீழுலகம்) என்னால் செய்யக் கூடாதது ஒன்றுமில்லை, அல்லது எனக்கு கிடைக்க வேண்டிய எதுவும் எனக்குக் கிடைக்காமலும் இல்லை, ஆனாலும் நான் செயலில் ஈடுபடுகிறேன். (3.22) ஓய்வில்லாமல் நான் செயலில் ஈடுபடவில்லை என்றால், அர்ஜுனா, மக்கள் ஒவ்வொன்றிலும் அதே பாதையைப் பின்பற்றுவார்கள். நான் செயலாற்றவில்லை என்றால் உலகம் அழிந்துபடும். நான் குழப்பத்துக்கும் இந்த மக்களை அனைவரின் அழிவுக்கும் காரணமாகி விடுவேன். (3.23-24) அர்ஜுனா, செயலின் பலனில் பற்றுடன் அறியாமை உடையவர்கள் செயல்புரியும் அதே வேளையில் ஞானிகள் பலன் மேல் பற்றில்லாமல் சமூக நன்மைக்காக செயலாற்ற வேண்டும். (3.25) செயலின் பலனில் பற்றுள்ள அறியாமை கொண்ட மக்களின் மனதை சீர்குலைக்காமல் ஞானிகள் எல்லா வேலைகளையும் திறம்பட சுயநலப் பற்றின்றி செய்து பிறரை ஊக்குவிக்க வேண்டும் (3.29 ஐயும் பார்க்க) (3.26)

எல்லா செயல்களும் இயற்கையின் செயல்களே

எல்லா செயல்களும் இயற்கையின் திறன் மற்றும் ஆற்றலால் செய்யப்படுகின்றன. ஆனால் அறியாமையின் மயக்கத்தால் மக்கள் தாங்கள்தான் செயலை செய்ததாக கருதிக்கொள்ளுகின்றனர். (5.09, 13.29 மற்றும் 14.19 ஐயும் பார்க்கவும்) (3.27) அர்ஜுனா, இயற்கையின் சக்தி மற்றும் செயல் ஆகியவற்றின் பங்கின் உண்மையை அறிந்தவர்கள், இயற்கைதான் தங்கள் கருவிகளை - நமது அவயவங்கள்கொண்டு செயலாற்றுகிறது என்பதை நன்கறிந்து செயலில் பற்றுவைக்க மாட்டார்கள். (3.28) இயற்கையின் மாய ஆற்றலினால் (மாயை) ஏமாற்றப்படுபவர்கள் இயற்கை ஆற்றல்கள் செய்யும் வேலையில் பற்று வைக்கின்றனர். ஞானிகள் அறிவு முழுமை பெறாத அறியாமை கொண்டவர்களின் மனதை தொந்தரவு செய்யக் கூடாது. (3.26 ஐயும் பார்க்கவும்) (3.29) எல்லா செயலையும் எனக்கு அர்ப்பணித்துவிட்டு, ஓர் ஆன்மீக உணர்வுடன், ஆசை, பற்று மற்றும் மன துயரம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு,  நீ உன் கடமையைச் செய். (3.30) இந்த என்னுடைய போதனையைநம்பிக்கையுடன் (அல்லது முழுக் கவனம் மற்றும் உண்மையுடன்) தீமை இல்லாமல் -  எப்போதும் நடைமுறைப் படுத்துபவர்கள் கர்மாவின் கட்டில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். ஆனால் என் போதனையை குறை கூறுபவர்கள் மற்றும் கடை பிடிக்காதவர்களை அனைத்து அறிவையும் அறியாதவர்கள், உனர்வற்றவர்கள் மற்றும் வழிதவறியவர்கள் என்று கருதப்பட வேண்டும். (3.31-32) எல்லா உயிரினங்களும் தங்கள் இயல்பைப் பின்பற்றும். ஞானிகள் கூட தங்களுக்குரிய இயல்பிற்கு ஏற்பவே செயல்படுவர். பின், உணர்வைக் கட்டுப்படுத்தல் என்பதன் மதிப்பு என்ன? (3.33)

முழுமையின் பாதையில் இரு பெரும் தடைக்கற்கள்

புலன்களில் புலனுகர்வுப் பொருட்களின் மேல் உள்ள விருப்பு வெறுப்புகள் தங்கியுள்ளன. இவை உண்மையில் சுய அறிதல் பாதையின் இரு பெரும் தடைக்கற்களாக இருப்பதால் ஒருவன் இந்த இரண்டின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடக் கூடாது. (3.34) ஒருவனின் கீழான இயற்கை செயல்பாடு இயற்கை அல்லாத செயல்பாட்டை விட சிறப்பானதாகும். ஒருவன் தன் இயற்கையான செயலில் ஈடுபடும்போது ஏற்படும் மரணம் பயனுடையதே. இயற்கை அல்லாத செயல் அதிக மனவழுத்தத்தை உருவாக்குகிறது. (18.47 ஐயும் பார்க்கவும்) (3.35)

காமமே பாவத்தின் மூலம்

அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா, விருப்பம் இல்லாமலும் ஒருவரின் சித்தத்துக்கு எதிராக வற்புறுத்தப்பட்டும் ஒருவரை பாவம் செய்யத் தூண்டுவது எது? (3.36) மேலான பகவான் கூறினார்: அது காமமே (அல்லது பொருள் அல்லது புலன் இன்பங்களுக்கான தீவிர ஆசை). வேட்கையினால் பிறக்கும் இது நிறைவேறாத போது கோபமாக மாறுகிறது. காமம் திருப்தியுறாதது மேலும் அது ஒரு பெரும் பேய். இதை எதிரி என்று அறிந்து கொள். (3.37) நெருப்பைப் புகை மூடி இருப்பது போலவும், கண்ணாடியைத் தூசியைப் போலவும், கருவைப் பனிக்குடம் போலவும், சுய அறிதலைக் காமம் மறைக்கிறது. (3.38) அர்ஜுனா, சுய அறிதல், ஞானிகளின் நித்திய எதிரியான இந்தத் திருப்தியுறாத காமம் என்ற நெருப்பால் மூடப்படுகிறது. (3.39) புலன்கள், மனம், மற்றும் அறிவு ஆகியவை காமத்தின் இருப்பிடம் எனக் கூறப்படுகிறது. புலன்கள், மனம், மற்றும் அறிவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்தக் காமம் சுய அறிதலை மறைத்து ஒரு மனிதனை ஏமாற்றுகிறது. (3.40) ஆகவே, அர்ஜுனா, முதலில் புலன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், சுய அறிதலையும் சுய உணர்தலையும் அழிக்கும் பொருளாசை என்ற இந்தப் பேயைக் கொல். (3.41)

காமத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது

உடலை விட புலன்கள் மேலானவை என்று கூறப்படுகிறது; மனம் புலன்களை விட மேலானது; அறிவு மனதை விட மேலானது; மேலும் ஆன்மா அறிவை விட மேலானது. (6.07-08 ஐயும் பார்க்கவும்) (3.42) இவ்வாறு, அறிவை விட ஆன்மா மேலானது என்று அறிந்து, மேலும் அறிவைக் கொண்டு மனதைக் கட்டுப்படுத்தி (அது ஆன்மீக நடத்தைகளால் தூய்மைப்படுத்தப்படுகின்றது), ஒருவன் இந்த வலிய எதிரியான காமத்தைக் கொல்ல வேண்டும். (3.43)

4.    அறிவுடன் துறவுப் பாதை

கர்ம யோகம் ஒரு பழமையான சட்டம்

மேலான பகவான் கூறினார்: கர்ம யோகம் என்ற இந்த நேர் செயல் என்னும் நித்திய அறிவியலை நான் விவஸ்வானுக்குப் போதித்தேன். விவஸ்வான் அதை மனுவுக்குப் போதித்தான். மனு அதனை இக்ஷவாகுவுக்குக் கற்பித்தான். இவ்வாறு வழிவழியாக அளிக்கப்பட்ட இதைப் புனித ராஜாக்கள் அறிந்திருந்தனர் (கர்ம யோகம்). நீண்ட காலத்திற்குப் பின்னர் கர்ம யோகம் என்னும் அறிவியல் இந்த உலகத்தில் இருந்து மறைந்து போனது. நீ என் உண்மையான சீடனும் நண்பனுமாக இருப்பதால் இன்று நான் உனக்கு இந்தப் பழமையான அறிவியலை விளக்கி இருக்கிறேன். உண்மையில் கர்ம யோகம் ஒரு மேலான இரகசியம் ஆகும்.  (4.01-03) அர்ஜுனன் கூறினான்: நீ பின்னர் பிறந்தவன், ஆனால் விவஸ்வான் பழங்காலத்தில் பிறந்தவர். படைப்பின் துவக்கத்தில் நீ கர்ம யோகத்தை போதித்தாய் என்பதை நான் எவ்வாறு புரிந்து கொள்வது? (4.04)

கடவுள் அவதாரத்தின் நோக்கம்

மேலான பகவான் கூறினார்: அர்ஜுனா, நீயும் நானும் பல பிறப்புகளை எடுத்துவிட்டோம், நான் அவற்றை எல்லாம் நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால் உனக்கு ஞாபகம் இல்லை. (4.05) நான் நித்தியமானவன், பிறழ்ச்சியடையாதவன் மேலும் எல்லாவற்றிற்கும் பகவான். இருப்பினும் என் தெய்வீக நிலை ஆற்றலை (யோக மாயை) பயன்படுத்தி எனது சொந்தப் பொருள் தன்மையைக் கட்டுப்படுத்தி நான் என்னை வெளிப்படுத்துகிறேன். (10.14 ஐயும் பார்க்கவும்) (4.06) எப்போதெல்லாம தர்மம் (நீதி) குறைந்து அதர்மம் (நீதியற்றநிலை) மேலோங்குகிறதோ, அர்ஜுனா, அப்போது என்னை நானே வெளிப்படுத்துகிறேன்.  நன்மையைக் காக்கவும், துன்மார்க்கனை மாற்றவும், உலக ஒழுங்கை உருவாக்கவும் (தர்மம்) அவ்வப்போது  நான் தோன்றுகிறேன். (4.07 – 08) அர்ஜுனா, என்னுடைய இந்தக் கடந்துவரும் தோற்றத்தையும் செயல்பாடுகளையும் (படைப்பு, பராமரிப்பு மற்றும் அழித்தல்) உண்மையாக புரிந்துகொள்ளும் ஒருவன் மேலான இடத்தை அடைகிறான் மேலும் இந்த உடலை விட்டபின் மீண்டும் பிறப்பதில்லை. (4.09) என்னில் அடைக்கலம் புகுந்து, என் சிந்தனைகளில் முற்றிலும் கிரகிக்கப்பட்டு மேலும் சுய அறிதல் என்னும் நெருப்பால் தூய்மையாக்கப்பட்டு  பலர் பற்று, பயம், கோபம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு முக்தி அடைந்திருக்கிறார்கள். (4.10)

வழிபாடு மற்றும் பிரார்த்தனையின் பாதை

எந்தெந்த நோக்கத்திற்காக மக்கள் என்னை வழிபட்டாலும் நான் அதற்கேற்றபடி அவர்களுடைய விருப்பங்களை நிறைவு செய்கிறேன். மக்கள் என்னை வெவ்வேறு நோக்கங்களுக்காக வழிபடுகின்றனர். (4.11) இந்த உலகில் தங்கள் செயலில் வெற்றியை நாடுகிறவர்கள் தெய்வீக ஆட்சியாளர்களை வழிபடுகின்றனர். செயல் வெற்றி விரைவாக இந்த மனிதகுல உலகில் வருகிறது. (4.12) தகுதி மற்றும் வேலையின் அடிப்படையில்மனித சமூகத்தில் நான்கு பிரிவுகள்  என்னால் உருவாக்கப்பட்டன. இந்த வேலைப் பிரிவு அமைப்பை உருவாக்கியது நான்தான் என்றாலும், நான் எதையும் செய்வதில்லை மேலும் நான் நித்தியமானவன். (18.41 ஐயும் பார்க்கவும்) (4.13) செயல் அல்லது கர்மம் என்னைப் பிணைப்பதில்லை. ஏனெனில் செயல்களின் பலனில் எந்த பற்றும் இல்லை. இந்த சத்தியத்தை முழுவதுமாகப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துகிறவனும் கர்மத்தால் பிணைக்கப்படுவதில்லை. (4.14) விடுதலையைப் பழங்காலத்தில் நாடியவர்களும் இந்தப் புரிதலோடுதான் தங்கள் கடமைகளை ஆற்றினர். ஆகவே, முன்னோர்கள் செய்தபடியே நீயும் உன்கடமைகளை ஆற்று. (4.15)

பிணைப்புண்ட, பிணைப்பற்ற மற்றும் விலக்கப்பட்ட செயல்

செயல் என்பது என்ன மற்றும் செயலின்மை என்பது என்ன என்பது பற்றி ஞானிகளும் குழப்பம் அடைந்துள்ளனர். ஆகவே, ஒருவன் பிறப்பு மற்றும் இறப்பு என்ற தீமையில் இருந்து விடுவிக்கப்படுவான் என்பதை அறிந்தவனாய் நான் செயல் என்பது என்ன என்று தெளிவாக விளக்குவேன். (4.16) செயலின் உண்மை இயல்பை புரிந்துகொள்வது மிகக்கடினம். ஆகவே, பிணைப்புண்ட (அல்லது சுயநல) செயலின் இயல்பு, பிணைப்பற்ற (சுயநலமற்ற) செயலின் இயல்பு, மற்றும் விலக்கப்பட்ட செயலின் இயல்பு ஆகியவற்றை ஒருவர் அறியவேண்டும். (4.17)

ஒரு கர்ம யோகி கர்ம விதிகளுக்கு உட்பட்டவன் அல்லன்

செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் பார்க்கும் ஒருவன் ஞானமுள்ளவன். இத்தகைய மனிதன் ஒரு யோகி மேலும் அவன் எல்லாவற்றையும் நிறைவேற்றியவன் ஆகும் (3.05, 3.27, 5.08 மற்றும் 13.29 ஐயும் பார்க்கவும் (4.18) (செயலில் செயலின்மையையும் மற்றும் அதற்கு மாறாகவும் பார்ப்பது என்பது, நம்மைப் பயன்படுத்தி தமது ஆற்றலின் மூலமாக அனைத்து செயல்களையும் பகவான் செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதாகும். அவரே செயலற்றிருந்து செயலாற்றுபவர். நாம் செயல்பட்டும் செயலற்றவர்கள். ஏனெனில் அவருடைய ஆற்றல் பாயாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. ஆகவே, நாம் செய்பவர்கள் அல்லர். அவர் கையில் இருக்கும்வெறும் கருவிகளே.) ஒருவரின் ஆசைகள் சுய அறிவு என்னும் நெருப்பில் வறுக்கப்படும்போது ஞானிகளால் அவர்  முனிவர் என்று அழைக்கப்படுகிறார். (4.19). செயலின் பலனில் இருக்கும் சுயநலமான பிணைப்பை விட்டுவிடும் ஒருவர், கடவுளைத் தவிர வேறு யார் மேலும் சாரமல்  எப்போதும் நிறைவாக இருக்கும் போது அத்தகைய நபர்செயலில் ஈடுபட்டிருந்தாலும்ஒன்றும் செய்வதில்லை மற்றும் நன்மையோ தீமையோ கர்ம செயல் எதிர்வினை எதையும் அடைவதில்லை. (4.20) மனதையும் புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அனைத்து உடைமைகளையும் கைவிட்ட ஆசையற்ற ஒருவன் உடல்வினை ஆற்றுவதால் கர்ம எதிர்வினையான பாவத்தை ஈட்டுவதில்லை. (4.21) அவரது சித்தத்தால் இயற்கையாக கிடைக்கும் லாபம் எதுவாக இருந்தாலும் அதில் நிறைவடைந்து, எதிரிணைகளால் பாதிக்கப்படாமல், பொறாமை அற்றவனாய், வெற்றியிலும் தோல்வியிலும் அமைதி காத்துவரும் கர்ம யோகி செயலில் ஈடுபட்டிருந்தாலும் கர்மாவால் பிணைக்கப்படுவதில்லை. (4.22) பற்றற்ற ஒருவனின் மனம் சுய அறிவில் நிலைத்திருக்கும் போது செயலை சேவையாக பகவானுக்கு செய்யும் பரோபகாரியின் (கர்ம யோகியின்) அனைத்து கர்ம பந்தங்களும் கரைந்து போகும். (4.23) எல்லாவற்றையும் பிரம்மத்தின் வெளிப்பாடு என்று கருதும் ஒருவனால் மட்டுமே  என்றும் இருக்கும் பிரம்மத்தை அறிந்துகொள்ள முடியும் (9.16 ஐயும் பார்க்கவும்) (4.24)

வெவ்வேறு வகையான ஆன்மீக நடைமுறைகள்

சில யோகிகள் தெய்வீக ஆட்சியாளர்களுக்கு (தேவர்கள், பாதுகாவல் தூதர்கள்) வழிபாட்டுச் சேவைகளைச் செய்கின்றனர். பிறர் சுய அறிவுக்காக வேதங்களைப் படிக்கின்றனர். சிலர் தங்கள் புலன்களை அடக்கி சிற்றின்பத்தை விட்டுவிடுகின்றனர். பிறர் மூச்சு மற்றும் பிற யோகப் பயிற்சிகளை செய்கின்றனர். சிலர் தானம் செய்து தங்கள் சொத்துக்களைப் பலியாக செலுத்துகின்றனர். (4.25-28) யோகப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள், உள்மூச்சை வெளிமூச்சுக்கும் வெளிமூச்சை உள்மூச்சுக்கும் யோக உத்திகள் மூலம் பலியாகப் படைத்து மூச்சற்ற சமாதி நிலையை அடைகின்றனர். (4.29) பிறர் தங்கள் உணவைக் கட்டுப்படுத்தி தங்கள் உள்மூச்சுகளுக்கு தங்கள் வெளிமூச்சுகளை பலியாக செலுத்துகின்றனர். (4.30) சுயநலமற்ற சேவைகளைச் செய்பவர்கள் தங்கள் பலியின் பலனாக சுய அறிவு அமுதத்தைப் பெற்று நித்திய பிரம்மத்தை அடைகின்றனர். அர்ஜுனா, பலி செலுத்தாதவனுக்கு இந்த உலகம் கூட ஒரு மகிழ்ச்சியான இடம் அல்லாத போது, பிற உலகம் எவ்வாறு இருக்கும்? (4.38 மற்றும் 5.06 ஐயும் பார்க்கவும்). (4.31) வேதங்களில் பல வகையான ஆன்மீக வேள்விகள் விளக்கப்பட்டுள்ளன. கர்மா அல்லது உடல், மன மற்றும் புலன்களின் செயலில் இருந்து பிறக்க அவற்றை எல்லாம் அறிந்துகொள். இதை அறிந்தால் நீ விடுதலை (மோட்சம், நிர்வாணம்) பெறுவாய். (3.14 ஐயும் பார்க்கவும்) (4.32)

ஆழ்நிலை அறிவை அடைவது ஒரு மேலான ஆன்மீக நடைமுறை ஆகும்

அர்ஜுனா, சுய அறிவை அடைவது மற்றும் அதை பரப்புவது என்பது எந்த ஒரு பொருளை அல்லது கொடையைப் பெறுவதை விடவும் சிறந்ததாகும். (4.33)  தாழ்மையான வணக்கத்துடனும், கவனமாகக் கேட்டும், சேவை செய்தும் ஒரு சுய அறிவுபெற்றவரிடம் இருந்து இந்த ஆழ்நிலை அறிவைப் பெற்றுக்கொள். (4.33) சத்தியத்தை அறிந்த ஞானிகள் இதை உனக்குப் போதிப்பார்கள். (4.34) அர்ஜுனா, இந்த உண்மையை அறிந்தபின் இது போன்று மீண்டும் நீ மயக்கம் அடைய மாட்டாய். இந்த அறிவின் மூலம் என்னுள் இருக்கும் முழு படைப்பையும் (முதல்), மேலான பிரம்மத்தையும், பின்னர் உன்னுள் உன் மேலான சுயத்தையும் காண்பாய் (மற்றும் எல்லாவற்றிலும் என்னை மட்டும் காண்பாய்). (4.35) ஒருவன் பாவிகளில் எல்லாம் மிக அதிகமான பாவியாக இருந்தாலும் சுய அறிவு என்ற கட்டுமரத்தில் மட்டுமே பாவப் பெருங்கடலைக் கடக்க முடியும். (4.36) அர்ஜுனா, கொழுந்துவிட்டு எரியும் தீ ஒரு மரத்தைச் சாம்பலாக்குவது போல சுய அறிவு என்னும் நெருப்பு கர்மத்தின் அனைத்து பந்தங்களையும் சாம்பாலாக மாற்றும். (4.37)

ஆழ்நிலை அறிவு ஒரு கர்ம யோகிக்குத் தானாகவே வெளிப்படுத்தப்படும்

உண்மையில், மேலான பிரம்மத்தைப் பற்றிய மெய் அறிவை விட இந்த உலகத்தில் தூய்மைப்படுத்தும் வேறெதுவும் கிடையாது. கர்ம யோகத்தால் சுத்திகரிக்கப்படும் ஒருவன் நாளடைவில் இயற்கையாகவே தனக்குள் இந்த அறிவை அறிந்துகொள்கிறான். (4.31, மற்றும் 5.06, 18.78 ஐயும் பார்க்கவும்) (4.38) நம்பிக்கையும், யோகப் பயிற்சிகளில் உண்மையும், புலன்களின் மேல் கட்டுப்பாடும் கொண்ட ஒருவன் இந்த ஆழ்நிலை அறிவைப் பெறுகிறான். இந்த அறிவைப் பெற்ற உடன் மேலான சாந்தியையும் அடைகிறான். (4.39) பகுத்தறிவற்றவன், நம்பிக்கையில்லாதவன் மற்றும் நம்பமறுப்பவன் (நாத்திகன்) கெட்டழிந்து போகிறான். இந்த உலகமும், இதற்கடுத்த உலகமும் அல்லது மகிழ்ச்சியும் அவநம்பிக்கை கொண்டவனுக்கு இல்லை. (4.40)

நிர்வாண நிலைக்கு ஆழ்நிலை அறிவு மற்றும் கர்ம யோகம் ஆகிய இரண்டும் தேவை

அர்ஜுனா, செயலின் பலனைத் துறந்து செயலைத் துறந்தவன் மற்றும் சுயம் பற்றிய சந்தேகம் சுய அறிவால் முற்றிலுமாக அழிக்கப்பட்டவனாகிய ஒருவனை செயல் (கர்மம்) பிணைக்காது. (4.41) ஆகவே, அர்ஜுனா, சுய அறிவு என்ற வாளைக் கொண்டு உன் மனதில் தங்கி இருக்கும் அறியாமையில் இருந்து பிறந்த (மேலாம் பிரம்மத்தைப் பற்றிய) ஐயத்தை வெட்டி, கர்ம யோகத்துக்கு சென்று, போருக்காக எழுவாயாக. (4.42)

5.    துறவறப் பாதை

அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா, நீ ஆழ்நிலை அறிவைப் புகழ்கிறாய். மேலும் சுயநலமற்ற  சேவையின் செயல்திறனையும் புகழ்கிறாய். எனக்கு உறுதியாகச் சொல். இவை இரண்டிலும் சிறந்தது எது. (5.05 ஐயும் பார்க்கவும்) (5.01) மேலான பகவான் கூறினார்: சுய அறிவின் பாதை மற்றும் சுயநலமற்ற சேவையின் பாதை ஆகிய இரண்டுமே மேலான இலக்கை நோக்கியே வழிநடத்துகின்றன. ஆனால், அவை இரண்டிலும், சுய அறிவை விட சுயநலமற்ற சேவையே சிறந்தது. (5.02) விருப்பு வெறுப்பற்றவனையே ஓர் உண்மையான சந்நியாசி (துறவி) என்று கருத வேண்டும். அர்ஜுனா, எதிரிணைகளில் இருந்து விடுபட்டு ஒருவன் கர்ம பந்தத்தில் இருந்து எளிதாக விடுபடமுடியும். (5.03)

இரு பாதைகளும் பிரம்மத்துக்கே வழிநடத்துகின்றன

மூடன்ஞானி அல்லசுய அறிவுப் பாதை (அல்லது துறவு) மற்றும் சுயநலமற்ற சேவைப் பாதை (கர்ம யோகம்) ஆகிய இரண்டும் வெவ்வாறனவை என்று கருதுகிறான். ஒன்றில் முழுமை பெற்றவனுக்கு இரண்டின் நன்மைகளுமே கிடைக்கின்றன. (5.04) ஒரு சந்நியாசி அடையும் இலக்கையே ஒரு கர்ம யோகியும் அடைகிறான். துறவுப் பாதையையும் சுயநலமற்ற சேவைப் பாதையையும் ஒன்றே எனப் பார்க்கிறவன், உண்மையிலேயே பார்க்கிறான். (6.01 மற்றும் 6.02 ஐயும் பார்க்கவும்) (5.05) ஆனால், அர்ஜுனா, உண்மைத் துறவை கர்ம யோகம் இல்லாமல் அடைவது கடினம். கர்ம யோகம் கொண்ட ஒரு முனிவன் துரிதமாக பிரம்மத்தை அடைகிறான். (4.31, மற்றும் 4.38 ஐப் பார்க்கவும்) (5.06) மனத் தூய்மையுள்ள ஒருவனின் மனமும் புலன்களும் கட்டுப்பாட்டில் இருந்து எல்லா உயிர்களிலும் அவன் நித்திய பிரம்மத்தைப் பார்க்கிறான் என்றால் அவன் செயலில் ஈடுபட்டாலும் கர்மத்தால் பந்தப்படுவதில்லை. (5.07)

ஒரு கர்ம யோகி கடவுளுக்காக செயல்புரிகிறான்

உண்மை அறிந்த ஞானி (அல்லது சந்நியாசி) சிந்திக்கிறான்: “நான் ஒன்றுமே செய்யவில்லை”. பார்க்கும்போதும், கேட்கும்போதும், தொடும்போதும், முகரும்போதும், உண்ணும்போதும், நடக்கும்போதும், தூங்கும்போதும், சுவாசிக்கும்போதும்; மேலும் பேசும்போதும், கொடுக்கும்போதும், பெறும்போதும், கண்களை திறக்கும்போதும் மூடும்போதும் கூட, ஒரு சந்நியாசி புலன்களே அதன் பொருள் மேல் செயல்படுகிறது என்று நம்புகிறான். (3.27, 13.29, மற்றும் 14.19 ஐயும் பார்க்கவும்) (5.08-09) பகவானுக்கு ஒரு காணிக்கையாக எல்லா செயல்களையும் செய்யும் ஒருவன்பலன்களின் மேல் உள்ள சுயநல பந்தத்தைக் கைவிட்டு தாமரை இலையில் தண்ணீர் ஒருபோதும் ஒட்டாமல் இருப்பது போல், கர்ம எதிர்வினை அல்லது பாவத்தால் பாதிக்கப்படாமல் இருப்பான். (5.10) கர்ம யோகிகள் தங்கள் உடல், மனம், அறிவு மற்றும் புலன்கள் மூலம்  சுய தூய்மைப்படுத்தலுக்காக மட்டும் செயல்களை - சுயநல பந்தம் இல்லாமல் - செய்கிறார்கள். (5.11) செயலின் பலன் மேல் பற்றைக் கைவிட்டு ஒரு கர்ம யோகி உன்னதப் பேரின்பத்தை அடைகிறான்; ஆனால் மற்றவர்களோ, செயலின் பலனில் பற்றுள்ளவர்கள், சுயநல செயலில் கட்டுண்டவர்கள் ஆகிறார்கள். (5.12)

சுய அறிவுப் பாதை

அனைத்து செயல்களின் பலனையும் முற்றிலுமாகத் துறந்த ஒருவன், எந்த செயலையும் செய்யாமலும் வழிநடத்தாமலும் மகிழ்ச்சியாக வாழ்கிறான். (5.13) செயலாற்றும் தூண்டுதலையோ, செயலாற்றுபவர் நாம் என்னும் உணர்வையோ, செயலின் விளைவுகளின் மேல் பற்றையோ மக்களுக்கு பகவான் உருவாக்குவதில்லை. இவை யாவும் இயற்கையின் ஆற்றலால் செய்யப்படுபவை. (5.14) ஒருவரின் செயல்களினால் விளையும் நன்மை அல்லது தீமைக்கு பகவான் பொறுப்பு ஏற்பதில்லை. சுய அறிவு அறியாமை என்னும் திரையால் மறைக்கப்படுகிறது; அதனால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் (மேலும் தீய செயல்களைச் செய்கின்றனர்). (5.15) ஆழ்நிலை அறிவு சுயத்தின் அறியாமையை அழித்து சூரியன் உலகின் அழகிய பொருட்களை வெளிப்படுத்துவது போல் பிரம்மத்தை வெளிப்படுத்துகிறது. (5.16) யாருடைய மனமும் அறிவும் முற்றிலுமாக பிரம்மத்துடன் (நித்தியமானவர்) இணைகிறதோ, யாரெல்லாம் உறுதியாக பிரம்மத்துக்கு தம்மை அர்ப்பணிக்கின்றனரோ, யார் பிரம்மத்தைத் தங்கள் மேலான இலக்காகவும் ஆத்ம அடைக்கலமாகவும் கொள்கின்றனரோ, மற்றும் பிரம்மத்தின் அறிவால் யாருடைய களங்கங்கள் எல்லாம் அழிக்கப்படுகின்றனவோ, அவர்கள் மறுபிறப்பை அடைவதில்லை. (5.17)

அறிவொளி பெற்றவனின் கூடுதல் அடையாளங்கள்

அறிவொளி பெற்ற ஒருவன் (அனைத்திலும் பகவானைப் பார்ப்பவன்) ஒரு கற்ற மற்றும் தாழ்மையான பூசாரியையும், தீண்டத்தகாதவனையும், ஒரு பசுவையும் கூட, ஒரு யானையை அல்லது ஒரு நாயை சமமாகப் பார்க்கிறான். (6.29 ஐயும் பார்க்கவும்) (5.18) சமத்துவத்தின் மேல் மனம் நிலைத்தவனாலேயே இந்த வாழ்க்கையில் எல்லாம் நிறைவேற்றப் பட்டுவருகிறது. இத்தகையவன் நித்திய பிரம்மத்தை அறிந்திருக்கிறான். ஏனெனில் நித்திய பிரம்மம் மாசற்றதும் சார்பற்றதும் ஆகும். (18.55 ஐயும் பார்க்கவும்) (5.19) யாரொருவன் ரம்மியமானதைப் பெறும்போது களிகூராமலும் ரம்மியமற்றதைப் பெறும்போது துயரமடையாமலும் இருக்கிறானோ, யாருக்கு நிலையான மனம் இருக்கிறதோ, யார் மாயைக்குட்படாமல் இருக்கிறானோ, யார் நித்திய பிரம்மத்தை அறிந்திருக்கிறானோ, அவனே நித்திய பிரம்மத்தோடு என்றென்றும் உறைபவனாவான். (5.20) நித்திய பிரம்மத்துடன் ஐக்கியமாகி இருக்கும் இத்தகையவன் ஆழ்சிந்தனையின் மூலம் சுயத்தின் ஆனந்தத்தைக் கண்டுபிடித்ததனால் புறப் புலனின்பங்களில் பற்றற்றவனாக இருந்து எல்லைகடந்த பேரின்பத்தில் திளைக்கிறான். (5.21) புலனின்பங்கள்தான் உண்மையில் துயரத்தின் மூலாதாரங்கள். அவற்றிற்குத் தொடக்கமும் முடிவும் உண்டு. ஆகவே அர்ஜுனா, ஞானிகள் புலன் இன்பத்தில் திளைப்பதில்லை. (18.38 ஐயும் பார்க்கவும்) (5.22) காமம் மற்றும் கோபத்தின் தாக்கத்துக்கு ஈடுகொடுத்து நிற்க வல்லவந்தான் ஒரு யோகி. அவனே மகிழ்ச்சியான மனிதன். (5.23) பரப்பிரம்மத்துடன் மகிழ்ச்சியைக் கண்டடைகிறவன், தனக்குள் பிரம்மத்தில் களிகூருகிறவன், சுய அறிவால் அறிவொளி பெற்றவன்; இத்தகைய யோகி பிரம்மநிர்வாணத்தை அடைகிறான். உன்னத பிரம்மத்துக்குச் செல்கிறான். (5.24) யாருடைய பாவங்கள் (அல்லது குறைகள்) அழிக்கப்பட்டனவோ, யாருடைய சந்தேகங்கள் சுய அறிவால் அகற்றப்பட்டனவோ, யாருடைய மனம் கட்டுப்பாட்டுடன் இருக்கிறதோ, எவன் உயிர்களின் நலத்தில் ஈடுபடுகிறானோ, அத்தகைய முனிவர்கள் உன்னத பிரம்மத்தை அடைகின்றனர். (5.25) யார் காமம் மற்றும் கோபத்தில் இருந்து விடுபடுகிறார்களோ, யார் மனம் மற்றும் புலன்களை அடக்குகிறார்களோ, யார் சுயத்தை அறிந்துள்ளார்களோ, அவர்கள் எளிதில் பிரம்மநிர்வாணத்தை அடைகிறார்கள். (5.26)

மூன்றாவது பாதைபக்தி தியானம் மற்றும் ஆழ்சிந்தனைப் பாதை

அனைத்து புலன் இன்பங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டு, மனதை புருவங்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தி, நாசி வழியாகச் செல்லும் மூச்சை சமன்படுத்தி, புலன்கள், மனம், மற்றும் அறிவைக் கட்டுக்குள் வைத்து, விடுதலையை (முக்தி) முக்கிய இலக்காகக் கொண்டு, காமம், கோபம் மற்றும் அச்சத்தில் இருந்து விடுதலை பெற்றவனே ஒரு முனிவன். (5.27-28) பலிகளிலும் தவங்களிலும் ஆனந்திப்பவனாகவும், அனைத்து அண்டங்களின் மாபெரும் பகவானாகவும், அனைத்து உயிர்களின் நண்பனாகவும் என்னை (அல்லது கிருஷ்ணன், மேலான பிரம்மம்) அறியும் என் பக்தன் சாந்தியை அடைகிறான். (5.29)

6.    தியானப் பாதை

ஒரு கர்ம யோகி ஒரு துறவியுமாகும்

மகா உன்னத பகவான் கூறினார்: பலனை (தனிப்பட்ட இன்பம்) எதிர்பாராமல் விதிக்கப்பட்ட கடமையை செய்பவன் ஒரு துறவி (சந்நியாசி) மற்றும் ஒரு கர்ம யோகி. விளக்கை ஏற்றுவதனால் மட்டுமே ஒருவன் சந்நியாசி ஆகிவிட  முடியாது மேலும் செயலை தவிர்ப்பதனால் மட்டுமே ஒருவன் யோகி ஆகிவிட முடியாது. (6.01) அர்ஜுனா, துறவு (சந்நியாசம்) என்று அவர்கள் சொல்லுவது கர்ம யோகம் என்றும் அழைக்கப்படும்.  ஒரு செயலின் பின்னணியில் இருக்கும் சுயநல நோக்கத்தை துறக்காமல் ஒருவனும் கர்ம யோகி ஆக முடியாது (5.01, 5.05, 6.01 மற்றும் 18.02 ஐயும் பார்க்கவும்) (6.02)

யோகம் மற்றும் யோகி என்பதன் வரையறை

யோகத்தை (தியானம், அல்லது மன அமைதி) நாடும் ஞானிக்கு கர்ம யோகமே வழியாகும். யோகத்தை அடைந்த ஒருவனுக்கு அமைதி சுய அறிதலுக்கான வழி. ஒருவன் அல்லது ஒருத்திக்கு புலன் இன்பத்துக்கான ஆசை இல்லாத போது, செயலின் பலனில் பற்று இல்லாத போது, மேலும் தனிப்பட்ட சுயநல நோக்கங்களை துறந்துவிடும்போது ஒரு நபர் யோகத்தில் முழுமை பெற்றுவிட்டார் எனக் கூறலாம். (6.03-04)

மனம் நண்பனும் எதிரியுமான இரண்டும் ஆகும்

ஒருவன் தன் சொந்த மனதால் உயர்த்தப்படதாழ்த்தப்படவல்லவேண்டும்.  மனமே ஒருவனின் நண்பனும் எதிரியும் ஆகும். யாருக்குக் கட்டுப்பாடு இருக்கிறதோ அவர்களுக்கு மனம் நண்பனாகும். கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு மனம் ஓர் எதிரிபோல செயல்படும். (6.05-06) கீழான சுயத்தில்மனம் மற்றும் புலன்கள்கட்டுப்பாடு உள்ளவன் வெப்பம் மற்றும் குளிரில், இன்பம் மற்றும் வலியில், மரியாதை மற்றும் அவமரியாதையில் அமைதியாக இருக்கிறான், மேலும் மேலான சுயத்தில் என்றும் நிலையாக இருக்கிறான். (6.07) சுய அறிவு மற்றும் சுய உணர்தல் ஆகிய இரண்டுடன் அமைதியாக, மனம் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்தி, ஒரு மண் கட்டி, ஒரு கல், மற்றும் தங்கத்தை ஒன்றாக எண்ணுபவனே யோகி என்று அழைக்கப்படுகிறான். (6.08) தோழர்கள், நண்பர்கள், எதிரிகள், நடுநிலையாளர்கள், நடுவர்கள், வெறுப்பவர்கள், உறவினர், முனிவர்கள் மற்றும் பாவிகளின் பேரில் பாரபட்சமற்று இருப்பவனே மேலானவன் என்று கருதப்படுவான் (6.09)

தியானத்தின் வழிமுறைகள்

மனதையும் புலன்களையும் கட்டுக்குள் கொண்டுவந்து, ஆசைகள் மற்றும் உடைமை உணர்வுகள் அற்றவனாய், ஒரு யோகி அமைதியிலும் தனிமையிலும் அமர்ந்து உன்னத பிரம்மத்தைத் தொடர்ந்து சிந்திக்க முயற்சி செய்ய வேண்டும். (6.10) ஒருவர் அதிக உயரமாகவும் மிகத் தாழ்வாகவும் இல்லாத புனித தர்ப்பைப் புல்லின் மேல் ஒரு மான் தோல் மற்றும் ஒரு துணியை ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்பிய அவன் அல்லது அவளது சொந்த இருக்கையில் ஒரு சுத்தமான இடத்தில் அமர வேண்டும். அங்கு வசதியான நிலையில் அமர்ந்து, மனதைக் கடவுள் மேல் செலுத்தி, சிந்தனைகளையும் புலன்களைன் செயல்களையும் கட்டுப்படுத்தி, சுய சுத்திகரிப்புக்காக ஒருவர் தியானத்தைப் பயிற்சி செய்யவேண்டும். (6. 11-12) ஒருவர் இடுப்பைப் பிடித்துக்கொண்டு, முதுகுத்தண்டு, நெஞ்சு, கழுத்து மற்றும் தலையை நேராக வைத்து, அசைவற்று நிலையாக அமர வேண்டும்; சுற்றிலும் பார்க்காமல் கண்களையும் மனதையும் நிலையாக மூக்கு நுனியின் முன் பொருத்த வேண்டும்; உன் மனதை தூய்மையாகவும் அச்சமின்றியும் வைப்பாயாக; பிரமச்சாரியம் பேண வேண்டும்; மனதைக் கட்டுக்குள் வைக்கவும்; என்னைப் பற்றி சிந்தி; என்னையே முதன்மை இலக்காக வைத்துக்கொள். (4.29, 5.27, 8.10 மற்றும் 8.12 ஐயும் பார்க்கவும்) (6. 13-14) இவ்வாறு, எப்போதும் என் மேல் மனதை நிலையாக நிறுத்தி பயிற்சி செய்; மனம் அடக்கப்பட்ட ஒரு யோகி பிரம்மநிர்வாணத்தின் அமைதியை அடைந்து என்னிடம் வருகிறான். (6.15)

     அர்ஜுனா, அதிகமாக உண்பவனுக்கும் உண்ணாமலேயே இருப்பவனுக்கும், அதிகமாக தூங்குகிறவனுக்கும் விழித்தே இருப்பவனுக்கும் இந்த யோகம் சாத்தியம் இல்லை. (6.16) ஆனால், உண்ணுதல், பொழுதுபோக்குதல், வேலைசெய்தல், உறங்குதல் மற்றும் விழித்தல் ஆகியவற்றில் மிதமாக இருப்பவனுக்குரியது. இந்த தியான யோகா கவலைகள் அனைத்தையும் அழிக்கும். (6.17) முழு கட்டுப்பாடுள்ள மனம் எல்லா ஆசைகளில் இருந்தும் விடுபட்டு சமாதி நிலையில் பிரம்மத்துடன் ஐக்கியமாகும்போது ஒருவன் யோக நிலையை அடைந்துவிட்டான் எனலாம். (6.18) ஓர் இடத்தில் (ஆசைக்) காற்றில் இருந்து (நித்திய பிரம்மத்தால்) பாதுகாக்கப்படும்போது ஒரு விளக்கு விட்டுவிட்டு எரியாது; நித்திய பிரமத்தின் மேல் தியானம் செய்யும் ஒரு யோகியின் அடக்கப்பட்ட மனத்திற்கு இந்த உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

     தியானத்தின் மூலம் நெறிப்படுத்தப்பட்ட மனம், நிலையாகி, நித்திய பிரம்மத்தை சுத்திகரிக்கப்பட்ட அறிவால் நோக்கிப்பார்த்து அதனோடு நிறைவடைகிறது. (6.20) ஒருவன் எல்லையற்ற பேரின்பத்தை உணர்கிறான். இதை அறிவின் மூலம் மட்டுமே கண்டுனர முடியும். இது புலன்களுக்கு அப்பாற்பட்டது.

 நித்திய பிரம்மத்தை உணர்ந்தபின், ஒருவன் முழுமையான உண்மையில் இருந்து ஒருபோதும் பிரிக்கப்பட மாட்டான். (6.21) சுய அறிதலுக்குப் பின் அதற்கும் மேலாக எந்த ஒரு ஆதாயத்தையும் ஒருவன் கருதிப்பார்க்க மாட்டான். சுய அறிதலில் நிலைநிறுத்தப்பட்டவனை கடுந்துயரும் அசைக்க முடியாது. (6.22) துயரத்தில் இருந்து பிரிந்து நிற்கும் நிலையே யோகம் என்பது. இந்த யோகத்தை உறுதியான தீர்மானத்துடனும் எந்த ஒரு மன வேற்றுமை இன்றியும் கடைபிடிக்க வேண்டும். (6.23) அனைத்து சுயநல ஆசைகளையும் முற்றிலுமாகக் கைவிட்டும், அறிவின் மூலம் புலனுகர்வுப் பொருட்களிடம் இருந்து புலன்களை முற்றிலுமாகத் தடுத்தும்,  நன்கு பயிற்சி பெற்ற மற்றும் தூய்மையாக்கப்பட்ட அறிவின் மூலமும் என்னைப் பற்றி சிந்திப்பதின் மூலமும் மனதை முற்றிலுமாக நித்திய பிரம்மத்துடன் ஒன்றீர்க்கப்பட்ட நிலையில் வைத்தும் ஒருவன் படிப்படியாக மன ஆழ் அமைதிய அடைகிறான். (6.24-25) இந்த அமைதியற்ற மற்றும் நிலையற்ற மனம் எங்கெல்லாம் தியானத்தின் போது அலைபாய்கிறதோ அப்போதெல்லம் ஒருவன் அதை சுயத்தின் கவனமுள்ள கண்களின் கீழ் கண்காணிக்க (அல்லது மேற்பார்வை செய்ய) வேண்டும். (6.26)

ஒரு யோகி யார்?

மனம் ஆழ்நிலை அமைதியிலும், ஆசைகள் கட்டுக்குள்ளும், பாவங்கள் (அல்லது தவறுகள்) இல்லாமலும் இருக்கும் சுய அறிதலுடைய யோகிக்கு மேலான பேரின்பம் கிடைக்கிறது. (6.27) தனது மனதையும் அறிவையும் சதாகாலமும் நித்திய பிரம்மத்துடன் ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் இத்தகைய பாவமற்ற யோகி, எளிதாக பிரம்மத்துடன் பேரின்பத் தொடர்பை அனுபவிக்கிறான். (6.28) எங்குமுள்ள நித்திய பிரம்மம் எல்லா உயிர்களிலும் வாசமாயிருப்பதையும், எல்லா உயிர்களும் நித்திய பிரம்மத்தில் வாசமாயிருப்பதையும் மனக்கண்ணால் பார்ப்பதால், நித்திய பிரம்மத்துடன் ஐக்கியத்தில் இருக்கும் ஒரு யோகி எல்லா உயிர்களையும் சமமாகப் பார்க்கிறான். (4.35, 5.18 ஐயும் பார்க்கவும்) (6.29) என்னை எல்லாவற்றிலும் பார்ப்பவர்கள் மேலும் எல்லாவற்றையும் என்னில் பார்ப்பவர்கள் என்னில் இருந்து பிரிக்கப்பட மாட்டார்கள் மற்றும் நான் அவர்களில் இருந்து பிரிக்கப்படமாட்டேன். (6.30) ஒருமைநிலைவாதிகள், எல்ல உயிர்களிலும் உறைவதாக என்னை வணங்குகிறார்கள், அவர்கள் வாழ்க்கை நிலை எதுவாக இருந்தாலும் என்னில்  உறைகிறார்கள். (6.31) அர்ஜுனா, தன்னைப் போலவே எல்லா உயிர்களையும் கருதி பிறரின் இன்ப துன்பத்தை தன்னுடையது போல் உணர்கிறவனே சிறந்த யோகியாகும். (6.32)

மனதை அடக்கும் இருமுறைகள்

அர்ஜுனன் கூறினான்:  கிருஷ்ணா, யோகத்தின் இயல்பு மன அமைதி என்று நீ கூறினாய். ஆனால் மன அமைதியின்மையால், மனதின் நிலைத்த தன்மையை என்னால் காணமுடியவில்லை. கிருஷ்ணா, ஏனெனில், உண்மையில், மனம் மிகவும் நிலையற்றும், கொந்தளிப்பாகவும், வலிமையாகவும், பிடிவாதமானதாகவும் இருக்கிறது. காற்றைப் போல மனதைக் கட்டுப்படுத்துவதும் கடினமானதாக உள்ளது. (6.33-34). மேலான பகவான் கூறினார்: அர்ஜுனா, சந்தேகமின்றி, மனம் அமைதியற்றும் கட்டுப்படுத்தக் கடினமானதாகவும்தான் இருக்கிறது, ஆனால் அதனை தொடர்ந்து பொறுமையாக கடுமையான ஆன்மீகப் பயிற்சிகளாலும், விடுபடுதலாலும் அடக்க முடியும். (6.35) என்னுடைய எண்ணத்தில், மனத்தை அடக்காத ஒருவனுக்கு யோகம் கடினமானது. இருப்பினும், மனதை அடக்கிய ஒருவனுக்கு தகுந்த வழிமுறைகள் மூலம் யோகம் அடையக் கூடியதே.  (6.36)

வெற்றியடையாத யோகியின் இலக்கு

அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா,  மனதை அடக்க முடியாததனால், நம்பிக்கை உடையவன் தியானப் பாதையில் இருந்து விலகி யோகத்தில் முழுமை பெறமுடியாதவனின் இலக்கு என்ன? (6.37) கிருஷ்ணா, கலைந்து போகும் மேகத்தைப் போன்று இரண்டையும் (யோகம் மற்றும் போகம், பர மற்றும் இக இன்பங்கள்) இழந்து, ஆதரவற்று, சுய அறிதல் பாதையில் கலக்கம் அடைந்து அவன் அழிந்து போவானா? (6.38) கிருஷ்ணா, இந்த எனது சந்தேகத்தை நீதான் போக்க முடியும் ஏனெனில் இந்த சந்தேகத்தைப் போக்க உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. (15.15 ஐயும் பார்க்கவும்) (6.39) மேலான பகவான் கூறினார்: அர்ஜுனா, ஒரு யோகிக்கு இவ்வுலகிலும் இதற்குப் பின்னரும் அழிவில்லை. என் நண்பனே, ஆழ்நிலை தியானம் செய்யும் ஒருவன் ஒருபோதும் துன்பம் அடையமாட்டான். (6.40)

     வெற்றிபெறாத யோகி மோட்சம் அடைந்து பல்லாண்டுகள் அங்கு வாழ்ந்து பின்னர் பக்தியுள்ள செழிப்பான வீட்டில் மறுபடியும் பிறக்கிறான், அல்லது அத்தகைய யோகி அறிவொளி பெற்ற யோகிகள் குடும்பத்தில் பிறக்கிறான். இந்த உலகத்தில் இப்படி ஒரு பிறப்பை அடைவது மிகவும் அரிய ஒன்றாகும். (6.41-42) அர்ஜுனா, அங்கு அவன் அல்லது அவள் முந்திய பிறப்பில் கிடைத்த அறிவைப் பெற்று முழுமையை அடைய முயற்சி செய்கின்றனர். (6.43) வெற்றிபெறாத யோகி உள்ளுணர்வால் முந்தைய பிறவிகளின் யோகப் பயிற்சிகளின்  சம்ஸ்காரத்தின்

மூலம் நித்திய பிரம்மத்தை நோக்கி கொண்டுசெல்லப்படுகிறான். யோகத்தைப் பற்றி விசாரிப்பவன் கூடகடவுளுடன் ஐக்கியம்- வேத சடங்காச்சாரங்களை செய்பவனை விட மேலோங்கி நிற்கிறான். (6.44) விடாமுயற்சியுடன் பாடுபடும் யோகி, பல பிறவிகளிலும் படிப்படியாக  முழுமை பெற்று, எல்லா பாவங்களில் (குறைபாடுகள்) இருந்தும் முற்றிலுமாக விடுபட்டு, மேலான வீட்டை அடைகிறான். (6.45)

சிறந்த யோகி யார்?

சந்நியாசிகளை விட யோகி மேலானவன். (வேத) அறிஞர்களை விட யோகி மேலானவன். சடங்காச்சாரம் செய்பவர்களை விட யோகி மேலானவன். ஆகவே, அர்ஜுனா, ஒரு யோகியாக இரு. (6.46) என்னை மேலான நம்பிக்கையோடும் அன்போடும் தியானிக்கும், என்னில் எப்போதும் திளைத்திருக்கும் மனமுடைய  யோகியாகிய பக்தனையே நான் அனைத்து யோகிகளிலும் சிறந்தவன் என்று கருதுகிறேன். (12.02 மற்றும் 18.66 ஐயும் பார்க்கவும்) (6.47)

7.    சுய அறிவும் அறிவொளியும்

 மேலான பகவான் கூறினார்: அர்ஜுனா, உன் மனம் என்னில் ஒன்றி, என்னில் அடைக்கலம் புகுந்து, யோக வழிமுறைகளைக் கடைபிடித்து எவ்விதம் நீ என்னை முழுமையாக அறியலாம் என்பதைக் கேள். (7.01) எவற்றை அறிந்தால் இந்த உலகில் அறிய வேண்டியது எதுவும் மிஞ்சி இருக்காதோ அந்த சுய அறிவை அறிவொளியோடு உனக்கு அருளுவேன். (7.02) சுய அறிதலின் முழுமையை ஆயிரத்தில் ஒருவர் கூட தேடுவது அரிதே. இப்படி வெற்றிகரமாக தேடுவோர்களில் அரிதாகவே ஒருவர் என்னைப் புரிந்து கொள்கிறார். (7.03)

பருப்பொருள், உணர்வு, மற்றும் ஆன்மாவின் வரையறைகள்

மனம், அறிவு, சுயம், ஈதர், காற்று, தீ, நீர், மற்றும் நிலம் ஆகியவையே என் பருப்பொருள் சக்தியின் (பிரக்ரிதியின்) எண்மடங்கு உருமாற்றம் (அல்லது பிரிவுகள்). (13.05 ஐயும் பார்க்கவும்) (7.04) அர்ஜுனா, பருப்பொருள் சக்தியே என் தாழ்ந்த இயற்கை. என் உயர் இயற்கை ஆன்மா (புருஷா). அதனால் அண்டம் நிலை நிற்கிறது; மேலும் நான்பரப்பிரம்மா, கிருஷ்ணா) – தோற்றத்தின் ஆதாரம் மட்டுமல்லாமல் அகில பேரண்டத்தின் அழிவுமாவேன். (13.26 ஐயும் பார்க்கவும்) (7.06)

மேலாம் ஆன்மாவே அனைத்திற்கும் அடிப்படை

அர்ஜுனா, என்னை விட மேலானது ஒன்றும் இல்லை.பேரண்டத்தில் உள்ள யாவும் (மாலையின்) ஆபரணங்கள் நூலில் தொங்குவது போல மேலாம் பிரம்மாவாகிய என் மேல் தொங்குகின்றன. (7.07) அர்ஜுனா, நீரில் சுவையாகவும், சந்திரன், சூரியனில் ஒளியாகவும், வேதங்கள் அனைத்திலும் ஓம் ஆகவும், வெளியில் ஒலியாகவும், மனிதனில் ஆற்றலாகவும் இருப்பது நானே. உலகில் இனிய மணம் நானே. தீயில் வெப்பம் நானே, உயிரினங்களில் உயிர் நானே, சந்நியாசிகளின் சந்நியாசமும் நானே. (7.08-09) அர்ஜுனா,  அனைத்து ஜீவராசிகளின் நித்திய விதை நானே என்று அறிந்து கொள். அறிவுள்ளவனின் அறிவும், பிரகாசமானவைகளின் பிரகாசம் நானே. (9.18 மற்றும் 10.39 ஐயும் பார்க்கவும்). காமமும், சுயநல பந்தமும் அற்ற வலியோரின் வலிமை நானே. அர்ஜுனா, (திருமணத்துக்குப் பின் இனப்பெருக்கம் என்ற ஒரே புனித நோக்கத்துக்கான) அறவழியிலான (தர்மம்) மனிதர்களின் காமமும் (காமன்) நானே. (7.10-11) மூன்று வகையான பொருட் குணங்களான நன்மை, வேட்கை மற்றும் அறியாமை ஆகியவை என்னில் இருந்தே வெளிப்படுகின்றன. நான் குணங்களை சார்ந்தோ அல்லது அவற்றால் பாதிக்கப்படுவதோ இல்லை ஆனால் குணங்கள் என்னை சார்ந்து இருக்கின்றன (9.04 மற்றும் 9.05 ஐயும் பார்க்கவும்) 7.12 பருப்பொருளின் இந்த மூன்று குணங்களின் பல்வேறு அம்சங்களால் மனிதர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்; ஆகவே அவர்கள் நித்தியமும் இந்தக் குணங்களுக்கு மேலானவனுமாகிய என்னை அறிவதில்லை. (7.13)

யார் கடவுளைத் தேடுகின்றனர்?

என்னுடைய தெய்வீக சக்தி (மாயை), பருப்பொருளின் மூன்று குணங்களைக் கொண்டுள்ளது. இது மேற்கொள்ள கடினமானது. என்னிடம் சரணாகதி அடைபவர்களே எளிதில் இந்த மாயையைக் கடக்க முடியும் (14.26, 15.19 மற்றும் 18.66 ஐயும் பார்க்கவும்) (7.14) தீமை செய்பவர்கள், அறியாமை கொண்டவர்கள், பேய் இயல்புகளில் பந்தம் உடையவர்கள் மற்றும் பகுத்தறியும் சக்தி தெய்வீக மாயா சக்தியால் அகற்றப்பட்டவர்கள் என்னை வழிபட மாட்டார்கள் அல்லது தேட மாட்டார்கள். (7.15)

     அர்ஜுனா, நற்குணம் கொண்ட நான்கு வகையானோர் என்னை வழிபடுகின்றனர் அல்லது தேடுகின்றனர். அவர்கள்: துயரமுற்றவர்கள், சுய அறிவைத் தேடுபவர்கள், செல்வத்தைத் தேடுபவர்கள் மற்றும் பிரம்மத்தை அனுபவித்த அறிவொளி பெற்றவர்கள். (7.16) இவர்களில் சிறந்தவர்கள் அறிவொளி பெற்ற பக்தர்கள், எப்போதும் என்னுடன் ஐக்கியமாக இருப்பவர்கள், மற்றும் அவர்களுடைய பக்தி எப்போது ஒருமுகமாக இருக்கும். ஏனெனில் நான் அறிவொளி பெற்றவர்களை மிகவும் நேசிக்கிறேன் மேலும் அறிவொளி பெற்றவர்கள் என்னில் மிக அன்பாய் இருக்கிறார்கள். (7.17) தேடுகிற இவர்கள் அனைவரும் உண்மையில் உன்னதமானவர்களே ஆனால் அறிவொளி பெற்றவர்களை நான் என் சுயமாகப் பார்க்கிறேன். நிலையாக இருப்பவன் என்னோடு ஒன்றாக இருக்கிறான் மற்றும் என் மேலான உறைவிடத்தில் உறைகிறான். (9.29 ஐயும் பார்க்கவும்) (7.18) பல பிறவிகளுக்குப் பின் அறிவொளி அடைந்தவர்கள் அனைத்தும் உண்மையில் என் (பிரம்மம்) வெளிப்பாடே என்று அறிந்து என்னிடம் தஞ்சம் அடைகின்றனர். அத்தகைய மாபெரும் ஆத்மாக்கள் மிக அரிதே. (7.19). பல்வேறு ஆசைகளால் மனிதர்களின் பகுத்தறிவு திசைதிருப்பப்படுகிறது, கர்ம எண்ணங்களால் தூண்டப்படுகிறது (சம்ஸ்காரா), தெய்வீக காப்பாளர்களைத் தஞ்சம் அடைந்து பல்வேறு மத சடங்குகளைச் செய்கின்றனர் (7.20)

எந்த ஒரு விரும்பும் வழிபாட்டு வடிவின் உருவத்திலும் கடவுளைப் பார்க்கலாம்

யார் எந்த தெய்வத்தை நம்பிக்கையோடு வழிபட விரும்பினாலும் (எந்தப் பெயரை, வடிவத்தை மற்றும் முறையையும் பயன்படுத்தி), நான் அந்த தெய்வத்தின் மேல் அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை நிலைப்படுத்துவேன். நிலையான நம்பிக்கை கொண்டவர்களாய் அவர்கள் அந்த தெய்வத்தை வணங்கி அதன் மூலம் தாங்கள் விரும்பியதைப் பெறுகிறார்கள். அந்த விருப்பங்கள் உண்மையிலேயே என்னால்தான் வழங்கப்படுகின்றன. (7.21-22) குறைந்த அறிவுடைய இந்த மனிதர்களின் இத்தகைய பொருள் லாபம் தற்காலிகமானது. தெய்வீக காப்பாளர்களை வழிபாடு செய்பவர்கள் தெய்வீக காப்பாளர்களிடம் செல்கிறார்கள். ஆனால் என்னுடைய பக்தர்கள் என்னிடமே வருகின்றனர். (7.23)

     அறியாமை கொண்டவர்கள் - என் மாறாத, ஒப்பிடமுடியாத, புரிந்துகொள்ளமுடியாத, மற்றும் எல்லாவற்றையும் கடந்துநிற்கும் வடிவத்தை (அல்லது இருப்பை) புரிந்து கொள்ள முடியாமல்மேலான பிரம்மமாகிய நான் வடிவமற்றவன் மற்றும் வடிவங்களை எடுக்கிறேன் என்று எண்ணிக்கொள்ளுகிறார்கள். (7.24) என் தெய்வீக சக்தியால் (மாயை) மறைக்கப்பட்ட நான், என் பிறப்பற்ற, நித்திய மற்றும் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் வடிவை மற்றும் ஆளுமையைப் பற்றி அறியாத (என்னை வடிவமற்றவன் என்று கருதுகின்ற) அறியாமை கொண்டவர்களுக்கு என்னை வெளிப்படுத்துவதில்லை. (7.25)

     ஓ அர்ஜுனா, கடந்த காலத்தில் இருந்தவர்களையும், நிகழ்காலத்தில் இருப்பவர்களையும், எதிர்காலத்தில் இருக்கப் போகின்றவர்களையும் நான் அறிவேன். ஆனால் யாரும் என்னை உண்மையில் அறியவில்லை. (7.26) ஓ அர்ஜுனா, விருப்பு வெறுப்புகளால் பிறந்த முரண் இணைகளின் மாயை காரணமாக இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் முற்றிலும் அறியாமையில் மூழ்கியுள்ளன. ஆனால் தங்கள் கர்மம் அல்லது பாவம் முடிவுக்கு வந்துவிட்ட, தன்னலமற்ற செயல்களை ஆற்றுபவர்கள் முரண் இணைகளின் மாயையிலிருந்து விடுபட்டு, உறுதியான முடிவுடன் என்னை வணங்குகிறார்கள். (7.27-28) பிறப்பு, முதுமை மற்றும் மரணம் என்னும் சுழற்சியில் இருந்து விடுதலையைத் தேடுபவர்கள் என்னிடம் சரணடைந்து, பிரம்மத்தை (நித்தியமாய் இருப்பவர்), பிரம்மத்தின் இயல்பை, மற்றும் கர்மம் என்ற பிரம்மத்தின் ஆற்றலை முற்றிலும் புரிந்துகொள்கின்றனர்.(7.29) மனிதர்கள், உலகம்சார் தெய்வீக மனிதர்கள், மற்றும் மேலான ஆத்மாக்கள் போன்ற என்னை அறிந்த நிலையான நபர்கள் மரணத்தின் போது கூட என்னை அடைகிறார்கள் (8.04 ஐயும் பார்க்கவும்) (7.30)

8.பரம்பொருள்

அர்ஜுனன் கூறினான்: ஓ கிருஷ்ணா, பிரம்மம் யார்? பிரம்மத்தின் இயல்பு என்ன? கர்மம் என்றால் என்ன? மனிதர்கள் யார்? தெய்வங்கள் யார்? மேலான ஆத்மா யார், அவர் உடலில் எப்படி வாழ்கிறார்? கிருஷ்ணா, தங்கள் மனதைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களால் உன்னை மரணத்தின் போது எப்படி நினைவுகூர முடியும்? (8.01-02)

மேலான ஆத்மா, ஆத்மா, தனிப்பட்ட ஆத்மா மற்றும் கர்மம் பற்றிய வரையறைகள்

மேலான பகவான் கூறினார்: மாறாத ஆத்மா (ஆவி) பிரம்மம் (நித்தியமாய் இருப்பவர்) என்று அழைக்கப்படுகிறது. பிரம்மத்தின் இயல்பு (அறிதல் மற்றும் ஆசையின் உள்ளார்ந்த ஆற்றல் உட்பட) அத்யாத்மா என்று அழைக்கப்படுகிறது. வாழும் பண்புருவின் வெளிப்பாட்டை ஏற்படுத்தும் பிரம்மத்தின் படைப்பு சக்தி கர்மம் என்று அழைக்கப்படுகிறது. (8.03) மனிதர்கள் அதிபூதம் என்று அழைக்கப்படுகிறார்கள். தெய்வீக ஆளுமையின் விரிவாக்கங்கள் - அதாவது நாராயணா, மகாவிஷ்ணு, ஈஸ்வரன், முதலியன - தெய்வங்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஓ அர்ஜுனா, உடலுக்குள் மேலான கட்டுப்பாட்டாளராக வாசம் செய்யும் மேலான ஆத்துமாவே நான்.  (8.04)

மறுபிறவி மற்றும் கர்மம் பற்றிய கொள்கை

மரணத்தின் போது உடலை விட்டு வெளியேறும்போது கூட, என்னை மட்டுமே நினைவில் வைத்திருப்பவன் என்னை அடைகிறான்; அதில் எந்த சந்தேகமும் இல்லை. (8.05) அர்ஜுனா, வாழ்க்கையின் முடிவில் தன் உடலை விட்டு போகும்போது எந்தப் பொருளை நினைவில் ஒருவன் வைத்திருக்கிறானோ அந்தப் பொருளை அவன் அடைவான், ஏனெனில் அந்தப் பொருளைப் பற்றிய தொடர் சிந்தனையே காரணம் (ஒருவன் அந்தப் பொருளை நினைவு கூருகிறான் மேலும் அதை அடைகிறான்). (8.06)

கடவுளை அறிதலுக்கான ஒரு எளியமுறை

ஆகவே, எப்போதும் என்னை நினைவில் வைத்து உங்கள் கடமையைச் செய்யுங்கள். உங்கள் மனமும் அறிவும் எப்போதும் என்னையே மையமாகக் கொண்டிருந்தால் நீங்கள் நிச்சயமாக என்னை அடைவீர்கள். (8.07) அர்ஜுனா, தியானப் பயிற்சியால் கட்டுப்படுத்தப்பட்ட ஓர் அலைபாயாத மனதுடன் என்னைப் பற்றி சிந்திப்பதன் மூலம், ஒருவன் மேலான பிரம்மத்தை அடைகிறான். (8.08) மேலான பிரம்மத்தை -  அனைத்தும் அறிந்தவர், மிகப் பழமையானவர், கட்டுப்படுத்துபவர், சிறியதிலும் சிறியவர் (பெரியதிலும் பெரியவர்), எல்லாவற்றையும் நிலைநிறுத்துபவர், அறியொணாதவர், சூரியனைப் போன்று தானே ஒளிர்பவர், எல்லாம் கடந்தவர் அல்லது பொருள் உண்மைக்கு அப்பாற்பட்டவர்  என்றுமரணத்தின் போது உறுதியான மனதுடனும் பக்தியுடனும், யோக ஆற்றலினால் உயிர்த்துடிப்போட்டத்தை (உயிர் ஆற்றல்கள், பிராணா) இரு இமைகளுக்கும் நடுவாக (அல்லது ஆறாவது சக்கரம்) உருவாக்கி அங்கேயே நிறுத்தினால் உன்னத  தெய்வீக நபரான கிருஷ்ணனை அடையலாம். (4.29, 5.27, 6.13 ஐயும் பார்க்கவும்) (8.09-10) வேதத்தை அறிந்தவர்கள் மாறாதது என்று அழைக்கும் மிகச்சிறந்த உறைவிடத்தை அடைவதற்கான செயல்முறையை நான் சுருக்கமாக விளக்குகிறேன்; சந்நியாசிகள், பந்தத்தில் இருந்து விடுபட்டு, இதற்குள் நுழைகிறார்கள்; மற்றும் மக்கள் அதை நாடி, பிரம்மச்சரிய வாழ்க்கையை நடத்துகிறார்கள். (8.11)

மரணத் தறுவாயில் கடவுளை தியானித்து விடுதலை அடையுங்கள்

ஒருவன் பௌதிக உடலை விட்டுச் செல்லும் போது, அனைத்துப் புலன்களையும் அடக்கி, மனதைக் கடவுள் மேலும் பெருமூளையின் பிராணாவிலும் (உயிர் ஆற்றல்கள்) குவித்து, யோகப் பயிற்சியில் ஈடுபட்டு, என்னை தியானித்து, பிரம்மத்தின் புனித ஓரசை மந்திரமான ஓம் என்பதைக் கூறினால் அவன் பரமகதியை அடைகிறான். (8.12-13). அர்ஜுனா, எப்போதும் என்னைப் பற்றியே சிந்திக்கும் ஓர் அலைபாயாத மனம் கொண்ட ஒரு உறுதியான யோகியால் நான் எளிதில் அடையக் கூடியவன். (8.14) என்னை அடைந்த பின்னர், மாபெரும் ஆன்மாக்கள் இந்த நிலையற்ற உலகத்தில் மறுபடியும் பிறக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் மிக உயர்ந்த பரிபூரண நிலையை அடைந்துவிட்டார்கள். (8.15) எல்லா உலகங்களிலும் வசிப்பவர்கள் --- படைப்பவரான பிரம்மாவின் உலகம் உட்பட - மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்பு என்ற துயரங்களுக்கு உட்பட்டவர்கள். ஆனால், அர்ஜுனா, என்னை அடைந்த பிறகு, ஒருவர் மீண்டும் பிறப்பதில்லை. (9.25 ஐயும் காண்க) (8.16)

படைப்பில் அனைத்தும் சுழற்சிகொண்டவை

படைப்பவரின் நாள் (பிரம்மன்) ஆயிரம் யுகங்கள் (அல்லது 4.32 பில்லியன் ஆண்டுகள்) நீடிக்கும் என்பதையும், அவருடைய இரவும் ஆயிரம் யுகங்களுக்கு நீடிக்கும் என்பதையும் அறிந்தவர்கள், இரவும் பகலும் அறிந்தவர்கள். (8.17) படைப்பு சக்தியான பிரம்மாவின் நாளின் வருகையின் போது அனைத்து வெளிப்பாடுகளும் முதன்மைப் பொருள் இயறகையில் இருந்து (ஆதி-பிரகிருதி) வெளிவருகின்றன. மேலும் அவை மீண்டும் பிரம்மாவின் இரவின் வருகையின் போது அதில் ஒன்றிணைகின்றன. (8.18) படைப்பவரின் (பிரம்மன்) நாளின் வருகையின் போது அதே எண்ணிக்கையிலான உயிரினங்கள் மீண்டும் மீண்டும் இருப்பிற்கு வருகின்றன; அவை தவிர்க்க முடியாமல், பிரம்மாவின் இரவின் வருகையின் போது அழிக்கப்படுகின்றன. (8.19)

     இன்னொரு நித்திய ஆழ்நிலை இருப்பு உள்ளது - மாறக்கூடிய பொருள் இயற்கையை விட உயர்ந்தது (பிரகிருதி) - இது படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் அழிந்து போகும்போது அழிவதில்லை. இது நித்தியமாய் இருப்பது (அல்லது பிரம்மம்) என்று அழைக்கப்படுகிறது. இதுவே உன்னதமான உறைவிடம் என்றும் கூறப்படுகிறது. என் உன்னத உறைவிடத்தை அடைபவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. (8.20-21) ஓ அர்ஜுனா, இந்த உயர்ந்த உறைவிடம் என்னிடம் மாறா பக்தியைக் காட்டுவதன் மூலம் அடையக்கூடியது, அதற்குள் எல்லா உயிரினங்களும் இருப்பில் உள்ளன, இதன் மூலம் இந்த பிரபஞ்சம் அனைத்தும் பரவியுள்ளது. (9.04 மற்றும் 11.55 ஐயும் காண்க) (8.22)

புறப்படுவதற்கான இரு அடிப்படை பாதைகள்

அர்ஜுனா, இறப்புக்குப் பின்னர் யோகிகள் திரும்பி வரக்கூடிய மற்றும் வராத வெவ்வேறு புறப்படும் பாதைகளை இப்போது நான் விளக்குவேன். (8.23) இறப்புக்குப் பிறகு வானுலகக் கட்டுப்பாட்டாளர்களான நெருப்பு, ஒளி, பகல், பிரகாசமான சந்திர இருவாரம், மற்றும் சூரியனின் ஆறுமாத வடக்கு சங்கிராந்தி வழியாக படிபடியாகக் கடந்து யோகிகள் சுயமாக அடைந்த மேலான உறைவிடத்துக்கு (மேலும் உலகிற்கு திரும்பி வரமாட்டார்கள்) செல்லுகிறார்கள். (8.24) இறப்புக்குப் பிறகு வானுலகக் கட்டுப்பாட்டாளர்களான புகை, இரவு, இருண்ட சந்திர இருவாரம், மற்றும் சூரியனின் ஆறுமாத தெற்கு சங்கிராந்தி வழியாகப் படிபடியாகக் கடந்து நீதிமான்கள் மோட்சம் அடைந்து உலகிற்கு திரும்பி வருகிறார்கள் (8.25) ஒளியின் பாதை (ஆன்மீக பயிற்சி மற்றும் சுய அறிதல்) மற்றும் இருளின் பாதை (பொருள்வாதம் மற்றும் அறியாமை) ஆகியவையே உலகின் இரு நித்திய பாதைகள் என்று நினைக்கப்படுகின்றன. முதல் பாதை விடுதலைக்கு (முக்தி, நிர்வாணம்) வழிநடத்துகிறது மற்றும் பிந்திய பாதை மறுபிறவிக்கு வழிநடத்துகிறது (8.26)

ஆழ்நிலை அறிவு விடுதலைக்கு வழிநடத்துகிறது

அர்ஜுனா, இந்த இரு பாதைகளையும் அறிந்த ஒரு யோகி கலக்கம் அடைய மாட்டான். ஆகவே, அர்ஜுனா, என்னோடு நிலையாக யோகத்தில் இரு. (8.27) இதை எல்லாம் அறிந்த யோகி, வேதங்களைப் படிப்பதாலும், வேள்விகளாலும், துறவு மற்றும் கொடைகளினாலும் கிடைக்கும் பலன்களைத் தாண்டிச் சென்று என் மேலான நித்திய உறைவிடத்தை அடைகிறான். (8.28)

9.மேலான அறிவு மற்றும் மாபெரும் இரகசியம்

மேலான பகவான் கூறினார்: அவநம்பிக்கை கொள்ளாதவனே, மிகவும் ஆழமானதும், இரகசியமானதுமான ஆழ்நிலை அறிவுடன் ஆழ்நிலை அனுபவத்தையும் நான் உனக்கு வெளிப்படுத்துவேன். இதை அறிந்து, உலக வாழ்வின் துன்பங்களில் இருந்து நீ விடுவிக்கப்படுவாய். (9.01)

உன்னதரின் இயல்பைப் பற்றிய அறிவுதான் மாபெரும் ரகசியம்

இந்த சுய அறிவுதான் அறிவின் அரசன். மிகவும் இரகசியமானது, மிகவும் புனிதமானது, உள்ளுணர்வால் பார்க்கக்கூடியது, அறத்தோடு (தர்மம்) இணக்கமானது, எளிதாக கடைபிடிக்கக்கூடியது மற்றும் இது காலவரம்பற்றது. (9.02) அர்ஜுனா, இந்த அறிவில் நம்பிக்கை அற்றவர்களால் என்னை அடைய முடியாது மேலும் பிறப்பு இறப்பு என்ற சுழற்சிக்கு ஆட்படுவார்கள். (9.03) இந்த முழு பேரண்டமும் என்னுடைய ஒரு விரிவே. அனைத்து உயிரினங்களும் என்னை சார்ந்தே இருக்கின்றன. நான் அவைகளை சார்ந்திருக்கவில்லை (ஏனெனில் நான்தான் அவைகள் எல்லாவற்றிலும் மேலானவன்) (7.12 ஐயும் பார்க்கவும்) (9.04) என் தெய்வீக ரகசியத்தின் ஆற்றலை நோக்குங்கள்.  உண்மையில் நான்எல்லா உயிரினங்களையும் படைத்து தாங்குகின்றவன்அவைகளை சார்ந்திருக்கவில்லை, மற்றும் அவைகளும் என்னை சார்ந்திருக்கவில்லை (9.05) (ஒரு தங்கச் சங்கிலி தங்கத்தை சார்ந்திருப்பது போல், மற்றும் பால்பொருட்கள் பாலை சார்ந்திருப்பது போல். உண்மையில் தங்கச் சங்கிலி தங்கத்தை சார்ந்திருக்கவில்லை; சங்கிலி வெறொன்றுமில்லை தங்கம்தான். இதுபோலவே பொருளும் ஆற்றலும் வெவ்வேறானவை மட்டுமல்லாமல் வெவ்வேறானவையும் அல்ல). எல்லா  உயிரினங்களும் என்னில் இருப்பதைப் பாருங்கள் (எந்த தொடர்பும் இல்லாமல் அல்லது எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாமல்) வல்லமையுள்ள காற்றைப் போல, எங்கும் நகரும், நித்தியமாய் வெளியில் இருக்கும். (9.06)

பரிணாமம் மற்றும் உள்ளுருளல் கொள்கை

அர்ஜுனா, ஏறக்குறைய 311 டிரில்லியன் சூரிய ஆண்டுகளுக்கு சற்று அதிகமான ஒரு சுழற்சியின் இறுதியில் எல்லா உயிர்களும் என் ஆதி-பிரகிரிதிக்குள் (முதன்மைப் பொருள் இயற்கை) இணைகின்றன. அடுத்த சுழற்சியின் தொடக்கத்தில் அவற்றை நான் மீண்டும் உருவாக்குகிறேன். (8.17 ஐயும் பார்க்கவும்) (9.07) என் பொருள் இயற்கையின் உதவியோடு நான் முழுத் திரளான உயிர்களை மீண்டும் மீண்டும் உருவாக்குகிறேன். (9.08) அர்ஜுனா, இந்தப் படைப்பு செயல்பாடுகள் என்னை பந்தப் படுத்துவதில்லை. ஏனெனில் நான் வேறாக நிலைக்கிறேன் மற்றும் அந்த செயல்களோடு பிணையுறாமல் இருக்கிறேன். (9.09) தெய்வீக இயக்க ஆற்றல் (மாயை) – பொருள் இயற்கையின் உதவியோடுஎன் மேற்பார்வையின் கீழ் எல்லா உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களையும் உருவாக்குகிறேன்; அர்ஜுனா, இவ்வாறு படைப்பு தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறது (14.03 ஐயும் பார்க்கவும்) 9.10.

ஞானிகள் மற்றும் மூடர்களின் வழிகள்

நான் மனித உருவில் தோன்றும் போது மூடர்கள் என்னை வெறுக்கிறார்கள். ஏனெனில், நான் அனைத்து உயிர்களின் மாபெரும் பகவான் எனும் என் அனைத்தும் கடந்த நிலையை அவர்கள் அறியார்கள் (மேலும் என்னை ஒரு சாதாரண மனிதன் எனக் கருதுகின்றனர்). மேலும் அவர்களுக்கு தவறான நம்பிக்கைகளும், தவறான நடவடிக்கைகளும், தவறான அறிவும், பிசாசுகள் மற்றும் பேய்களின் வஞ்சகத் தன்மைகளும் (16.04-18 ஐப் பார்க்கவும்) உள்ளன (மேலும் என்னை அறிந்துகொள்ள முடியவில்லை). (9.11-12) ஆனால், அர்ஜுனா, தெய்வீகப் பண்புகளை (பார்க்கவும் 16.01-03) கொண்ட மகாத்மாக்கள், என்னை மாறாதவன், படைப்பின் பருப்பொருள் சார்ந்த மற்றும் திறன்மிகும் காரணம் என அறிந்து நேசம் மிகுந்த பக்தியுடன் ஒருமுகத்தோடு வழிபடுகிறார்கள். (9.13) உறுதியான தீர்மானம் கொண்டவர்கள் எப்போதும் என் புகழைப் பாடி, என்னை அடையத் தேடி, பக்தியுடன் என்னை விழுந்து வணங்கி எப்போதும் நிலையான பக்தியுடன் என்னை வழிபடுகிறார்கள். (9.14) சிலர் சுய அறிவைப் பெற்று அதைப் பரப்பி என்னை வழிபடுகிறார்கள். பிறர், எல்லாவற்றிலும் இருக்கும் ஒருவனாகவும் (அல்லது ஒருமைநிலைவாதம்), எல்லாவற்றிற்கும் தலைவனாகவும் (இருமையியம்), மேலும் பல வழிகளிலும் என்னை வழிபடுகின்றனர். (9.15)

அனைத்தும் முழுமையின் ஒரு வெளிப்பாடாகும்

சடங்குகளும் நானே, வேள்வியும் நானே, பலியும் நானே, மூலிகையும் நானே, மந்திரமும் நானே, வேள்வி நெய் நானே, நெருப்பும் நானே, மேலும் படையலும் நானே. (4.24 ஐயும் பார்க்கவும்). பேரண்டத்தைத் தாங்குபவனும், தந்தையும், தாயும் பாட்டனும் நானே. அறிவின் பொருளும், ஓம் எனும் புனித மந்திரமும், ரிக், யஜுர், சாம வேதங்களும் நானே. குறிக்கோளும், ஆதரிப்போனும், பகவானும், சாட்சியும், அடைக்கலமும், நண்பனும், தோற்றமும், அழிவும், அடித்தளமும், ஆதாரமும், அழிவற்ற விதையும் நானே. (மேலும் பார்க்கவும் 7.10 மற்றும் 10.39) (9.16-18) அர்ஜுனா, வெப்பத்தை நான் அளிக்கிறேன், மழையை அனுப்புவதோடு தடுக்கவும் செய்கிறேன். சாகாமையும் சாவும் நானே. முழுமையும் நிலையற்றதுமாகிய இரண்டும் நானே. (மேலான பிரம்மம் எல்லாமும் ஆனது. மேலும் பார்க்கவும் 13.12) (9.19)

அன்போடு கூடிய பக்தியால் முக்தி அடைதல்

வேதங்களில் கூறப்பட்டுள்ள சடங்குகளைச் செய்வோர், பக்தி அமுதத்தைப் பருகுபவர்கள், பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டவர்கள், சொர்க்கத்தை அடைய நற்செயல்கள் ஆற்றி என்னை வழிபடுகின்றனர். தங்கள் நற்காரியங்களின் நிமித்தமாய் அவர்கள் சொர்க்கத்துக்குச் சென்று தெய்வீகப் புலன் இன்பங்களை அனுபவிக்கின்றனர். (9.20) பரந்த சொர்க்க உலத்தின் இன்பங்களை அனுபவித்துத் தங்கள் நற்கர்மங்கள் தீர்ந்த பின்னர் அவர்கள் இந்த அழிவுள்ள உலகிற்கு  வருகின்றனர். மூன்று வேதங்களில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தங்கள் கர்மங்களின் பலனுக்காக வேலை செய்பவர்கள் தொடர்ந்து பிறப்பு மற்றும் இறப்பை அடைகின்றனர் (மேலும் பார்க்கவும் 8.25) (9.21)

எந்நேரமும் என்னை நினைத்து ஒருமன சிந்தனையுடன் எப்போதும் உறுதியுடன் என்னை வணங்கும் பக்தனின் ஆன்மீக மற்றும் பொருளாதார நன்மைகள் ஆகிய இரண்டையும் பற்றி நான் தனிப்பட்ட முறையில் கவனம் எடுத்துக் கொள்ளுகிறேன். (9.22) அர்ஜுனா, நம்பிக்கையுடன் தெய்வங்களை வணங்கும் பக்தர்கள் கூட என்னையே வணங்குகிறார்கள் ஆனால் தவறான முறையில். (9.23) ஏனெனில் மேலான பிரம்மம் ஆகிய நான் மட்டுமே அனைத்து வேள்வியின் அர்ப்பணிப்புகளையும் அனுபவிக்க முடியும். மேலும் நானே பேரண்டத்தின் இறைவன். ஆனால் மக்கள் என் உண்மையான எல்லை கடந்த இயற்கையை அறியவில்லை. ஆகவே, (பிறப்பு இறப்பு என்ற தொடர் சுழற்சிக்குள்) விழுகின்றனர். (9.24) தெய்வங்களை வணங்குவோர் தெய்வங்களிடம் செல்கின்றனர்; மூதாதையர்களை வணங்குவோர் மூதாதையர்களிடம் செல்கின்றனர்; பிசாசுகளை வணங்குவோர் பிசாசுகளிடம் செல்கின்றனர்; ஆனால் என் பக்தர்கள் என்னிடம் வருகின்றனர் (மேலும் அவர்கள் திரும்பவும் பிறப்பதில்லை. (மேலும் பார்க்கவும் 8.16) (9.25)

அன்பு மற்றும் பக்தியின் காணிக்கைகளை

பகவான் ஏற்றுக்கொண்டு உட்கொள்ளுகிறார்

ஓர் இலை, ஒரு மலர், ஒரு பழம், அல்லது நீர் ஆகியவற்றை பக்தியுடன் யார் காணிக்கையாக அளித்தாலும், நான் தூய மனது உடையவர்களின் பக்தியான காணிக்கையை ஏற்று உட்கொள்ளுகிறேன். (9.26) அர்ஜுனா, நீ எதைச் செய்தாலும், நீ எதை உண்டாலும், புனித அக்கினிக்கு அவியாக நீ எதை அளித்தாலும், நீ எதைக் கொடையாகக் கொடுத்தாலும், நீ எந்த தவங்களைச் செய்தாலும், எல்லாவற்றையும் எனக்கு அளிக்கும் காணிக்கையாக அவற்றைச் செய்வாயாக. (மேலும் பார்க்கவும் 12.10, 18.46) (9.27) இந்த முழுத் துறவாகிய மனப்பாங்கின் மூலம் (சந்நியாச யோகம்) கர்மத்தின் பந்தத்தில் - நல்லதோ கெட்டதோஇருந்து நீ விடுபடுவாய். விடுதலை பெற்ற நீ என்னிடத்தில் வருவாய். (9.28)

மன்னிக்க முடியாத பாவி ஒருவரும் இல்லை

எல்லா உயிரினங்களிலும் சுயம் சமமாக உள்ளது. நான் யாரையும் வெறுப்பதில்லை அல்லது எனக்கு அன்பிற்குரியவர்களும் இல்லை. ஆனால் என்னை அன்புடனும் பக்தியுடனும் வணங்குபவர்கள் எனக்கு மிகவும் நெருங்கியுள்ளார்கள் மேலும் நானும் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளேன். (மேலும் பார்க்கவும் 7.18) (9.29) அதி பாவி ஒருவன் ஒரு மனதுடன், அன்புள்ள பக்தியுடன், என்னை வணங்க முடிவு செய்தால் அத்தகைய மனிதனும் ஒரு துறவி என்றே கருதப்பட வேண்டும், ஏனெனில் அவன் சரியான முடிவை எடுத்துள்ளான். (9.30) இத்தகைய மனிதன் விரைவில் நீதிமான் ஆகி நிரந்தர சமாதானத்தைப் பெறுவான். அர்ஜுனா, விழிப்புடன் இரு, என் பக்தன் ஒருநாளும் அழிந்தோ வீழ்ந்தோ போக மாட்டான். (9.31)

பக்தியுள்ள அன்புப் பாதை எளிதானது

அர்ஜுனா, பெண்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், மற்றும் தீய மனமுடையவர்களை உள்ளடக்கிய யாராக இருந்தாலும் சரி அன்புள்ள பக்தியுடன் என் சித்தத்துக்கு சரணடைந்தால் மேலான பரகதியை அடையலாம். (மேலும் பார்க்கவும் 18.66) (9.32) ஆகவே புனித பூசாரிகளுக்கும் பக்தியுள்ள ராஜ முனிவர்களுக்கும் மேலான பிரம்மத்தை அடைவது மிக எளிதானதாக இருக்க வேண்டும். ஆகையினால், இந்த மகிழ்ச்சியற்றதும் நிலையற்றதுமான மானிட வாழக்கையை அடைந்ததனால் ஒருவன் அன்புடன் கூடிய பக்தியுடன் எப்போதும் என்னை வணங்க வேண்டும். (9.33) உன் மனதை என்னில் நிலைப்படுத்து, என்னிடம் பக்தியோடு இரு, என்னை வழிபடு மற்றும் பணிந்து என்னை வணங்கு. என்னை மேலான இலக்காகவும் ஒரே அடைக்கலமாகவும் வைத்து உன் மனதை என்னில் நிலைப்படுத்தினால் நிச்சயமாக என்னிடம் வருவாய். (9.34)

10.  ழுமையின் வெளிப்பாடு

மேலான பகவான் கூறினார்: அர்ஜுனா, எனக்கு மிக அன்பானவனே, உன்னுடைய நன்மைக்காக, நான் உன்னோடு பேசும் என் மேலான வார்த்தையை மீண்டும் ஒருமுறை கேள். (10.01)

கடவுளே எல்லாவற்றிற்கும் மூலம்

தெய்வீகக் கட்டுப்பாட்டாளர்களும் (தேவர்கள்) மாபெரும் முனிவர்களும் கூட எனது தோற்றத்தை அறியமாட்டார்கள். ஏனெனில் தேவர்கள் மற்றும் பெரும் முனிவர்களுக்கு நானே தோற்றமாக இருக்கிறேன். (10.02) பிறப்பற்றவன், தொடக்கம் இல்லாதவன், மற்றும் பேரண்டத்தின் மேலான கடவுள் என்று அறிந்திருக்கும் ஒருவன் மனிதர்களுள் ஞானமுள்ளவனாக கருதப்படுகிறான் மேலும் அவன் கர்மத்தின் பந்தத்தில் இருந்து விடுபட்டவன் ஆகிறான். (10.03) பாகுபடுத்தல், சுய அறிவு, மயக்கமின்மை, மன்னிப்பு, உண்மை, மனம் மற்றும் புலன்களின் மேல் கட்டுப்பாடு, ஆழ்மன அமைதி, இன்பம், வலி, பிறப்பு, இறப்பு, அச்சம், அஞ்சாமை, அகிம்சை, அமைதி, திருப்தி, துறவு, கொடை, புகழ், இகழ்ச்சிஆகிய மனிதனில் காணப்படும் இந்த வேறுபட்ட தன்மைகள் என்னிடம் இருந்து மட்டுமே எழுகின்றன.  (10.04-05) உலகின் உயிரினங்கள் எல்லாம் யாரிடம் இருந்து பிறந்தனவோ அந்த ஏழு பெரும் முனிவர்கள், நான்கு சனகர்கள் மற்றும் பதினான்கு மனுக்கள் என் நிலை ஆற்றலில் இருந்தே தோன்றினர். (10.06)

எல்லாவற்றிற்குமான தோற்றம் நானே.எல்லாம் என்னிடம் இருந்தே வெளிப்படுகின்றன. இதைப் புரிந்துகொண்டு ஞானிகள் என்னை அன்போடும் பக்தியோடும் போற்றுகிறார்கள். (10.08) என்னுடய பக்தர்கள் எப்போதும் திருப்தியோடும் ஆனந்தத்தோடும் இருக்கிறார்கள். அவர்கள் மனம் என்னில் லயித்திருக்கிறது. அவர்களுடய வாழ்க்கை எனக்கு சரணடைந்துள்ளது. என்னைப் பற்றி எப்போதும் பேசி அவர்கள் ஒருவருக்கொருவர் அறிவொளி பெறுகின்றனர். (10.09)

கடவுள் தமது பக்தர்களுக்கு அறிவை அளிக்கிறார்

எப்போதும் என்னோடு ஐக்கியமாகி இருக்கிறவர்களுக்கும் அன்போடு என்னைப் போற்றுகிறவர்களுக்கும் நான் மீமெய்யியல் விஞ்ஞானம் பற்றிய அறிவை அளிக்கிறேன், அதன் மூலம் அவர்கள் என்னை அடைகிறார்கள். (10.10) அவர்களது உள் மனதில் மனசாட்சியாக உறையும் நான், அவர்களுக்கு இரக்கம் காட்டும் விதமாக ஆழ்நிலை அறிவு என்னும் விளக்கால் அறியாமையில் இருந்து பிறந்த இருளை அழிக்கிறேன். (10.11) அர்ஜுனன் கூறினான்: நீதான் மேலாம் பிரம்மம், நீதான் மேலான பரகதி, மேலான சுத்திகரிப்பவன், நித்திய தெய்வீக இருப்பு, பழம்பெரும் கடவுள், பிறவாதவன், மற்றும் எங்கும் இருப்பவன். எல்லா முனிவர்களும் இவ்வாறே உன்னைப் போற்றியுள்ளனர். நாரதர், அசிதர், தேவலர், வியாசர் மற்றும் நீயே என்னிடம் இதைக் கூறியுள்ளாய். (10.12-13)

மெய்மையின் உண்மைத் தன்மையை யாராலும் அறிய முடியாது

கிருஷ்ணா,  நீ என்னிடம் கூறிய எல்லாம் உண்மை என்று நான் நம்புகிறேன். பகவானே, தேவர்களும் பேய்களும் கூட உனது இயல்பை முற்றிலுமாக அறியவில்லை. (மேலும் பார்க்கவும் 4.06) (10.14) படைத்தவனே மற்றும் எல்லா உயிரினங்களின் பகவானே, எல்லா தெய்வீக ஆட்சியாளர்களின் கடவுளே, உன்னதனே, பேரண்டங்களின் இறைவனே, நீ மட்டுமே உன்னை நீயே அறிந்திருக்கிறாய். (10.15) ஆகவே, உன்னுடைய தெய்வீக மகிமையைவெளிப்பாடுகளை -  பற்றி உன் ஒருவனால் மட்டுமே முற்றிலுமாக விவரிக்க முடியும். அதன் மூலம் எல்லா அண்டங்களிலும் நீ பரவி வியாபித்து இருக்கிறாய். (10.16) தொடர் சிந்தனைகள் மூலம் நான் எவ்வாறு அறிவது பகவானே? பகவானே, எந்த வெளிப்பாட்டின் மூலமாக நான் உன்னை சிந்திப்பது? (10.17) பகவானே, உன்னுடைய யோக ஆற்றல் மற்றும் மகிமையை மீண்டும் விவரமாக எனக்கு விளக்கு. ஏனெனில், உன்னுடைய அமுதம் போன்ற சொற்களால் நான் இன்னும் திருப்தி அடையவில்லை. (10.18)

எல்லாம் முழுமையின் ஒரு வெளிப்பாடே

மேலான பகவான் கூறினார்: அர்ஜுனா, என்னுடைய வெளிப்பாடுகளுக்கு முடிவில்லை, ஆதலால் என்னுடைய முக்கியமான தெய்வீக வெளிப்பாடுகளை உனக்கு விளக்குவேன். (10.19) அர்ஜுனா, எல்லா உயிரினங்களின் உள் மனதில் உறையும் ஆன்மா நானே. நானே எல்லா உயிரினங்களின் தொடக்கமும், நடுவும், முடிவும் ஆகும். (10.20) நானே ஆதாரம், நானே சுடர்களின் மத்தியில் பிரகாசிக்கும் சூரியன், நானே இயற்கை இகந்து காற்றைக் கட்டுப்படுத்துபவன், நானே விண்மீன்களுக்கு மத்தியில் சந்திரன். (10.21) நானே வேதங்கள், நானே தெய்வீக ஆட்சியாளர்கள், புலன்களின் மத்தியில் மனமும் நானே, உயிரினங்களின் மனசாட்சி நானே. (10.22) நானே சிவனாகிய கடவுள், நானே செல்வத்தின் கடவுள், நானே நெருப்பு மற்றும் கடல்களின் கடவுள். (10.23) அர்ஜுனா, நான்தான் பூசாரி மற்றும் தெய்வீக கட்டுப்பாட்டாளர்களின் படைத்தலைவன். நீர் நிலைகளில் பெருங்கடல் நானே. (10.24) மகா முனிவர்களின் மத்தியில் நான்தான் பிருகு முனிவன்; சொற்களின் நடுவில் நானே தெய்வீக ஓரசை ஒலியான ஓம்; ஆன்மீக ஒழுக்கங்களில் நான்தான். மந்திரங்களின் (ஜாப்பா) திரும்பத்திரும்ப ஒலிக்கும் மௌனமான எதிரொலி; மேலும் மலைகளின் மத்தியில் நான்தான் இமயமலை. (10.25)

தெய்வீக வெளிப்படுகள் பற்றிய ஒரு சுருக்கமான விளக்கம்

மரங்களுக்கு இடையில் நானே புனித அத்தி மரம், முனிவர்களுக்கு நடுவில் நாரதர், மேலும் பிற தெய்வீக ஆட்சியாளர்கள் அனைவரும் நானே. (10.26) விலங்குகளுக்கு நடுவே நானே தெய்வீக விலங்கு மற்றும் ஆண்களுக்கு மத்தியில் அரசன். ஆயுதங்களுக்கு நடுவில் நானே இடி, மற்றும் இனப்பெருக்கத்தில் காமன் நானே. (10.27-28) நானே நீர்தெய்வம் மற்றும் மானேஸ். நானே மரணத்தைக் கட்டுப்படுத்துபவன். நானே என்னுடைய மாபெரும் பக்தன் பிரகலாதன். குணமாக்குவர்கள் மத்தியில் நானே மரணம், விலங்குகளின் நடுவில் சிங்கம், பறவைகளின் நடுவில் பறவைகளின் அரசன். (10.29-30) சுத்திகரிப்பான்களில் நானே காற்று மற்றும் போர்வீரர்களுக்கு நடுவில் பகவான் ராமன். மீன்களுக்கு நடுவில் நானே முதலை மற்றும் ஆறுகளுக்கு மத்தியில் புனித கங்கை நீர். (10.31)

அர்ஜுனா, எல்லா படைப்புகளின் தொடக்கமும், மையமும், முடிவும் நானே ஆகும். அறிவின் மத்தியில் நானே மேலான சுயத்தின் அறிவு. தர்க்கவாதிகளின் தர்க்கம் நானே. (10.32) எழுத்துக்களின் மத்தியில் அகரம் நானே. கூட்டு சொற்களில் நானே துவந்தம் (இருமை). நானே முடிவற்ற காலம். எல்லாவற்றையும் தாங்குபவன் நானே, மேலும் எனக்கு எல்லா பக்கங்களிலும் முகம் உண்டு (அல்லது யாவுமறிந்தவன்). (10.33) எல்லாவற்றையும் விழுங்கும் மரணம் நானே மற்றும் எதிர்கால உயிரினங்களின் தோற்றமும் ஆகும். புகழ், செழிப்பு, பேச்சு, நினைவாற்றல், அறிவு, முடிவு மற்றும் மன்னிப்பு ஆகிய ஏழு தன்மைகளை ஆளும் காவல் தேவதைகளான ஏழு தெய்வங்கள் நானே. (10.34). வேத கீர்த்தனைகளின் மத்தியில் பிரகத்சாமா நானே. வேத மந்திரங்களில் காயத்திரி மந்திரம் நானே. மாதங்களில் நான் மார்கழி. பருவங்களில் நான் வசந்தம். (10.35) வஞ்சகரில் நான் சூதாட்டம், உன்னதமானோரின் உன்னதம்,  வெற்றியாளர்களின் வெற்றி, உறுதியானோரின் உறுதி, நல்லோர்களின் நன்மை. (10.36)

விருஷ்ணி குடும்பத்தின் மத்தியில் நான் கிருஷ்ணன், பாண்டவர்களில் அர்ஜுனன், முனிவர்களின் நடுவில் வியாசர், மற்றும் கவிஞர்களின் மத்தியில் உசனஸ். (10.37). ஆட்சி செய்வர்களின் ஆற்றல், வெற்றி தேடுபவர்களின் அரசியல் புலமை, ரகசியங்களின் மத்தியில் மௌனம், அறிவுடையோரின் சுய அறிவு நானே (10.38). அர்ஜுனா, அனைத்து உயிர்களின் தோற்றம் நான். உயிருள்ள மற்றும் உயிரற்ற எதுவும் நானின்றி இருக்க முடியாது. (மேலும் பார்க்கவும் 7.10 மற்றும் 9.18) (10.39)

வெளிப்படுத்தப்பட்ட படைப்பு முழுமையின் ஒரு மிகச் சிறிய பின்னமே

அர்ஜுனா, என் தெய்வீக வெளிப்பாடுகளுக்கு முடிவில்லை. என் தெய்வீக வெளிப்பாடுகளின் விரிவில் இது ஒரு சுருக்கமான விளக்கமே. (10.40) எவற்றிற்கெல்லாம் மகிமை, பிரகாசம் மற்றும் ஆற்றல் அளிக்கப்பட்டிருக்கிறதோ அவை எல்லாம் என் உன்னதத்தின் வெளிப்பாட்டின் ஒரு சிறு பின்னமே. (10.41) அர்ஜுனா, இந்த விரிவான அறிவிற்கான தேவை என்ன? என் தெய்வீக ஆற்றலின் (யோக மாயை) ஒரு சிறு பின்னத்தைக் கொண்டே நான் இந்த முழு பேரண்டத்தையும் தாங்குகிறேன். (10.42)

11.  பேரண்ட வடிவத்தின் தரிசனம்

அர்ஜுனன் கூறினான்: என் மேல் உள்ள இரக்கத்தால் நித்திய பிரம்மத்தைப் பற்றிய உன்னத ரகசியத்தை நீ பேசிய ஆழமான வார்த்தைகளால் என் மனமயக்கம் தீர்ந்தது. (11.01) கிருஷ்ணா, நான் உன்னிடம் இருந்து உயிர்களின் தோற்றம் மற்றும் அழிவையும் உன் அழிவற்ற மகிமையையும் பற்றி விவரமாக கேட்டுள்ளேன். (11.02)

கடவுளின் தரிசனமே தேடும் ஒருவனின்

இறுதி இலக்கு

பகவானே, நீ கூறியபடியே நீ இருக்கிறாய், இருப்பினும் நான் உன்னுடைய தெய்வீகப் பேரண்ட வடிவத்தை காண விரும்புகிறேன், மேலான பிரம்மமே. (11.03) பகவானே, உன் விஸ்வரூபத்தை நான் பார்ப்பது சாத்தியம் என்று நீ நினைத்தால், யோகிகளின் பகவானே, உன்னுடைய எல்லையற்ற வடிவத்தை எனக்குக் காட்டு. (11.04) மேலான பகவான் கூறினார்: அர்ஜுனா, என்னுடைய நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான பல்வேறுவகையான தெய்வீக வகைகளின் பலவித வண்ணங்களையும் வடிவங்களையும் காண். அனைத்து தேவர்களையும் நீ இதுவரை கண்டிராத பல அதிசயங்களையும் காண். மேலும் முழு படைப்பையும்உயிருள்ளவை, உயிரற்றவை, மற்றும் நீ பார்க்க விரும்புகின்றவைகளை எல்லாம்என்னுடைய உடலில் எல்லாவற்றையும் ஓரிடத்தில் காண். (11.05-07) ஆனால் என்னை நீ பௌதிக கண்ணால் பார்க்கமுடியாது; ஆகவே என்னுடைய உன்னதமான ஆற்றலையும் மகிமையையும் காண நான் உனக்கு தெய்வீகக் கண்ணை அளிக்கிறேன். (11.08)

பகவான் கிருஷ்ணன் தமது பேரண்ட  வடிவத்தைக் காட்டுகிறார்

சஞ்சயன் கூறினான்: அரசனே, இவற்றைக் கூறியபின், பகவான் கிருஷ்ணன், மாய ஆற்றலாம் யோகாவின் மாபெரும் பகவான், தனது உன்னத கம்பீரமான வடிவத்தை அர்ஜுனனுக்குக் காட்டினார். (11.09) பல வாய்களும் மற்றும் கண்களும் கொண்ட பகவானின் அனைத்தும் தழுவிய வடிவத்தையும், மேலும் எண்ணிலா தெய்வீக ஆபரணங்களோடு, பல தெய்வீக ஆயுதங்களைப் பிடித்தவனாய், தெய்வீக மாலைகள் மற்றும் ஆடைகளுடன், தெய்வீக நறுமணப்பொருட்கள் மற்றும் எண்ணெய்களால் அபிஷேகம் பெற்று, முற்றிலும் அற்புதங்களுடன் கூடிய பல அற்புத தரிசனங்களுடன், எல்லையற்ற கடவுளை எல்லா பக்கங்களிலும் முகங்களோடு கண்டான். (11. 10-11) வானத்தில் ஆயிரம் சூரியன்கள் ஒரே நேரத்தில்  உதித்தாலும் இதற்கு நிகராக இருக்க முடியாது என்று இருந்தது இந்த உன்னத பிரம்மத்தின் மகிமை. (11.12) தெய்வீக அரசர்களின் கடவுளான கிருஷ்ணனின் எல்லையற்ற உடலில் பல வகைகளில் பிரிந்துகிடக்கும், ஆனால் ஒன்றாக நிற்கும் (எல்லாம்) ஒன்றில் (மற்றும் அனைத்திலும் ஒன்றாய்) நிற்கும் முழு பேரண்டத்தையும் அர்ஜுனன் பார்த்தான். (மேலும் பார்க்கவும் 13.16 மற்றும் 18.20) (11.13)

ஒருவன் கடவுளைப் பார்க்க தயாராக அல்லது தகுதியாக இல்லாமல் இருக்கலாம்

 (பகவானின் பேரண்ட தோற்றத்தைப் பார்த்த பின்) அர்ஜுனன் வியப்பால் நிறையப்பெற்றான்; அவனுக்கு மயிர்கூச்செறிந்தது, தலைதாழ்த்தி பகவானை வணங்கி கைகளைக் கூப்பிப் பிரார்த்தித்தான். (11.14) அர்ஜுனன் கூறினான்: பகவானே, உன் உடலில் நான் அனைத்து இயற்கை இகந்த தேவர்களையும், முனிவர்கள், வானுலக சர்ப்பங்கள், சிவபெருமான் மற்றும் தாமரையில் அமர்ந்திருக்கும் பகவான் பிரமன் போன்ற எண்ணற்றவர்களைக் கண்டேன். (11.15) பேரண்டத்தின் பகவானே, நான் உன்னை எங்கும் பலவடிவங்களில், பல கரங்களோடு, வயிற்றோடு, முகங்களோடு மற்றும் கண்களோடு கண்டேன்.  விஸ்வரூபம், என்னால் உன் தொடக்கம் அல்லது மையம் அல்லது முடிவைக் காண முடியவில்லை. (11.16) உன்  மணிமுடி, தடி, வட்டு, மற்றும் காணக்கூசும், அளவிட முடியாத பிரகாசம் மற்றும் சூரியனின் மாபெரும் கொழுந்துவிட்டெரிவது போன்ற உன் மகிமையைச் சுற்றிலும் கண்டேன். (11.17)

உணர்ந்தறியக்கூடிய உன்னத பிரம்மம் நீ என்று நான் நம்புகிறேன். நீயே பேரண்டத்தின் இறுதியான அடைக்கலம். நீயே நித்திய பிரம்மம். நித்திய ஒழுங்கை (தர்மம்) காப்பவன். (11.18) எல்லையில்லாத ஆற்றலோடும், தொடக்கமும், மையமும், அல்லது இறுதியும் இல்லாதவனாய் நான் உன்னைக் கண்டேன். பல கரங்களோடும், சூரியனையும் சந்திரனையும் உன் கண்களாகவும், உன் வாயை எரியும் நெருப்பாகவும், பேரண்டத்தை அதன் காந்தியால் காய்ப்பதாகவும் கண்டேன் (11.19) பகவானே, வானத்துக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் முழு வெளியிலும் எல்லா திசைகளிலும் நீ பரவி இருக்கிறாய். உன்னுடைய அதியற்புத மற்றும் பயங்கரமான வடிவத்தைக் கண்டு மூவுலகங்களும் அச்சத்தால் நடுங்குகின்றன. (11.20) இயற்கை இகந்த தேவர்களின் கூட்டம் உன்னுள் நுழைகின்றது. சிலர் கைகூப்பி உன் பெயரையும் மகிமையையும் அச்சத்தோடு பாடிப் புகழ்கின்றனர். எண்ணற்ற முழுமை பெற்றவர்கள் உன்னை வாழ்த்தி, தொழுது அளவிலா புகழ்ச்சியுடன் உன்னைப் போற்றுகின்றனர். (11.21) தேவர்கள் ஆச்சரியத்தோடு உன்னை நோக்கிப் பார்க்கின்றனர். பல வாய்கள், கண்கள், கரங்கள், தொடைகள், பாதங்கள், வயிறுகள், மற்றும் பல அச்சமூட்டும் கொம்புகள், கொண்ட உன் எல்லையற்ற வடிவத்தைக் கண்டு உலகங்கள் அச்சத்தால் நடுங்குகின்றன, நானும் அப்படியே, வல்லமை வாய்ந்த பகவானே. (11.22-23)

பேரண்ட வடிவத்தைக் கண்டு அச்சமடைந்த அர்ஜுனன்

கிருஷ்ணா, அகலமாகத் திறந்திருக்கும் வாயும் பெரிய மின்னும் கண்களுமாய் உன் ஒளிவிடும் வண்ணமயமான  வடிவம் வானத்தைத் தொடுவதைக் கண்டு நான் அச்சமடைந்தேன் மேலும் எனக்கு அமைதியும் துணிச்சலும் இல்லாமல் போயிற்று. (11.24) பேரண்ட அழிவின் நெருப்பைப்போல எரியும் அச்சமூட்டும் தந்தங்களுடன் உன் வாயைக் கண்டு நான் திசை காணும் உணர்வை இழந்து போகிறேன் மேலும் ஆறுதலும் கிடைக்கவில்லை. தெய்வீக ஆட்சியாளர்களின் பகவானே, பேரண்டத்தின் அடைக்கலமே, என்மேல் இரக்கம் கொள் (11.25) என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களும், அந்தப் பக்கத்தில் இருக்கும் திரளான அரசர்களும் வீரர்களும், நம் பக்கத்தில் இருக்கும் முக்கிய வீரர்களும், விரைவாக பயங்கரமான தந்தங்கள் கொண்ட அச்சமூட்டும் உன் வாய்க்குள் செல்கின்றனர். சிலருடைய தலைகள் தந்தங்களுக்கு இடையில் சிக்கி அவர்களுடைய தலைகள் நசுங்குகின்றன (11.26-27)

இந்த மானிட உலகின் வீரர்கள் ஆறுகள் கடலுக்குள் நுழைவது போல் உனது எரியும் வாய்க்குள் செல்கின்றனர். (11.28) அந்துப்பூச்சிகள் அழிவதற்காக பிரகாசமான தீப்பிழம்புக்குள் வேகமாக செல்வது போல் இந்த அனைத்து மக்களும் உன் வாய்களுக்குள் விரைவாக செல்கின்றனர். (11.29) நீ எல்லா உலகங்களையும் உன் எரியும் வாய்களால் நக்கித் துடைக்கிறாய். எல்லா புறங்களில் இருந்தும் அவற்றை விழுங்குகிறாய். கிருஷ்ணா, உன் ஆற்றல் வாய்ந்த பிரகாசம் பேரண்டம் முழுவதையும் பேரொளியால் நிறைத்து அவற்றை எரிக்கிறது. (11.30) இத்தகைய பயங்கரமான வடிவத்தில் இருக்கும்நீ யார்? உனக்கு என் வணக்கங்கள். அனைத்து தேவர்களிலும் சிறந்தவனே, இரக்கமாயிரு! நான் உன்னை புரிந்துகொள்ள விரும்புகிறேன், ஏனெனில் உன் திட்டம் எனக்குத் தெரியாது. (11.31)

நாம் வெறும் தெய்வீகக் கருவி மட்டுமே

மேலான பகவான் கூறினார்: நானே மரணம், இந்த உலகத்தை அழிக்கும் வலியவன். நான் இந்த மக்கள் யாவரையும் அழிக்க வந்திருக்கிறேன். போரில் நீ பங்கேற்கவில்லை என்றாலும் எதிரில் அணிவகுத்து நிற்கும் வீரர்கள் இல்லாமல் ஒழிவார்கள். (11.32) ஆகவே எழுந்து புகழ் பெறுவாயாக. உன் பகைவர்களை வெற்றிகொள். செழிப்பான ராஜ்யத்தை அனுபவி.  இந்த வீரர்கள் அனைவரும் ஏற்கெனவே என்னால் அழிக்கப்பட்டவர்கள். அர்ஜுனா, நீ என் கருவி மட்டுமே. (11.33) என்னால் ஏற்கெனவே கொல்லப்பட்ட இந்த பெரும் வீரர்களை எல்லாம் கொல். அஞ்சாதே. போரில் நீ உன் எதிரிகளை மேற்கொள்வாய், ஆகவே, போரிடு! (11.34)

பேரண்ட வடிவத்திடம் அர்ஜுனனின் பிரார்த்தனைகள்

சஞ்சயன் கூறினான்: கிருஷ்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட  முடிமன்னனாகிய  அர்ஜுனன், கூப்பிய கைகளுடன், நடுங்கி, அச்சத்தால் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து அடைத்த குரலோடு கிருஷ்ணனிடம் பேசினான். (11.35) அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா, இந்த உலகம் உன்னில் மகிழ்ந்து உன்னைப் புகழ்வது சரியானதே. பிசாசுகள் அஞ்சி எல்லா திசைகளிலும் ஓடுகின்றன. முழுமை அடைந்தோர் கூட்டம் தலைதாழ்த்தி வணங்குகிறது. (11.36) பருப்பொருள் உலகைப் படைத்த பிரம்மனை விடவும் பெரியவனான மூல படைப்பாளியான உன்னை பேரான்மாக்கள் வணங்குகின்றன - அவர்கள் ஏன் உன்னை வணங்கக் கூடாது? எல்லையற்ற பகவானே, எல்லா ஆளும் தேவர்களுக்கும் இறைவனே, பேரண்டத்தின் அடைக்கலமே, சத்தும் (நித்தியம்) நீயே மற்றும் அசத்தும் (நிலையற்றது) நீயே, மேலும் சத்துக்கும் அசத்துக்கும் மேலான பிரம்மமும் நீயே (மேலும் பார்க்கவும் 9.19 மற்றும் 13.12) (11.37)

நீயே முதல் கடவுள், மிகவும் பழமையானவன். பேரண்டம் அனைத்துக்கும் இறுதி அடைக்கலம். நீயே அறிந்தவன், அறிவின் பொருள், மற்றும் மேலான அடைக்கலம். எல்லையற்ற வடிவு கொண்ட இறைவனே, பேரண்டம் முழுவதும் நீ பரவி இருக்கிறாய். (11.38) நீயே மரணத்தை, தீயை, காற்றை, நீர் தெய்வத்தை, சந்திர கடவுளை, படைப்பவனான பிரமனை மட்டுமல்லாமல் பிரம்மனின் தந்தையை நீதான் கட்டுப்படுத்துகிறாய். உனக்கு ஆயிரம் முறை வணக்கங்கள், மேலும் மீண்டும், மீண்டும் உனக்கு வணக்கம் (11.39). பகவானே, முன்னால் இருந்தும் பின்னல் இருந்தும் உனக்கு என் வணக்கங்கள். பகவானே, எல்லா பக்கங்களில் இருந்தும் உனக்கு என் வணக்கங்கள். நீ எல்லையற்ற வீரமும் கரையற்ற வலிமையும் கொண்டவன். நீ எல்லாவற்றையும் ஊடுறுவி நிற்பவன்; ஆகையால், நீ எங்கும் எல்லாவற்றிலும் இருக்கிறாய். (11.40)

உனது மகத்துவத்தை அறியாமல் உன்னை வெறும் என் நண்பனாக மட்டுமே கருதி கிருஷ்ணா, யாதவா, நண்பனே என்று வெறும் பாசத்தினால் அல்லது அறியாமையால் பலபடியாகக் கூப்பிட்டேன். (11.41) விளையாடும் போது வேடிக்கையாக, படுக்கையில் ஓய்வெடுக்கும் போது, உட்கார்ந்திருக்கும்போது, உண்ணும் போது, தனியாக அல்லது பிறர் முன்னால் நான் உன்னை எந்த விதத்தில் அவமதித்து இருந்தாலும், கிருஷ்ணா, அளவிட முடியாதவனே, உன் மன்னிப்பை வேண்டுகிறேன். (11.42) உயிருள்ள மற்றும் உயிரற்ற உலகின் தந்தை நீயே, மற்றும் வழிபட வேண்டிய மகத்தான குருவும் நீயே. மூன்று உலகங்களிலும் உனக்கு இணையானவர் எவரும் இல்லை; உன்னை விடப் பெரியவனாக யார் இருக்க முடியும், ஒப்பிட முடியாத மகிமை கொண்டவனே? (11.43)

ஆகவே, வழிபடத்தக்க  பகவானே, தலைதாழ்ந்து வணங்கி, நெடுஞ்சாண்கிடையாய் உன் முன்னால் விழுந்து இரக்கத்தை வேண்டுகிறேன். ஒரு தகப்பன் மகனைப் பொறுத்துக்கொள்வது போலவும், ஒரு நண்பனை நண்பன் பொறுத்துக்கொள்வது போலவும், ஒரு கணவன் மனைவியைப் பொறுத்துக்கொள்வது போலவும், பகவானே, என்னை நீ பொறுத்துக்கொள்வாயாக. (11.44) ஒரு போதும் காணாதவற்றை கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன், ஆனாலும் இன்னும் என் மனம் அச்சத்தால் கலக்கம் அடைகிறது. ஆகவே, தேவர்களின் கடவுளே, பேரண்டத்தின் அடைக்கலமே, என் மேல் இரக்கமாயிரு மேலும் உனது நான்கு கர வடிவத்தை எனக்குக் காட்டு. (11.45)

ஒருவன் கடவுளை எந்த வடிவத்திலும் காணலாம்

ஒரு கிரீடத்துடன், கதாயுதம் தாங்கி, கையில் சக்கரத்துடன் நான் உன்னைக் காண விரும்புகிறேன். பகவானே, ஆயிரம் கரங்களைக் கொண்டவனே, பேரண்டப் பெருவடிவே, தயவுசெய்து நான்கு கர வடிவில் தோன்றுவாயாக. (11:46) மேலான பகவான் கூறினார்: அர்ஜுனா, உன்னிடம் மகிழ்ச்சி கொண்டு என்னுடைய சொந்த யோக ஆற்றலினால் இந்தக் குறிப்பிட்ட, மேலான, மின்னும், அனைத்தும் தழுவிய மற்றும் எனது முந்தைய வடிவத்தை உனக்குக் காட்டினேன். அதை உன்னைத் தவிர வேறு யாரும் இதுவரை பார்த்ததில்லை. (11.47) அர்ஜுனா, வேதங்களை படிப்பதனாலும், வேள்வியினாலும், கொடையாலும், சடங்காலும், அல்லது கடுமையான துறவாலும் இந்த மனித உலகில் உன்னைத் தவிர வேறு யாரும் என்னை இந்தப் பேரண்டப் பெருவடிவில் காண முடியாது. (11.48)

இது போன்ற என்னுடைய பயங்கரமான தோற்றத்தில் பார்த்ததானால் கலங்கி குழப்பமடைய வேண்டாம். அச்சமில்லத மகிழ்ச்சியான மனதோடு இப்போது என் நான்கு கர வடிவத்தைப் பார். (11.49) சஞ்சயன் கூறினான்: இவ்வாறு அர்ஜுனனிடம் கூறிவிட்டு, கிருஷ்ணன் தன் நான்கு கர வடிவைக் காட்டினான். பின்னர் தனது தற்போதைய ரம்மியமான மனித வடிவத்தை எடுத்து, பகவான் கிருஷ்ணன், மாபெரியவன், கலக்கம் அடைந்திருந்த அர்ஜுனனைத் தேற்றினான். (11.50) கிருஷ்ணா, உன்னுடைய இந்த சுந்தரமான மனித வடிவத்தைக் கண்டு, நான் இப்போது மன அமைதியுற்றேன் மேலும் இப்போது நான் இயல்புநிலைக்கு வந்துவிட்டேன். (11.51)

அன்புடைய பக்தியினால் கடவுளைக்

காண முடியும்

மேலான பகவான் கூறினார்: நீ இப்போது பார்த்த எனது இந்த (நான்கு கர) வடிவம் உண்மையில் பார்ப்பதற்குக் கடினமானது. தேவர்களும் இந்த வடிவத்தைப் பார்க்க எப்போது விருப்பம் உள்ளவர்களாக இருக்கின்றனர். (11.52) நீ இப்போது பார்த்த எனது இந்த நான்கு கர வடிவத்தை வேதங்களைக் கற்பதாலும், அல்லது தவத்தாலும் அல்லது கொடைச் செயல்களாலும் அல்லது சடங்காச்சாரங்களை ஆற்றுவதாலும் கூட பார்க்க முடியாது. (11.53) அர்ஜுனா, இருப்பினும், ஒருமனமான பக்தியின் மூலம் மட்டுமே, இந்த வடிவத்தில் என்னைப் பார்க்கலாம், உட்சாரத்தில் அறியலாம், மேலும் என்னை அடையலாம். (11.54) அர்ஜுனா, எல்லா வேலைகளையும் எனக்கு அர்ப்பணிக்கும் ஒருவன், மேலும் யாருக்கு நான்தான் மேலான இலக்காக இருக்கிறேனோ, யாருக்குப் பந்தங்கள் எதுவும் இல்லையோ மேலும் யார் எந்த உயிர்கள் மேலும் விரோதம் இல்லாமல் இருக்கிறானோ அவன் என்னை அடைகிறான். (மேலும் பார்க்கவும் 8.22) (11.55)

12.  பக்தி வழி

தோற்றமுள்ள அல்லது தோற்றமற்ற கடவுளில் யாரை ஒருவன் வணங்க வேண்டும்?

அர்ஜுனன் கூறினான்: உன்னை (கிருஷ்ணனாக, உன் தனிப்பட்ட அம்சத்தை) வணங்கும் நிலையான பக்தர்களா, அல்லது உனது தனி அம்சம் அற்ற நித்திய பிரம்மத்தை வணங்குபவர்களா, இவர்களில் யாருக்கு யோகத்தின் சிறந்த அறிவு உள்ளது? (12.01) மேலான பகவான் கூறினார்: என்னைத் தனிப்பட்ட கடவுளாக தங்கள் மனதை என்மேல் நிலைநிறுத்தி மேலான நம்பிக்கை கொண்டு வணங்கும் உறுதியான பக்தர்களையே நான் சிறந்த யோகிகளாகக் கருதுகிறேன். (மேலும் பார்க்கவும் 6.47) (12.02), அனைத்துப் புலன்களையும் அடக்கி, எல்லா சூழ்நிலைகளிலும் ஒரேமனமாய், அனைத்து உயிர்களின் நலனிலும் ஈட்டுபட்டிருந்து, மாற்றமுடியாத, விவரிக்க முடியாத, புலனாகாத, எங்கும் இருக்கின்ற, புத்திக்கு எட்டாத, மாறாத, மற்றும் அசைக்கமுடியாத நித்திய பிரம்மத்தை வணங்குகிறவர்களும் என்னை அடைகிறார்கள். (12.03-04)

 

கடவுளின் தனி வடிவத்தை

வணங்கக் காரணங்கள்

தங்கள் மனதை தனியுரு அற்ற, வெளிப்படாத, நித்திய பிரம்மத்தின் மேல் பொருத்துபவர்களுக்கு சுய உணர்தல் மிகவும் கடினம், ஏனெனில் உருவைக் கொண்டுள்ளவர்களுக்கு வெளிப்படாத கடவுளை சிரமத்துடனேயே உணர்ந்துகொள்ள முடியும்.  (12.05) அர்ஜுனா, ஆனால் என்னைத் தங்கள் தனிக்கடவுளாக எண்ணி மாறாத பக்தியோடு வணங்கி, எல்லா செயல்களையும் எனக்கு அர்ப்பணித்து, என்னை மேலானவன் எனக் கருதி, என்னைத் தியானிப்பவர்களை மரணம் மற்றும் மறுபிறவி என்பவற்றின் கடலாக இருக்கும்  உலகத்தில் இருந்து நான் விரைவாக விடுவிக்கிறேன்அவர்கள் சிந்தனைகள் என தனி உருவில் பொருந்தி இருக்கின்றன. (12.06-07)

கடவுளை அடையும் நான்கு வழிகள்

ஆகவே, உன்மனதை என்னில் நிலைப்படுத்து, உன் அறிவு என் மேல் மட்டுமே இருக்கட்டும் (தியானம் மற்றும் சிந்தனை மூலம்). அதன்பின்னர், நீ நிச்சயமாக என்னை அடைவாய். (12.08) அர்ஜுனா, உன் மனதை என் மேல் உன்னால் குவிக்க முடியவில்லை என்றால், உனக்குப் பொருத்தமான (வேறு) ஆன்மீக நெறிமுறைகளைக் கடைபிடிப்பதின் மூலம் என்னை அடைய நாடுவாயாக. (12.09) ஏதாவது ஆன்மீக நெறிமுறைகளைக் கடைபிடிக்கக்கூட முடியாவிட்டால் உன் பணிகளை எனக்காக செய்ய எண்ணு. எனக்காக செயல் ஆற்றுவதன் மூலம் (சுயநல நோக்கங்கள் இல்லாமல் ஒரு கருவியாக எனக்கு வெறும் சேவை செய்து என்னை மகிழ்ச்சிப்படுத்தி) நீ முழுமை பெறுவாய். (மேலும் பார்க்கவும் 9.27, 18.46) (12.10) உன்னால் எனக்காக செயலாற்ற முடியவில்லை என்றால், பின்னர் என் சித்தத்துக்கு சரணாகதி அடைந்து, அடக்கிய மனதுடன் (எல்லா விளைவுகளையும் கடவுளின் அருள் என்று அமைதியாக ஏற்று) அனைத்து செயல்களின் பலன்களின் (மேல் உள்ள பந்தத்தையும் கவலையையும்) துறப்பாயாக. (12.11)

கர்ம யோகம்தான் சிறந்த வழி

வெறும் சடங்காச்சாரங்களை விடவும் வேதங்களைப் பற்றிய அறிவு சிறந்தது. வேத அறிவை விட தியானம் சிறந்தது. செயல்களின் பலன்களின் மேல் உள்ள சுயநல பந்தத்தைத் தியாகம்செய்வது அல்லது துறப்பது தியானத்தை விட சிறந்தது. தியாகத்துக்குப் பின் உடனே அமைதி தொடர்கிறது. (மேலும் பார்க்கவும் 18.02, 18.09) (12.12)

ஒரு பக்தனின் பண்புநலன்கள்

யாரொருவன் எந்த உயிரினங்களையும் வெறுப்பதில்லையோ, யார் நட்புடனும் இரக்கத்துடனும்நான்” “எனதுஎன்ற எண்ணங்கள் இல்லாமல், வலியிலும் இன்பத்திலும் ஒரே மனதாய், மன்னிக்கும் பண்புடன் இருக்கிறானோ, மற்றும் யோகிகளில் எவனொருவன் எப்போதும் திருப்தியுடன் இருக்கிறானோ, யாரொருவன் மனதை அடக்கியுள்ளானோ, தன் முடிவில் உறுதியுடன் எவனொருவன் இருக்கிறானோ, எவனுடய மனமும் அறிவும் எப்போதும் என்னில் நிலைத்திருக்கிறதோ, யார் என்னில் பக்தியோடு இருக்கிறானாஅந்த பக்தனே எனக்குப் பிரியமானவன் (12.13-14) யாரொருவனால் பிறர் கலக்கமடையாமல் இருக்கிறார்களோ மற்றும் யாரொருவன் பிறரால் கலக்கமடையாமல் இருக்கிறானோ, யாரொருவன் மகிழ்ச்சி, பொறாமை, பயம் மற்றும் கவலை இல்லாமல் இருக்கிறானோ அவனும் எனக்குப் பிரியமாய் இருக்கிறான். (12. 15) யாரொருவன் ஆசை இல்லாமல், தூயவனாக, ஞானத்துடன், பாரபட்சம் இல்லாமல், கவலை இல்லாமல் இருக்கிறானோ; எல்லா பொறுப்புகளையும் ஆற்றியபின் தன்பங்கை எவனொருவன் துறக்கிறானோஅத்தகைய பக்தன் எனக்குப் பிரியமானவன். (12.16) எவனொருவன் களிகூருவதும் வேதனைப்படுவதும் இல்லையோ, விரும்புவதும் வெறுப்பதும் இல்லையோ, எவனொருவன் நன்மை தீமைகளை துறந்துவிட்டானோ மேலும் எவன் முழு பக்தியோடு இருக்கிறானோஅவனே எனக்குப் பிரியமானவன். (12.17) எவனொருவன் நன்பனிடமும் எதிரியிடமும், கௌரவத்திலும் இழிவிலும், வெப்பத்திலும் குளிரிலும், இன்பத்திலும் வலியிலும் ஒன்று போல் இருக்கிறானோ, யாரொருவன் பந்தத்தில் இருந்து விடுபட்டுள்ளானோ, கடிந்துகொள்ளப்படும்போதும் புகழப்படும்போதும் எவனொருவன் ஒரேமாதிரி இருக்கிறானோ, மௌனமாக, எது கிடைத்தாலும் திருப்தியாக, ஒரு இடம் (ஒரு நாடு, அல்லது ஒரு வீட்டோடு) பந்தப்படாமல், அமைதியாக, முழுபக்தியோடு இருக்கும் ஒருவனே எனக்குப் பிரியமானவன். (12.18-19)

ஒருவன் முழுமனதுடன் தெய்வீகப் பண்புகளை மேம்படுத்த முயல வேண்டும்

ஆனால், என்னைத் தங்கள் மேலான இலக்காய்க் கொண்டு மேற்கூறிய நல்லொழுக்கங்கள் என்னும் அமுதத்தைப் பின்பற்றும் (அல்லது முழுமனதுடன் மேம்படுத்த முயலும்) நம்பிக்கையுள்ள பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள். (12.20)

13.  படைப்பும் படைத்தவரும்

படைப்பின் கொள்கை

மேலான பகவான் கூறினார்: அர்ஜுனா, இந்த பௌதிக உடல், இந்தச் சிறு பேரண்டம், படைப்பின் களம் என்று கூறப்படலாம். படைப்பைப் பற்றி அறிந்தவன் படைப்பாளி என்று மெய்யறிந்த முனிவர்களால்அழைக்கப்படுகிறான். (13.01) அர்ஜுனா, எல்லா படைப்புகளையும் படைத்தவன் நான் என்று என்னை அறிந்துகொள். படைத்தவர் மற்றும் படைப்பைப் பற்றிய உண்மை அறிதலே என்னால் ஆழ்நிலை (அல்லது மீவியற்பியல்) அறிவு எனக் கருதப்படுகிறது (13.02) படைப்பு என்றால் என்ன, அது எப்படி இருக்கிறது, அதன் உருமாற்றங்கள் எவை, அதன் மூலாதாரம் எது, யார் அந்த படைப்பாளி, அவருடைய ஆற்றல்கள் என்னஎல்லாவற்றையும் என்னிடம் இருந்து சுருக்கமாகக் கேள். (13.03) வேத கீர்த்தனைகளிலும், பிரம்ம சூத்திரத்தின் முடிவான இறுதி வசனத்திலும் முனிவர்கள் படைப்பு மற்றும் படைத்தவனைப் பற்றி வெவ்வேறு வகையில் விளக்கியுள்ளனர். (13.04) முதன்மைப் பொருள் இயற்கை, பேரண்ட அறிவு, “நானெனல்அல்லது சுயம், பஞ்சபூதங்கள், பத்து உறுப்புகள், மனம், ஐந்து புலனுகர் பொருட்கள், ஆசை, வெறுப்பு, இன்பம், வலி, பௌதிக உடல், மனசாட்சி, துணிவுஇவ்வாறு முழுக் களமும் அதன் உருமாற்றங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளன (மேலும் பார்க்கவும் 7.04) (13.05-06)

நிர்வாணத்துக்கான வழிகளாக நான்மடங்கு

உன்னத உண்மை

தாழ்மை, பணிவு, அகிம்சை, மன்னிப்பு, நேர்மை, குருசேவை, தூய்மை (சிந்தனை,சொல், செயலில்), உறுதி, சுயக்கட்டுப்பாடு; புலனுகர் பொருட்கள் மீது வெறுப்பு, அகங்காரம்; இன்மை, பிறப்பின் உள்ளியல்பான வலி மற்றும் துன்பத்தைப் பற்றிய தொடர் சிந்தனைகள், முதுமை, நோய் மற்றும் இறப்பு; (13.07-08) குடும்ப உறுப்பினர்கள், வீடு போன்றவற்றின் மீது ஒட்டுதல் இல்லாத பந்தம்; விரும்பியதை மற்றும் விருப்பற்றதை அடையும் போது மாறாத அமைதி; ஒருமுக சிந்தனையுடன் என் மேல் மாறாத பக்தி, தனிமையில் சுவை, சமூக ஒன்றுகூடல் மற்றும் வம்புப்பேச்சுகளில் ஆர்வமின்மை; நித்திய பிரம்மம் பற்றிய அறிவைப் பெறுவதில் உறுதி, மற்றும் எங்கும் இருக்கும் மேலான பிரம்மத்தை எல்லா இடத்திலும் பார்த்தல்இதுவே அறிவு எனக் கூறப்படுகிறது. இதற்கு மாறானது அறியாமை ஆகும். (13.09-11)

கடவுளை உவமைகளால் மட்டுமன்றி வேறு எந்த வழியிலும் விளக்க முடியாது

அறிவின் பொருளை நான் முழுவதுமாக விவரிப்பேன்அதை அறிவதனால் ஒருவன் சாவாமையை அடைவான். தொடக்கம் இல்லாத மேலான பிரம்மம் நித்தியமானதுமில்லை (சத்) நிலையற்றதுமில்லை (அசத்) எனக் கூறப்படுகிறது. (மேலும் பார்க்கவும் 9.19, 11.37, மற்றும் 15.18) (13.12) நித்திய பிரம்மம், அவரது கரங்கள், பாதங்கள், கண்கள், தலை,வாய் மற்றும் காதுகளை எங்கும் உடையவராக இருக்கிறார்  ஏனெனில் அவர் எல்லா இடமும் பரவியுள்ளவர், எங்கும் இருப்பவர். (13.13) பௌதிக புலன் உறுப்புகள் இல்லாமலேயே அனைத்து புலனுகர் பொருட்களையும் உணரக்கூடியவர்; பந்தமில்லாதவர், மற்றும் ஆனால் எல்லவற்றையும் தாங்குபவர்; பொருள் இயற்கையின் மூன்று முறைகளும் இல்லாதவர், மற்றும் ஆனால் ஒரு வாழும் பண்புருவாகி பொருள் இயற்கையின் முறைகளை அனுபவிப்பவர். (13.14) அவர் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் உள்ளும் அதே வேளையில் புறமும் இருப்பவர். அவரது நுட்பம் காரணமாக அறியொணாதவர். மேலும்  அவரது எங்கும் இருக்கும் இயல்பால், அவர் மிக அருகில் இருக்கிறார்ஒருவரின் உள்ளத்துக்குள் வாசம் செய்கிறார்; அதே சமயத்தில் தூரமாகவும் இருப்பவர்மேலான உறைவிடத்தில். (13.15) அவர் பிரிவு படாதவர், மற்றும் ஆனால் உயிர்களுக்குள் பிரிவுண்டு இருப்பது போல் காணப்படுகிறார். அவர், அறிவின் பொருள், படைக்கும் பிரம்மன் போலவும், தாங்கும் விஷ்ணுவைப் போலவும், அனைத்துயிர்களையும் அழிக்கும் சிவனைப் போலவும் காணப்படுகிறார். (மேலும் பார்க்கவும் 11.13 மற்றும் 18.20) (13.16)

மேலான பிரம்மமே எல்லா ஒளிக்கும் ஆதாரம். அவர் இருளுக்கு அப்பாற்பட்டவர் எனக் கூறப்படுகிறார் (அறியாமை அல்லது மாயை). அவரே சுய அறிவு, சுய அறிவின் பொருள், அனைத்து உயிர்களின் உள் மனதில் (அல்லது இயல்பான இதயத்தில் மனசாட்சியாக) அமர்ந்திருக்கிறார். (மேலும் பார்க்கவும் 15.06 மற்றும் 15.12) (13.17) இவ்வாறு படைப்பு, அறிவு மற்றும் அறிவின் பொருள் சுருக்கமாக விளக்கப்பட்டது. இதைப் புரிந்துகொண்டு என் பக்தன் என் மேலான வீட்டை அடைகிறான். (13.18)

மேலான ஆன்மா, ஆன்மா, பொருள் இயற்கை மற்றும் தனிப்பட்ட ஆன்மா

பொருள் இயற்கை மற்றும் ஆத்மா ஆகிய இரண்டும் தொடக்கமற்றவை என அறிக. அனைத்து வெளிப்பாடுகள் மற்றும் முறைகள் அல்லது குணங்கள் என அழைக்கப்படும் மனம் மற்றும் பொருளின் மூன்று நிலைகள் பிரக்ரிதியில் இருந்து பிறந்தவை. பௌதிக உடல் மற்றும்  புலனுணர்வு மற்றும் செயல் உறுப்புகள் ஆகியவற்றின் உற்பத்திக்கு பிரக்ரிதியே காரணமாக கூறப்படுகிறது.  இன்பம் மற்றும் வலியை அனுபவிக்க புருஷாவே (மனசாட்சி, ஆன்மா) காரணம் எனக் கூறப்படுகிறது. (13.19-20) பிரக்ரிதியுடன் இணைந்து பொருள் இயற்கையின் (பிரக்ரிதி) மூன்று முறைகளை புருஷா அனுபவிக்கிறது. குணங்களோடு ஏற்படும் பந்தமே (முந்தைய கர்மத்தால் ஏற்பட்ட அறியாமையினால்) நல்ல மற்றும் தீய கருப்பைகளில் உயிருள்ள பண்புரு பிறப்பதற்கான காரணம். (13.21)

உடலில் இருக்கும் நித்திய பிரம்மம் (ஆத்மா, உயிர்) சாட்சி, வழிகாட்டி, ஆதரவாளர், அனுபவிப்பர், மகா இறைவன் மற்றும் மேலான சுயம் என அழைக்கப்ப்டுகிறது. (13.22) ஆன்மா (புருஷா) மற்றும் அதன் மூன்று குணங்களோடு பொருள் இயற்கையை (பிரக்ரிதி)  உண்மையில் புரிந்துகொள்பவர்கள், வாழ்க்கை முறை எப்படி இருந்தாலும், மறுபடி பிறப்பதில்லை. (13.23). தியானம் அல்லது மீவியற்பியல் அறிவு அல்லது கர்ம யோகத்தால் தூய்மையாக்கப்பட்ட மனம் மற்றும் அறிவின் மூலம் சிலர் மீஆத்மாவை தங்கள் உள்மனதில் உணர்கிறார்கள். (13.24)

நம்பிக்கை மட்டுமே நிர்வாணத்திற்கு வழிகாட்ட முடியும்

பிறர், இருப்பினும், தியானம், அறிவு மற்றும் செயல் யோகங்களைப் பற்றி அறியார்கள்; ஆனால் அவர்கள் முனிவர்களும் துறவிகளும் வேதங்களில் குறிப்பிட்டுள்ள தெய்வ வழிபாட்டை நம்பிக்கையோடு செய்கின்றனர். தாங்கள் கேள்விப்பட்டதின் மேல் உள்ள உறுதியான நம்பிக்கையின் மூலம் அவர்கள் மரணத்தைக் கடந்து செல்கின்றனர். (13.25) அர்ஜுனா, உயிருள்ளது அல்லது உயிரற்றது எதுவாக இருந்தாலும் பிறப்பது எதுவோ அது பொருள் மற்றும் ஆவியின் ஐக்கியத்தாலேயே பிறக்கிறது (மேலும் பார்க்கவும் 7.06) (13.26)

ஆவியாக அதே நித்திய மேலான பகவான் எல்லா மனிதர்களிலும் உறைந்திருப்பதை பார்க்கும் ஒருவனே உண்மையில் பார்க்கிறான். (13.27)

ஒவ்வொரு உயிரிலும் ஒரே மற்றும் அதே பகவான் சமமாக உறைவதைக் கண்ணோக்கும் ஒருவன் யாரையும் காயப்படுத்துவதில்லை மேலும் உன்னத பரகதியை அடைகிறான். (13.28) அனைத்து செயல்களும் பொருள் இயற்கையின் (பிரக்ரிதி) ஆற்றல்களால் (குணங்கள்) ஆற்றப்படுகின்றன என்பதை அறிகிறவன் செயலாற்றுவது, தான் அல்ல என்பதை உண்மையில் புரிந்துகொள்ளுகிறான் (மேலும் பார்க்கவும் 3.27, 5.09 மற்றும் 14.19) (13.29) உயிர்களின் எண்ணற்ற வகைகளும் அவற்றின் எண்ணங்களும் ஒருவரில் உறைந்திருந்து அந்த ஒன்றில் இருந்து மட்டும் வெளிவருகிறது என்பதை அறியும் அக்கணமே ஒருவன் மேலான பிரம்மத்தை அடைகிறான். (13.30)

ஆவியின் பண்புநலன்கள்

அர்ஜுனா, நித்தியமான பரமாத்மாவுக்குத் தொடக்கமில்லை மற்றும் பொருள் இயற்கையின் மூன்று முறைகளாலும் பாதிக்கப்படுவதில்லை என்பதால்உடலில் ஓர் வாழும் பண்புருவாக வாசம் செய்த போதிலும்எதையும் செய்வதில்லை அல்லது களங்கம் அடைவதும் இல்லை. (13.31) அதன் நுட்பத்தின் காரணமாகப் பரந்து நிற்கும் முழு வெளியும் களங்கப்படுவதில்லை; அதுபோல அனைத்து உடல்களிலும் உறையும் ஆவி களங்கப்படுவதில்லை. (13.32) அர்ஜுனா, ஒரே சூரியன் முழு உலகுக்கும் ஒளியூட்டுகிறது; அதுபோல, நித்திய பிரம்மம் முழு படைப்புக்கும் ஒளியூட்டுகிறது (அல்லது உயிர் கொடுக்கிறது). (13.33)

படைப்புக்கும் (அல்லது உடல்) படைப்பவருக்கும் (அல்லது ஆத்மா) இடையில் இருக்கும் வேறுபாட்டை சுய அறிவு என்ற கண்ணால் பார்த்து, தெய்வீக மயக்கும் ஆற்றலின் (மாயை) பொறியில் இருந்து வாழும் பண்புருவை (ஜீவன்) விடுவிக்கும் உத்தியை (ஐந்து பாதைகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்திசுயநலமற்ற சேவை, அறிவு, பக்தி, தியானம் மற்றும் சரணாகதி) அறிகிறவர்கள் உன்னதத்தை அடைகின்றனர். (13.34)

   14. இயற்கையின் மூன்று முறைகள் (குணங்கள்)

மேலான பகவான் கூறினார்: உன்னத அறிவான, எல்லா அறிவுகளிலும் சிறந்த அறிவை, அறிந்து எல்லா முனிவர்களும் இந்த வாழ்க்கைக்குப் பின்  உன்னத முழுமையை அடைந்தனர் என்பதை மேலும் உனக்கு நான் விளக்குவேன். (14.01) இந்த ஆழ்நிலை அறிவில் அடைக்கலம் பெற்றவர்கள் என்னுடன் ஐக்கியமாகி, படைப்பின் போது பிறப்பதுமில்லை அழிவின் போது பாதிக்கப்படுவதும் இல்லை. (14.02)

எல்ல உயிர்களும் ஆவி மற்றும் பொருளின் சேர்க்கையால் பிறக்கின்றன

அர்ஜுனா, என் பொருள் இயற்கைதான் படைப்பின் கருப்பை. அங்கு பிரக்ஞையின் விதையை வைக்கிறேன். அதில் இருந்து எல்லா உயிர்களும் பிறக்கின்றன. (மேலும் பார்க்கவும் 9.10) (14.03) அர்ஜுனா, வெவ்வேறு கருப்பை அனைத்திலும் இருந்து எந்த வடிவங்கள் உற்பத்தியானாலும் பொருள் இயற்கைதான் அவைகளுக்கு உடல் தரும் தாய்; மேலும் நானே உயிர் அளிக்கும் தந்தை. (14.04)

பொருள் இயற்கையின் மூன்று முறைகளும் எவ்வாறு ஆத்துமாவை உயிரோடு பிணைக்கின்றன

அர்ஜுனா, சத்துவம் அல்லது நற்குணம் ; ராஜசம் அல்லது பாசம், செயல்பாடு; மற்றும் தாமசம் அல்லது அறியாமை, மந்தநிலைபொருள் இயற்கையின் (பிரகிரிதி) இந்த மூன்று முறைகளும் (கயிறுகள், குணங்கள்) நித்திய தனிப்பட்ட ஆத்துமாவை (உயிர்) உடலோடு பிணைக்கின்றன. (14.05) இவைகளில், நற்குணம்  என்ற குணம் ஒளியூட்டுவது மற்றும் நல்லது ஏனெனில் அது களங்கமற்றது. பாவமற்ற அர்ஜுனா, அது வாழும் பண்புருவை மகிழ்ச்சி மற்றும் அறிவுடன் பிணைக்கிறது. (14.06) பாசம் என்ற குணம் தீவிர இச்சையை இயல்பாகக் கொண்டது மேலும் அதுவே ஆசைக்கும் பந்தத்துக்கும் ஆதாரம். அது வாழும் பண்புருவை செயலின் பலன்களோடு பிணைக்கிறது (14.07) அர்ஜுனா அறிந்து கொள், அறியாமை என்ற குணம்வாழும் பண்புருவை ஏமாற்றுவதுமந்தநிலையில் இருந்து பிறந்தது. அது வாழும் பண்புருவை அலட்சியம். சோம்பேறித்தனம், மற்றும் மிகைத் தூக்கத்தோடு பிணைக்கிறது. (14.08) அர்ஜுனா, நற்குணம் ஒருவனை மகிழ்ச்சியோடு பிணைக்கிறது (நித்திய பிரம்மத்தைக் கற்றல் மற்றும் அறிதல்); பாசம் என்ற குணம் செயலோடு பிணைக்கிறது; அறியாமை குணம் சுய அறிவை மறைத்து அலட்சியத்தோடு பிணைக்கிறது. (14.09)

இயற்கையின் மூன்று குணங்களின் இயல்புகள்

அர்ஜுனா நற்குணம் பாசத்தையும் அறியாமையையும் அடக்கி மேலோங்குகிறது; பாசம் நற்குணத்தையும் அறியாமையையும் அடக்கி மேலோங்குகிறது; அறியாமை நற்குணத்தையும் பாசத்தையும் அடக்கி மேலோங்குகிறது. (14.10) சுய அறிவு என்ற ஒளி உடலில் புலன்களுக்கு (அல்லது வாயில்கள்) ஒளியூட்டும் போது நற்குணம் மேலோங்கி நிற்கிறது என்று அறியலாம். (14.11) அர்ஜுனா, பாசம் மேலோங்கி நிற்கும் போது பேராசை, செயல்பாடு, சுய நல வேலைகளை மேற்கொள்வது, அமைதியின்மை, உணர்ச்சிவசப்படல் போன்றவை எழுகின்றன. (14.12) அர்ஜுனா, மந்தநிலை மேலோங்கி நிற்கும்போது, செயலின்மை, அலட்சியம், வஞ்சகம் போன்றவை எழுகின்றன. (14.13)

மூன்று குணங்கள் தனிமனித ஆத்துமாவின் மறுபிறவிக்கான வாகனங்கள்

நற்குணம் மேலோங்கி நிற்கும்போது இறப்பவன் சொர்க்கத்திற்குபிரம்மத்தை அறிந்தவர்களின் தூய உலகம்- செல்கிறான். (14.14) பாசம் மேலோங்கி நிற்கும்போது மரணம் அடைபவன் செயலோடு (பயன்நோக்கும் வகை) பிணைந்து மறுபடியும் பிறக்கிறான். அறியாமை மேலோங்கி நிற்கும்போது இறக்கிறவன் கீழ் உயிரினமாக மறுபடியும் பிறக்கிறான். (14.15) நற்செயல்களின் பலன் நன்மை தருவதும் தூய்மையானதும் என்று கூறப்படுகிறது; பாசவினையின் பலன் வேதனையானது; அறியாமையின் பலன் சோம்பேறித்தனம். (14.16) சுய அறிவு நற்குணத்தில் இருந்து எழுகிறது; பாசம் என்ற குணத்தில் இருந்து பேராசை பிறக்கிறது; அலட்சியம், வஞ்சகம், மனமந்தம் அறியாமையில் இருந்து எழுகிறது. (14.17) நற்செயலில் ஈடுபடுகிறவர்கள் சொர்க்கம் செல்கின்றனர்; பாசம் கொண்டவர்கள் மானிட உலகில் மறுபடியும் பிறக்கின்றனர்; மேலும் அறியாமை கொண்டவர்கள், அறியாமையின் கீழான முறைமையில் தங்கி, கீழ் கிரகங்கள் அல்லது நரகத்துக்கு செல்கின்றனர் (கீழ் உயிரினங்களாக பிறக்கின்றனர்). (14.18)

பொருள் இயற்கையின் மூன்று குணங்களைக் கடந்து நிர்வாணம் அடையவும்

தரிசனமிக்கவர்கள் பொருள் இயற்கையின் மூன்று குணங்களின் படி செயலாற்றுபவர்களைத் தவிர ஒருவரையும் காணாமல் இந்த மூன்று குணங்களுக்கும் அப்பால் இருக்கும் பிரம்மத்தை அறிந்து விடுதலையை (முக்தி) அடைகின்றனர். (மேலும் பார்க்கவும் 3.27, 5.09 மற்றும் 13.29) (14.19). ஒருவன் உடலை உருவாக்கும் (மற்றும்/அல்லது அதில் தோற்றம் கொள்ளும்) பொருள் இயற்கையின்மூன்று குணங்களையும் கடந்து (அல்லது மேல் எழுந்து) செல்லும்போது மரணமின்மையை அல்லது விடுதலையை (முக்தி) அடைகிறான் மேலும் பிறப்பு, முதுமை, மற்றும் மரணம் என்ற வலிகளில் இருந்து விடுபடுகிறான். (14.20)

மூன்று குணங்களுக்கு மேலாக எழும் செயல்முறை

அர்ஜுனன் கூறினான்: பொருள் இயற்கையின் மூன்று குணங்களையும் கடந்தவனின் அடையாளங்கள் என்ன, மற்றும் அவனின் நடத்தை என்ன? பகவான் கிருஷ்ணா? பொருள் இயற்கையின் இந்த மூன்று குணங்களையும் ஒருவனால் எவ்வாறு கடக்க முடியும்: (14.21) மேலான பகவான் கூறினார்: அறிவொளி, செயல்பாடு மற்றும் வஞ்சகத்தின் இருப்பை ஒருவன் வெறுக்காத போது; அல்லது அவைகள் இல்லாத போது அவற்றிற்காக ஒருவன் ஆசைப்படாத போது; பொருள் இயற்கையின் குணங்கள் பாதிக்காத போது ஒரு சாட்சியைப் போல் நிற்கும்போது; பொருள் இயற்கையின் குணங்கள் மட்டுமே செயல்படுகின்றன என நினைத்து ஊசலாட்டம் இல்லாமல் பகவானிடம் உறுதியாக ஒருவன் நிலைத்து நிற்கும்போது அவன் பொருள் இயற்கையின் குணங்களைக் கடந்து நிற்கிறான் என்று கூறப்படுகிறது. (14.22-23) மேலும் அவன் கடவுளை நம்பி வேதனையையும் வலியையும் பொருட்படுத்தாமல் இருப்பான்; அவன் ஒரு மண்கட்டியையும், ஒரு கல்லையும், தங்கத்தையும் ஒரேபோல் எண்ணுவான்; அவனுக்கு அன்பானவனும் வெறுப்பவனும் ஒன்றுபோல்தான்; அவன் உறுதி மனம் கொண்டவன்; கடிந்துகொள்ளப்படும் போதும் புகழப்படும்போதும் அமைதியாக இருப்பான், மேலும் மரியாதையையும் அவமரியாதையையும் பொருட்படுத்தமாட்டான்; அவன் நண்பனுக்கும் எதிரிக்கும் பாரபட்சம் பார்க்கமாட்டான்; செய்பவன் என்ற உணர்வை அவன் துறந்துவிடுவான். (14.24-25)

மூன்று குணங்களின் பந்தங்களை பக்தியுள்ள அன்பால் அறுக்க முடியும்

அன்புடனும், அசைக்கமுடியாத பக்தியுடனும் எனக்கு சேவையை வழங்கும் ஒருவன், பொருள் இயற்கையின் மூன்று குணங்களைக் கடந்து பிரம்மநிர்வாணத்திற்கு தகுதி உள்ளவனாகிறாறான். (மேலும் பார்க்கவும் 7.14 மற்றும் 15.19) (14.26) ஏனென்றால், நானே அழியாத நித்திய பிரம்மத்துக்கும், நித்திய ஒழுங்கிற்கும் (தர்மம்), மற்றும் முழுமையான பேரின்பத்திற்கும் அடிப்படையானவன். (14.27)

15.மேலானவன்

மாயையின் ஆற்றல்களினால் உருவாக்கப்பட்ட ஒரு மரத்தைப் போல் படைப்பு இருக்கிறது

மேலான பகவான் கூறினார்: நித்திய ஆலமரத்தைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள், அதன் தோற்றம் (அல்லது வேர்) மேல் உள்ள உன்னத பிரம்மத்தில் இருக்கிறது மற்றும் கிளைகள் பிரபஞ்சத்தின் கீழே உள்ளன, மேலும் அதன் இலைகள் வேதத்தின் கீர்த்தனைகள். இந்த மரத்தைப் புரிந்துகொள்ளும் ஒருவன் வேதங்களை அறிந்தவன். (மேலும் பார்க்கவும் 10.08) (15.01) மாயையின் (தோற்ற மயக்கம்) இந்தப் பிரபஞ்ச மரத்தின் கிளைகள் பேரண்டம் முழுவதும் பரவியுள்ளன. பொருள் இயற்கையின் மூன்று குணங்களால் இந்த மரம் ஊட்டி வளர்க்கப்படுகிறது; புலன் இன்பங்கள் அதன் முளைகள்; மற்றும் அதன் வேர்கள் (சுயம் மற்றும் ஆசைகளினால் ஆனவை) கீழே மானிட உலகில் நீண்டு, கர்மப் பந்தத்தை ஏற்படுத்துகின்றன. (15.02)

எவ்வாறு பந்தம் என்ற மரத்தை வெட்டி

விடுதலையை அடைவது

இந்த மரத்தின் உண்மையான வடிவமோ, அதன் தொடக்கமோ அல்லது முடிவோ அல்லது அதன் இருப்போ இங்கே பூமியில் புலப்படுவதில்லை. சுய அறிவு மற்றும் பற்றின்மை ஆகிய வலிமையான கோடரியால் சுயம் மற்றும் ஆசைகள் என்ற இதன் உறுதியான வேர்களை வெட்டிய பின் இவ்வாறு நினைக்கவும் "யாரிடம் இருந்து இந்த முதன்மையான வெளிப்பாடு வெளிவருகிறதோ அந்த முதன்மையானவரிடம் நான் அடைக்கலம் புகுகிறேன்", எங்கிருந்து ஒருவன் மீண்டும் (மானிட உலகத்திற்கு) திரும்பி வரமாட்டானோ அந்த உயர்ந்த பரகதியைத் தேடுகிறேன். (15.03-04) கர்வம் மற்றும் மாயையில் இருந்து யார் விடுபடுகிறார்களோ, பற்று என்ற தீமையை யார் வெற்றிகொண்டார்களோ, எல்லா ஆசைகளையும் முழுமையாக விட்டு யார் தொடர்ந்து மேலான சுயத்தில் உறைகிறார்களோ, மற்றும் யார் இன்பம் மற்றும் வலி என்ற இரட்டையில் இருந்து விடுபடுகிறார்களோ அந்த ஞானிகளே நித்திய இலக்கை சென்றடைகின்றனர். (15.05) என் உன்னத உறைவிடத்துக்கு சூரியன் மற்றும் சந்திரன் அல்லது நெருப்போ வெளிச்சம் தருவதில்லை. அங்கு சென்றடைந்த மக்கள் நிரந்தர விடுதலையை (முக்தி) அடைகின்றனர் மேலும் இந்த நிலையற்ற உலகிற்கு மீண்டும் வருவதில்லை (மேலும் பார்க்கவும் 13.17 மற்றும் 15.12) (15.06)

அனுபவிக்கும் உள்ளடங்கிய ஆன்மா

உயிரினங்களின் உடலில் இருக்கும் நித்திய தனி ஆத்துமா உண்மையில் என்னுடைய ஒருங்கிணைந்த பகுதியாகும். அது மனம் உடபட ஆறு புலனுணர்வு துறைகளோடு இணைந்து அவற்றை செயலூக்கப்படுத்துகிறது. (15.07) காற்று மலரில் இருந்து மணத்தை எடுத்துச் செல்வது போல தனி ஆத்துமா ஆறு புலனுணர்வுத் துறைகளை பௌதிக உடலில் இருந்து மரணத்தின் போது மறு பிறப்பில் (கர்ம ஆற்றலினால்) கிடைக்கும் புதிய பௌதிக உடலுக்குகொண்டு செல்கிறது (மேலும் பார்க்கவும் 2.13 (15.08) வாழும் பண்புரு (ஜீவன்) கேள்வி, தொடுதல், பார்வை, சுவை, நுகர்வு மற்றும் மனம் என்ற ஆறு புலனுணர்வு துறைகள் மூலம் புலன் இன்பங்களை அனுபவிக்கிறது. உயிர் உடலில் இருந்து பிரிவதையோ அல்லது உடலில் உறைவதையோ மற்றும் பொருள் இயற்கையின் குணங்களோடு இணைந்து புலன் இன்பத்தை அனுபவிப்பதையோ அறியாமை உள்ளவன் உணர  முடியாது. ஆனால் சுய அறிவு என்ற கண்ணுடையவர்கள் அதைப் பார்க்கலாம். (15. 9-10) முழுமையை நாடும் யோகிகள் தங்கள் உள் மனதில் உறையும் (பிரக்ஞை) வாழும் பண்புருவை (உயிர்) காண்கிறார்கள், ஆனால் அறியாமை கொண்டவர்களோ, உள் மனது தூய்மை அற்றவர்களோ, தேடினாலும், அவரைப் பார்க்க முடியாது. (15.11)

ஆவியே அனைத்தின் உட்சாரம்

ஒளி ஆற்றல் என்னுடையது என்பதை அறிவாயாக. அது சூரியனில் இருந்து வந்து முழு உலகுக்கும் வெளிச்சம் அளிக்கிறது மேலும் அது சந்திரனிலும் நெருப்பிலும் இருக்கிறது. (மேலும் பார்க்கவும் 13.17 மற்றும் 15.06) (15.12) உலகுக்குள் நுழைந்து என் ஆற்றலால் நான் எல்லா உயிர்களையும் ஆதரிக்கிறேன். சத்தளிக்கும் சந்திரனாக மாறி நான் எல்லா தவரங்களுக்கும் உணவளிக்கிறேன். (15.13) செரிமான அனலாகி எல்லா உயிரினங்களின் உடலுக்குள்ளும் இருக்கிறேன். முக்கிய உயிர் ஆற்றல்களுடன் இணைந்து (பிராணா மற்றும் அபானா) எல்லா வகையான உணவுகளையும் செரிமானம் செய்கிறேன். (15.14) மேலும் நான் அனைத்து உயிரினங்களின் உள்மனதில் இருக்கிறேன். நினைவு, சுய அறிவு, மற்றும் சந்தேகம் தீர்த்தல் மற்றும் தவறான எண்ணங்கள் (காரணகாரியமறிதல் அல்லது சமாதியின் மூலம் நித்திய பிரம்மத்தைப் பற்றி) என்னிடத்தில் இருந்து வருகின்றன. நான் அனைத்து வேதங்களையும் கற்பதனால் கிடைக்கும் உண்மையில் இருக்கிறேன். நான், உண்மையில், வேதாந்தத்தை எழுதியவன் மற்றும் வேதங்களை அறிந்தவன். (மேலும் பார்க்கவும் 6.39) (15.15)

உன்னத ஆவி, ஆவி மற்றும்

படைக்கப்பட்டவைகள் எவை

பேரண்டத்தில் இரு பண்புருக்கள் (புருஷர்கள்) உள்ளன: மாறக்கூடிய அல்லது நிலையாத தெய்வீக புருஷர்கள் (க்ஷர புருஷர்) மற்றும் மாறாத நித்திய புருஷர் (பிரம்மம், அக்ஷர புருஷர்). படைப்புகள் யாவும் மாற்றத்துக்கு உட்பட்டவை, ஆனால் நித்திய பிரம்மம் மாறாதது. (15.16) உன்னத பிரம்மம் என்பது நிலையற்ற தெய்வீக புருஷர்களுக்கும் நித்திய பிரம்மத்துக்கும் அப்பாற்பட்டது. அவர் முழு உண்மை அல்லது பரமாத்மா என அழைக்கப்படுகிறார். அவர் எல்லாவற்றிலும் ஊடுருவி நிலையற்றதையும் நித்தியத்தையும் தாங்கி வருகிறார் (15.17) ஏனெனில் நான் நிலையற்றது மற்றும் நித்தியம் இரண்டிற்கும் அப்பாற்பட்டவன். ஆகவே, நான் இந்த உலகத்திலும் வேதங்களிலும் உன்னத பிரம்மம் (பரபிரம்மம், பரமாத்மா, புருஷோத்தமன், முழுமையானவன், சத்தியம், சத், மீயாத்மா, என்றெல்லாம்) என்று அறியப்படுகிறேன். (15.18) அர்ஜுனா, என்னை உண்மையிலே உன்னத பிரம்மம் எனப் புரிந்துகொண்டு, எல்லாவற்றையும் அறிந்து ஞானிகள் என்னை முழு இதயத்தோடு வணங்குகிறார்கள். (மேலும் பார்க்கவும் 7.14, 14.26 மற்றும் 18.66) (15.19).இவ்வாறு, பாவமற்ற அர்ஜுனா, சுய அறிவு பற்றிய மிகவும் ரகசியமான விஞ்ஞானத்தை விளக்கியுள்ளேன். இதைப் புரிந்துகொண்டால் அறிவொளி பெறுவாய்; ஒருவனின் அனைத்து கடமைகளும் நிறைவேறும்; மானிட வாழ்க்கையின் இலக்கை அடைவாய். (15.20)

 

16. தெய்வீக மற்றும் அசுரத் தன்மைகள்

முக்திக்காக பண்படுத்தப்பட வேண்டிய பெரும்

தெய்வீகத் தன்மைகளின் ஒரு பட்டியல்

மேலான பகவான் கூறினார்: அர்ஜுனா, அச்சமின்மை, உள் மனத் தூய்மை, சுய அறிவு என்னும் யோகாவில் விடாமுயற்சி, கொடை, புலன் அடக்கம், தியாகம், வேதக் கல்வி, தவம், நேர்மை; அகிம்சை, உண்மை, கோபமின்மை, துறவு, அமைதி, தீய பேச்சு இல்லாமை, எல்லா உயிர்களிடத்திலும் பரிவு, பேராசை இல்லாமை, மென்மை, பணிவு, சபலம், மகிமை, மன்னிப்பு, வலிமை, சுத்தம், தீமை இன்மை, கர்வம் இன்மைஇவைகளே (இருபத்தாறு) தெய்வீகம் நிறைந்த பண்புகள் (16.01-03)

விட்டுவிட வேண்டிய அரக்கப் பண்புகளின் பட்டியல்

ஓ அர்ஜுனா, அரக்கக் குணங்களுடன் பிறந்தவர்களின் அடையாளங்கள்: பாசாங்குத்தனம், ஆணவம், பெருமை, கோபம், கடுமை, அறியாமை. (16.04) தெய்வீக குணங்கள் முக்திக்கு வழிவகுக்கும் (மோட்சம்); அரக்கக் குணங்கள் பந்தத்திற்கு என்று கூறப்படுகிறது. ஓ அர்ஜுனா, துக்கப்படாதே; நீ தெய்வீக குணங்களுடன் பிறந்திருக்கிறாய். (16.05)

இரு வகையான மனிதர்கள் மட்டுமே உள்ளனர்:

ஞானி மற்றும் மூடன்

அடிப்படையில், உலகில் இரு வகை அல்லது சாதி மனிதர்களே உண்டு: தெய்வீகமானவர்கள் மற்றும் அரக்க குணமுடையவர்கள். தெய்வீகமானவர்கள் பற்றி அதிகமாக விளக்கப்பட்டு விட்டாகிவிட்டது. அர்ஜுனா, இப்போது என்னிடம் இருந்து அரக்க குணமுடையவர்கள் பற்றி கேள். (16.06) அரக்க குணம் கொண்டவர்களுக்கு எதைச் செய்ய வேண்டும் மற்றும் எதைச் செய்யக் கூடாது என்று தெரியாது. அவர்களிடம் தூய்மையோ, நல்லொழுக்கமோ அல்லது உண்மையோ கிடையாது. (16.07) அவர்கள் இந்த உலகம் பொய்யானது, அடித்தளம் அற்றது, கடவுள் அற்றது மேலும் ஒழுங்கற்றது. இந்த உலகம் ஆண் பெண் இருவரின் உடல் உறவில்  பிறந்த ஒன்று மட்டுமே, வேறொன்றும் இல்லை என்கின்றனர். (16.08) இந்தத் தவறான நாத்திகக் கண்ணோட்டத்தைப் பற்றிக் கொண்டு இந்தத் தரம் தாழ்ந்த ஆத்துமாக்கள்சிற்றறிவும் கொடும்செயலும் கொண்டவைஇந்த உலகத்தின் அழிவுக்கான எதிரிகளாகப் பிறந்துள்ளனர். (16.09) அடங்கா ஆசை, பாசாங்கு, கர்வம் மற்றும் ஆணவம் நிறையப் பெற்றவர்கள்; மயக்கத்தால் தவறான கொள்கைகளை வைத்திருக்கிறார்கள்; தூய்மையற்ற நோக்கத்தோடு செயல்புரிகின்றனர், (16.10) மரணம் வரை தொடரும் கவலைகளால் பீடிக்கப்பட்டுள்ளனர், புலனை திருப்தி படுத்துவதே அவர்களது அதிகபட்ச நோக்கம், மேலும் புலன் இன்பமே எல்லாம் என்று நம்புகின்றனர்; (16.11)

நூற்றுக்கணக்கான ஆசையின் பந்தங்களால் பிணைக்கப்பட்டு, காமத்தாலும் கோபத்தாலும் அடிமைப்படுத்தப்பட்ட அவர்கள், சிற்றின்ப இன்பங்களை நிறைவேற்ற சட்டவிரோதமான வழிகளில் செல்வத்தைப் பெற முயற்சி செய்கிறார்கள். அவர்கள் நினைக்கிறார்கள்: (16.12) இது இன்று என்னால் சம்பாதிக்கப்பட்டது; இந்த ஆசையை நான் நிறைவேற்றுவேன்; என்னிடம் இவ்வளவு செல்வம் உள்ளது, எதிர்காலத்தில் அதிக செல்வம் என்னிடம் இருக்கும்; (16.13) அந்த எதிரி என்னால் கொல்லப்பட்டான், மற்றவர்களையும் நான் கொன்றுவிடுவேன். நான்தான் ஆண்டவன். நான் அனுபவிப்பவன். நான் வெற்றிபெற்றவன், சக்திவாய்ந்தவன், மகிழ்ச்சியானவன்; (16.14)

நான் பணக்காரன், மற்றும் உயர் குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு சமமானவர் யார்? நான் வேள்வி செய்வேன், தர்மம் செய்வேன், மேலும் நான் களிகூருவேன். (16.15) இவ்வாறு அறியாமையால் ஏமாற்றப்பட்டு, பல கற்பனைகளால் தடுமாறி, மாயையின் வலையில் சிக்கி, சிற்றின்ப இன்பங்களை அனுபவிப்பதற்கு அடிமையாகி, அவர்கள் ஒரு இழிந்த நரகத்தில் விழுகிறார்கள். (16.16) இறுமாப்பு, பிடிவாதம், பெருமை மற்றும் செல்வத்தின் போதையால் நிரம்பி அவர்கள் வேத வழிகாட்டல்படி அல்லாமல் தங்கள் பேர்புகழுக்காக வேள்வி  (கொடை, யக்ஞம் போன்றவை) செய்கிறார்கள் (16.17) இந்த தீய மக்கள் அகங்காரம், அதிகாரம், ஆணவம், காமம், மற்றும் கோபம் ஆகியவற்றை பற்றிக்கொள்கிறார்கள்; அவர்கள் தங்கள் உடலிலும் மற்றவர்களின் உடலிலும் நான் வாசமாய் இருப்பதை மறுக்கிறார்கள். (16.18)

துன்பமே மூடர்களின் விதி

நான் இந்த வெறுப்பாளர்களை, கொடூர, பாவ மற்றும் இழிந்த மக்களை அரக்கர்களின் கருப்பையில் மறுபிறப்பு என்னும் சுழற்சிக்குள் மீண்டும் மீண்டும் வீசி எறிகிறேன். (16.19) அர்ஜுனா, அரக்கர்களின் கருப்பையில் நுழைந்து, பிறப்புக்குப் பின் பிறப்பாக, இந்த வஞ்சிக்கப்பட்டவர்கள் கீழ் நரகுக்குள் ஒரு போதும் என்னை அடையாமல் புதைந்து போகிறார்கள். (16.20)

காமம், கோபம், மற்றும் பேராசையே நரகத்தின் மூன்று வாயில்கள்

ஒரு தனிமனிதனை வீழ்ச்சிக்கு (அல்லது பந்தம்) கொண்டுசெல்லும் நரகத்தின் வாயில்கள் காமம், கோபம், மற்றும் பேராசை ஆகிய மூன்றே. ஆகவே, ஒருவன் இவை மூன்றையும் விட்டுவிட (கற்க வேண்டும்). (16.21) அர்ஜுனா, நரகத்தின் இந்த மூன்று வாயில்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டவன், சிறந்ததையே செய்து கடைசியில் மேலான பரகதியை அடைகிறான். (16.22)

ஒருவன் வேதங்களைப் பின்பற்ற வேண்டும்

 

17. மும்மடங்கு நம்பிக்கை

அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா, வேத வழிகாட்டல்களை பின்பற்றாமல், நம்பிக்கையுடன் ஆன்மீக நடைமுறைகளை மேற்கொள்ளுபவர்களின் பக்தி முறை என்ன? அது நற்செயலா, பாசமா, அல்லது அறியாமையா, இவற்றில் என்ன முறை? (17.01)

மூன்று வகை நம்பிக்கை

மேலான பகவான் கூறினார்: உடலோடு கூடிய உயிர்களின் இயற்கை நம்பிக்கை மூன்றுவகை: நற்குணம், பாசம் மற்றும் அறியாமை. இப்போது இதை நீ என்னிடம் இருந்து கேள். (17.02) அர்ஜுனா, ஒவ்வொருவரின் மனநிலையை (கர்ம அழுத்தங்களால் கட்டுப்படுத்தப்படும்) பொறுத்தே ஒவ்வொருவருடைய நம்பிக்கையும் அமையும். ஒருவன் தன் நம்பிக்கையைக் கொண்டே அறியப்படுகிறான்.  ஒருவன் தான் எண்ணியபடியே ஆகலாம் (ஆசைப்படும் பொருளை தொடர்ந்து சிந்திக்கும்போது). (17.03) நற்குணம் கொண்டவன் தேவர்களை வணங்குகிறான்; பாசமுறையில் இருப்பவன் இயற்கை இகந்த ஆட்சியாளர்களையும் அரக்கர்களையும் வணங்குகிறான்; அறியாமை கொண்டவன் பேய்களையும் ஆவிகளையும் வணங்குகிறான். (17.04) அரக்க குணம் கொண்ட மூடன் வேத வழிகாட்டலை விட்டு கடும் தவங்களை மேற்கொள்ளுகிறான். இவர்கள் முற்றிலும் பாசாங்கும், அகம்பாவமும் கொண்டு ஆசை மற்றும் பந்தத்தின் விசைகளால் நெருக்கப்பட்டு, உடல் கூறுகளையும் உடலுக்குள் வாசம் செய்யும் என்னையும் அறிவின்றி சித்திரவதை செய்கின்றனர். (17.05-06)

மூன்று வகை உணவு

நாம் அனைவரும் விரும்பும் உணவு மூன்று வகைப்படும். இது போன்றதே வேள்வி, தவம் மற்றும் கொடை. இப்போது இவற்றிற்கு இடையில் இருக்கும் வேறுபாட்டைக் கேள். (17.07) நீண்ட ஆயுள், நல்லொழுக்கம், வலிமை, ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்தை ஊக்குவிக்கும் உணவுகள் சாறு நிறைந்தும், மென்மையாகவும், போதுமானதாகவும், சத்தானதாகவும் இருக்கும். இத்தகைய உணவுகள் நற்குணசாலிகளால் விரும்பப்படுகின்றன. (17.08) மிகக் கசப்பு, புளிப்பு, உப்பு, எரிப்பு,காரம், உலர்ந்த, மற்றும் எரிச்சல் தரும் உணவுகளை பாச குணம் கொண்டோர் விரும்புகின்றனர். இவை வலி, துக்கம் மற்றும் நோயை ஏற்படுத்தும். (17.09) அறியாமை குணம் கொண்டோர், பழைய, சுவையற்ற, அழுகிய, கெட்ட மற்றும் தூய்மையற்ற உணவுகளை (இறைச்சி மற்றும் மது போன்றவை) உண்கின்றனர். (17.10)

மூன்று வகை வேள்விகள்

தன்னலமற்ற சேவை, வேதங்களால் வழிகாட்டப்படல், பலனின் மேல் ஆசை இல்லாமல் இது ஒரு கடமை என்று உறுதியுடனும் திட நம்பிக்கையுடனும் செய்வது நற்குணமுடையோர் முறையாகும் (17.11) ஓ அர்ஜுனா, பிறர் காண வேண்டும் என்னும் நோக்கத்துக்காகவும் பலனை எதிர்நோக்கியும் செய்யப்படும் சுயநலமற்ற சேவைகள் பாச குணமுடையோர்  முறையாகும் (17.12) வேதங்களைப் பின்பற்றாமல், உணவு வழங்காமல், மந்திரம், நம்பிக்கை, கொடை இல்லாமல் செய்யப்படும் சுயநலமற்ற சேவைகள் அறியாமை கொண்டோர் முறையாகும். (17.13)

சிந்தனை, வார்த்தை மற்றும் செயல் தவம்

தேவர்கள், பூசாரி, குரு, ஞானிகளின் வழிபாடு; தூய்மை, நேர்மை, பிரம்மச்சரியம் மற்றும் அகிம்சை - இவை செயல் நோன்பு என்று கூறப்படுகிறது. (17.14) தீங்கு விளைவிக்காத, உண்மையுள்ள, இனிமையான, நன்மை பயக்கும், மற்றும் தொடர்ந்த வேத கல்விக்கு பயன்படுத்தப்படும் பேச்சு வார்த்தை தவம் அழைக்கப்படுகிறது. (17.15) மன அமைதி, மென்மை, மௌனம், சுய கட்டுப்பாடு மற்றும் சிந்தனையின் தூய்மை - இவை சிந்தனை நோன்பு அழைக்கப்படுகின்றன. (17.16)

மூன்று வகை தவங்கள்

ஒரு கடமையாக, சரியான இடத்திலும் நேரத்திலும், தகுதியானவருக்கு, எதையும் எதிர்பாராமல் வழங்கப்படும் ஈகை, நற்குணம் எனக் கருதப்படுகிறது. (17.20) விருப்பமில்லாமல், அல்லது பதிலுக்கு ஏதாவது பெறுவதற்காக வழங்கப்படும் ஈகை பாச முறை எனக் கூறப்படுகிறது. (17.21) தகுதியற்ற நபர்களுக்கு தவறான இடத்திலும் நேரத்திலும்,அல்லது பெற்றுக் கொள்பவருக்கு மரியாதை செலுத்தாமல் அல்லது ஏளனத்தோடு வழங்கப்படும் ஈகை அறியாமை முறை எனக் கூறப்படுகிறது. (17.22)

கடவுளின் முந்நாமங்கள்

ஓம் தத் சத்என்பது நித்திய பிரம்மத்தின் முந்நாமங்கள் எனக் கூறப்படுகின்றன. நற்குணம் கொண்டோர், வேதங்கள் மற்றும் சுயநலமற்ற சேவை பழங்காலத்தில் பிரம்மத்தாலும் பிரம்மத்திடம் இருந்தும், படைக்கப்பட்டன. (17.23) ஆகையால், வேதங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வேள்வி, ஈகை, மற்றும் தவம் எப்போதும் உன்னத பிரம்மத்தை அறிந்தவர்களால் ஓம்என்று ஓதி தொடங்கப்படுகின்றன. (17.25) விடுதலையை (மோட்சம்) நாடுபவர்கள், பலன் ஏதும் நாடாமல்  தத்’ (அல்லது அவனே எல்லாம்) என்று கூறி பல்வேறு வகையான வேள்வி, ஈகை மற்றும் தவங்களை செய்கின்றனர். (17.25) அர்ஜுனா  சத்என்ற சொல் உண்மை மற்றும் நன்மை என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ‘சத்என்பது ஒரு மங்களகரமான செயலுக்கும் பயன்படுத்தப்படும். (17.26) வேள்வி, ஈகை, மற்றும் தவத்தில் காணப்படும் நம்பிக்கையும்சத்என்று அழைக்கப்படும். மகா உன்னதருக்காக செய்யப்படும் சுயநலமற்ற சேவையே உண்மையில்சத்என அழைக்கப்படுகிறது. (17.27) வேள்வி, கொடை, தவம் அல்லது நம்பிக்கை இல்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும்அசத்என அழைக்கப்படுகிறது. அர்ஜுனா, இங்கும் அல்லது இதற்குப் பின்னும் அதற்கு  மதிப்பில்லை. (17.28)

 

18. சுயத்தை விட்டு முத்தி அடைதல்

அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ண பகவானே, சந்நியாசம் மற்றும் தியாகத்தின் தன்மைகளையும் அவை இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டையும் அறிய விரும்புகிறேன் (18.01)

துறவு மற்றும் தியாகத்தின் வரையறை

மேலான பகவான் கூறினார்: எந்த ஒரு தனிப்பட்ட பலனுக்காகவும் செயல்களை முழுமையாக துறப்பதை சந்நியாசம் (துறவு) என்று முனிவர்கள் அழைக்கின்றனர். அனைத்து செயல்களின் பலனோடும் கொண்ட சுயநலப் பற்றில் இருந்து விடுபடுவதும் அவற்றை தியாகம் செய்வதும் தியாகம் என்று ஞானிகள் வரையறுக்கின்றனர் (மேலும் பார்க்கவும் 5.01, 5.05, மற்றும் 6.01) (18.02) சில தத்துவவாதிகள் எல்லா வேலைகளும் முற்றிலும் தவறானவை என்றும் அவற்றை விட்டுவிட வேண்டும் என்று கூறுகின்றனர். வேறு சிலரோ தியாகம், கொடை மற்றும் தவம் ஆகியவற்றை விட்டுவிடக் கூடாது என்று கூறுகின்றனர். (18.03)

அர்ஜுனா, தியாகம் பற்றிய என் முடிவைக் கேள். தியாகம் மூன்று வகை எனக் கூறப்படுகிறது (18.04) சேவை, கொடை, மற்றும் தவச் செயல்களை விட்டுவிடக் கூடாது. அவற்றைச் செய்ய வேண்டும். ஏனெனில் சேவை, கொடை மற்றும் தவம் ஆகியவைதான் ஞானிகளைத் தூய்மைப்படுத்துவது ஆகும். (18.05) இந்தக் கடமையின் பாற்பட்ட செயல்களையும் பலனோடு பந்தம் இல்லாமல் செய்ய வேண்டும். அர்ஜுனா,  இதுவே என் உறுதியான மேலான அறிவுரை. (18.06)

மூன்று வகையான தியாகம்

ஒருவன் தன் கடமையை விட்டுவிடுவது சரியானது அல்ல. கடமையின் பாற்பட்ட செயலை துறப்பது மாயையினால் நிகழ்கிறது. மேலும் அது அறியாமை குணத்தில் அடங்கும். (18.07)  கடினம் காரணமாகவோ அல்லது உடலை வருத்துவதற்குப் பயந்தோ ஒருவன் கடமையை விடுவது, பாச முறையில் தியாகத்தை செய்வது தியாகத்தின் பலனை அடையாது. (18.08) அர்ஜுனா, பலனோடு கொண்ட சுயநலப் பற்றைத் துறந்து கடமையாக செய்யப்படும் செயல் மட்டுமே நற்செயல் முறையில் தியாகம் எனக் கருதப்படும். (18.09)  இசைவில்லாத செயலை வெறுக்காமலும், இசைவான செயலில் பற்றுகொள்ளாமலும் இருப்பவனே தியாகி எனக் கருதப்படுவான். நற்குணம் பொருந்தியவனாகவும், அறிவுள்ளவனாகவும், உன்னத பிரம்மத்தைப் பற்றிய சந்தேகம் இல்லாமலும் இருப்பான். (18.10) மனிதர்கள் முற்றிலுமாக செயலைத் தவிர்க்க முடியாது. ஆகவே, எல்லா செயல்களின் சுயநல பலனையும் முற்றிலுமாக துறந்தவனே தியாகி எனக் கருதப்படுவான். (18.11) செயலின் மும்மடங்கு பலன்விரும்புவது, விரும்பாதது மற்றும் சேர்ந்ததுதியாகியாக இல்லாதவனுக்கு இறந்த பின் திரள்கிறது, ஆனால் தியாகிக்கோ ஒருபோதும் இல்லை (18.12)

ஒரு செயலுக்கான ஐந்து காரணங்கள்

அர்ஜுனா, சாங்கியக் கொள்கையில் விவரிக்கப்பட்டிருக்கும் அனைத்து செயல்களுக்குமான ஐந்து காரணங்களைப் பற்றி என்னிடம் இருந்து கற்றுக்கொள். அவைகளாவன: கர்மத்தின் இருக்கையான பௌதிக உடல்; பொருள் இயற்கையின் குணங்கள், செய்பவன்; புலன் உணர்வு மற்றும் செயலின் பதினொரு உறுப்புகள், கருவிகள்; பல்வேறு பிராணாக்கள் (உயிர்த்துடிப்புகள், உயிர் ஆற்றல்கள்); மேலும் ஐந்தாவதாக  முன்னணி தேவதைகள் (பதினொரு உறுப்புகளின்) (18.13-14) சிந்தனையாலும், வார்த்தையாலும் செயல்களாலும் ஆற்றும் எந்த ஒரு செயலுக்கும், தவறோ சரியோ, இவைகளே ஐந்து காரணங்கள். (18.15) ஆகவே, ஒருவனின் உடல் அல்லது ஆத்துமாவே ஒரே முகவர் என்று எண்ணும் மூடன், முழுமையற்ற அறிவின் காரணமாகப் புரிந்துகொள்ள மாட்டான். (18.16) செய்பவன் என்ற கருத்தில் இருந்து விடுபட்ட ஒருவன், பலனை அறுவடை செய்யும் ஆசையினால் அறிவு மாசுபடாத ஒருவன் - இந்த மக்களை எல்லாம் கொன்ற பின்னும்கொல்வதில்லை அல்லது கொல்லும் செயலால் கட்டுப்படுவதில்லை. (18.17) கர்த்தா, பொருள், பொருள் பற்றிய அறிவு ஆகியவையே ஒரு செயலுக்கு மும்மடங்கு இயக்கு ஆற்றல் (அல்லது உந்துதல்). புலனறிவு மற்றும் செயலின் பதினொரு உறுப்புகள், செய்ல், மற்றும் பொருள் இயற்கையின் குணங்கள் ஆகியவை செயலின் மூன்று கூறுகள். (18.18)

மூன்று வகையான செயல்கள்

விருப்பு வெறுப்புகள் இல்லாமல் மற்றும் சுயநல நோக்கங்கள் மற்றும் பலனை அனுபவிப்பதற்கான பற்று இல்லாமல் கட்டாயக் கடமை, செய்யப்படுகிறது. இது நற்குணம் என்று கூறப்படுகிறது. (18.23) சுயத்துடன், சுயநல நோக்கங்களுடன், அதிக முயற்சியுடன் செய்யப்படும் செயல் பாச முறையில் உள்ளது. (18.24) மாயை, விளைவுகளை புறக்கணித்தல், இழப்பு, மற்றவர்களுக்கு காயம், அத்துடன் ஒருவரின் சொந்த திறன் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அறியாமை முறையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. (18.25)

மூன்று வகையான முகவர்

பற்றில் இருந்து விடுபட்ட முகவர், அகங்காரமற்றவர், உறுதியும் உற்சாகமும் கொண்டவர், வெற்றி அல்லது தோல்வியில் அக்கறையற்றவர், நற்குணமுடையவர் என்று அழைக்கப்படுகிறார். (18.26) பாச உணர்வு மிக்க முகவர், செயலின் பலனை விரும்புகிறவர், பேராசை, வன்முறை, தூய்மையினமை, மகிழ்ச்சி மற்றும் துக்கத்தால் பாதிக்கப்படுபவர் பாச குணமுடையவர் என அழைக்கப்படுகிறார். (18.27) ஒழுங்கின்மை கொண்ட, மோசமான, பிடிவாதமான, பொல்லாத, தீங்கிழைக்கும், சோம்பேறித்தனமான, மனச்சோர்வடைந்த மற்றும் காலந்தாழ்த்துகின்ற முகவரை மூடன் என அழைக்கிறார்கள். (18.28)

மூன்று வகை அறிவு

அர்ஜுனா, பொருள் இயற்கை குணங்களின் அடிப்படையில் அறிவு மற்றும் மனத்துணிவின் மூன்று வகைகளை முழுவதுமாகவும் தனித்தனியாகவும் கேட்பாயாக. (18.29) அர்ஜுனா, நற்குணத்தில் அடங்கியுள்ள அறிவு என்பது, செயலின் பாதை மற்றும் துறவின் பாதை, சரியான மற்றும் தவறான செயல், அச்சம் அச்சமின்மை, பந்தம் மற்றும் விடுதலை ஆகியவற்றை புரிந்துகொள்கிறது. (18.30) அர்ஜுனா பாசம் என்ற குணத்தில் அடங்கி இருக்கும் அறிவால் நீதி அநீதி மற்றும் சரியான தவறான செயல் ஆகியவற்றைப் பகுத்தறிய இயலாது. (18.31) அர்ஜுனா, அறியாமை என்ற குணத்தில் அடங்கி இருக்கும் அறிவு, அறியாமையால் மூடப்படும் போது, அநீதியை நீதியாக ஏற்றுக்கொள்கிறது மேலும் இல்லாத ஒவ்வொன்றையும் இருப்பதாக எண்ணுகிறது. (18.32)

மூன்று வகையான மனத்துணிவு, மற்றும் மானிட வாழ்க்கையின் நான்கு இலக்குகள்

அர்ஜுனா, மனதின் செயல்பாடுகளை, பிராணான் (உயிர்த்துடிப்புகள், உயிராற்றல்கள்), மற்றும் புலன்களைக் கடவுளை அறிவதற்காக மட்டும் ஒருவன் பயன்படுத்தும் மனத்துணிவை நற்குணத்தின்பாற்பட்டது எனலாம். (18.33) செயலின் பலனுக்கான ஆசைப்படுதல், கடமையை (தர்மம்) பற்றிக்கொள்ளுதல், மிகுந்த பற்றுடன் செல்வத்தை சம்பாதித்தல் (அர்த்தம்) மற்றும் இன்ப வேட்கை ஆகியவற்றுக்கா ஒருவன் பயன்படுத்தும் மனத்துணிவு பாசக் குணத்தின் பாற்பட்டது ஆகும். அர்ஜுனா, மந்தப்புத்தி உள்ள ஒருவன் தூக்கம், அச்சம், துயரம், விரக்தி, மற்றும் அக்கறையின்மையை விடாமல் இருக்கும் மனத்துணிவு அறியாமை குணத்தில் அடங்கியுள்ளது. (18.35)

இன்பத்தின் மூன்று வகைகள்

மேலும், அர்ஜுனா, இன்பத்தின் மூன்று வகைகளைப் பற்றி என்னிடம் இருந்து கேள். ஆன்மீக நடவடிக்கைகளின் மூலம் ஒருவன் இன்பத்தை அனுபவிக்கும் போது அனைத்து துயரங்களும் நின்றுபோகும். (18.30) முதலில் இந்த இன்பம் நஞ்சைப் போல் தோன்றினாலும் முடிவில் அமுதத்தைப் போல் இனிக்கும். சுய அறிவின் அருளால் வரும் இது நற்குணத்தில் அடங்கும். (18.37) ஆரம்பத்தில் அமுதத்தைப் போல் இனிக்கும் புலனின்பம், முடிவில் நஞ்சாக மாறும். இது பாச குணத்தில் அடங்கும்.(மேலும் பார்க்கவும் 5.22) (18.38) தொடக்கத்தில் ஒருவனை குழப்புகின்ற இன்பம், தூக்கம், சோம்பேறித்தனம் மற்றும் அக்கறையின்மையாக முடிவடையும். இது அறியாமை குணத்தின் பாற்பட்டது. (18.39) உலகிலும் சொர்க்கத்தில் தேவர்களின் மத்தியிலும் இந்த மூன்று பொருளியற்கையின் குணங்களில் இருந்து விடுபடக்கூடிய உயிர்கள் இல்லை. (18.40)

வேலைப்பிரிவு ஒருவனின் திறனை அடிப்படையாகக் கொண்டது

அர்ஜுனா, பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று வேலையை நான்கு வகையாகப் பிரிப்பது  மக்களின் இயற்கையில் உள்ளாக இருக்கும் இயல்புகளை அடைப்படையாகக் கொண்டது (அல்லது இயற்கை நாட்டம், மேலும் ஒருவனின் பிறப்புரிமையாக இருக்கவேண்டிய அவசியமில்லை) (மேலும் ;பார்க்கவும் 4.13) (18.41) அமைதி, சுய கட்டுப்பாடு, தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஆழ்நிலை அறிவு, ஆழ்நிலை அனுபவம் மற்றும் கடவுள் நம்பிக்கை கொண்ட அறிவாளிகள் பிராமணர் என்று வகைப்படுத்தப் படுகிறார்கள். (18.42) வீரம், வல்லமை, உறுதி, திறமை, போரில் உறுதிப்பாடு, கொடை மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவற்றைக் கொண்டவர்கள் சத்திரியர்கள் அல்லது பாதுகாவலர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். (18.43) வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வணிகம், வர்த்தகம், தொழில் போன்றவற்றில் சிறந்தவர்கள் வைசியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சேவை மற்றும் உழைக்கும் வேலைகளில் மிகச் சிறந்தவர்கள் சூத்திரர்கள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். (18.44)

கடமை, கட்டுப்பாடு மற்றும் பக்தியின் மூலம் முக்தி அடைதல்

ஒருவன் தன் இயற்கையான வேலையை அர்ப்பணிப்போடு ஆற்றும்போது மிக உயர்ந்த முழுமையை அடையலாம். ஒருவன் தன் இயல்பான வேலையில் எவ்வாறு முழுமை அடைகிறான் என்பதை என்னிடம் இருந்து கேள். (18.45) ஒருவன் யாரிடம் இருந்து உயிர்கள் தோன்றினவோ, யாரால் இந்தப் பேரண்டம் முழுவதும் ஊடுறுவப்பட்டுள்ளதுவோ, அந்த மேலான பிரம்மத்தை வணங்கி அவருக்கு தனது இயல்பான வேலைகளை செய்வதன் மூலம் முழுமையை அடையலாம் (மேலும் பார்க்கவும் 9.27, 12.10) (18.46) சிறப்பாக செய்யப்பட்டாலும் ஒருவனின் கீழான இயற்கை வேலையே மேலான இயற்கைக்கு மாறான வேலையை விட உயர்ந்தது. ஒருவனின் உள்ளார்ந்த இயல்பால் நிர்ணயிக்கப்பட்ட வேலையை ஒருவன் (சுயநல நோக்கங்கங்கள் இல்லாமல்) செய்யும் போது பாவம் செய்வதில்லை (அல்லது கர்ம எதிர்வினைகள்). (மேலும் பார்க்கவும் 3.35) (18.47) அர்ஜுனா, குறைபாடுடன் இருந்தாலும் ஒருவன் தன் இயற்கையான வேலையை விட்டுவிடக் கூடாது. ஏனெனில், புகை நெருப்பை சூழ்ந்து இருப்பது போல் எல்லா பணிகளிலும் குறைகள் மூடியே இருக்கும். (18.48) யாரொருவனுடை  மனதில் எப்போதும் சுயநலப் பற்று இல்லையோ, யார் மனதையும் புலன்களையும் அடக்கியுள்ளானோ, யார் இச்சைகள் இல்லாமல் இருக்கிறானோ, அவன் செயலின் பலன்களின் மேல் உள்ள சுயநலப் பற்றைத் துறந்து, கர்ம பந்தத்த்தில் இருந்து விடுபட்டு மேலான முழுமையை அடைகிறான். (18.49)

அர்ஜுனா, இத்தகைய முழுமையை (அல்லது கர்மத்தின் பந்தத்தில் இருந்து விடுதலையை) அடைந்த ஒருவன் எவ்விதம் ஆழ்நிலை அறிவின் இலக்கான உன்னத பிரம்மத்தை அடைகிறான் என்பதை என்னிடம் இருந்து சுருக்கமாகக் கற்றுக்கொள். (18.50)  தூய்மையாக்கப்பட்ட அறிவுடன், மனத்துணிவுடன் மனதை உறுதியாக அடக்குதல், புலன்களின் ஒலி மற்றும் பிற பொருள்களிலிருந்து விலகியிருத்தல், விருப்பு வெறுப்புகளை விட்டுவிடுதல்; தனிமையில் வாழ்தல்; குறைவாக உண்ணுதல்; மனம், பேச்சு மற்றும் செயலின் உறுப்புகளைக் கட்டுப்படுத்துதல்; தியான யோகாவில் எப்போதும் மூழ்கியிருத்தல்; பற்றின்மையில் தஞ்சம் அடைதல்; அகங்காரம், வன்முறை, பெருமை, காமம், கோபம் மற்றும் உடைமையைக் கைவிடுதலோடு - ஒருவன் அமைதியுற்றவனாகி, "நான்" மற்றும் "என்" என்ற உணர்வில் இருந்து விடுபட்டு, மேலான பிரம்மத்துடன் ஐக்கியம் அடைவதற்கான தகுதியை அடைகிறான். (18.51-53) மேலான பிரம்மத்துடன் ஐக்கியமான இந்த நிர்மலமானவன் துயரப்படுவதுமில்லை ஆசைகளுக்கு ஆட்படுவதும் இல்லை. எல்லா உயிர்களிடத்திலும் பாரபட்சம் அற்றவனாகி, மிக உயர்ந்த பக்தி அன்பான என் பரபக்தியை அடைகிறான். (18.54) சாரத்தில் நான் யார் என்பதை பக்தியின் மூலம் ஒருவன் புரிந்துகொள்ளுகிறான். சாரத்தில் என்னை அறிந்து ஒருவன் என்னோடு உடனடியாக ஐக்கியமாகிறான். (மேலும் பார்க்கவும் 5.19) (18.55)

அனைத்துக் கடமைகளையும் ஆற்றிவரும் போதும், என்னுடைய அருளால், என்னிடத்தில் அடைக்கலம் அடைந்து (அன்பு நிறைந்த பக்தியுடன் எல்லா செயல்பாடுகளையும் சரணளித்து) ஒரு கர்ம யோகி நித்திய மாறாத மோட்சத்தை அடைகிறான். (18.56) முழுமனதுடன் எல்லா செயல்களையும் எனக்கு காணிக்கையாக்கி, என்னை உன் மேலான இலக்காக்கி, மற்றும் முற்றிலுமாக என்னை சார்ந்திரு. எப்போதும் உன் மனதை என்னில் நிலைநிறுத்தி கர்ம யோகத்தை செய். (18.57) உன் மனம் என் மேல் நிலைப்படும் போது, என் அருளால் உன்னுடைய அனைத்துக் கஷ்டங்களையும் உன்னல் மேற்கொள்ள முடியும். ஆனால், உன் அகந்தையால் நான் கூறுவதைக் கேட்காவிட்டால், நீ அழிந்து போவாய். (18.58)

கர்ம பந்தமும் சுய சித்தமும்

நான் போரிட மாட்டேன் என்று அகந்தையினால் நீ நினைத்தால், உன் மனத்துணிவு வீண் ஆகும். ஏனெனில் உன் சொந்த இயற்கையே உன்னைப் போரிட நிர்ப்பந்திக்கும். (18.59) அர்ஜுனா, நீ உன் சொந்த இயற்கையாகப் பிறந்த கர்ம அழுத்தங்களால் (அல்லது சம்ஸ்காரங்களால்) கட்டுப்படுத்தப்படுகிறாய். ஆகவே, மாயையின் காரணமாக நீ செய்ய விரும்பாததைஉன் சித்தத்துக்கு எதிராகக் கூட- நீ செய்வாய். (18.60) அர்ஜுனா, மேலான பகவானான கிருஷ்ணன் எல்லா உயிர்களின் உள்மனதில் கட்டுப்படுத்துபவனாக உறைந்து ஒரு இயந்திரத்தின் மேல் வைக்கப்பட்ட ஒரு பொம்மையைப் போல (கர்மத்தின்) அவற்றைச் செயல்பட வைக்கிறான் (அல்லது அவர்களின் கர்மத்தை செயல்படுத்துகிறான்). (18.61) அர்ஜுனா, அன்பு கனிந்த பக்தியோடு மேலான பகவானிடம் மட்டும் அடைக்கலம் தேடு. அவனுடைய அருளால் மேலான அமைதியையும் நித்திய பரகதியையும் அடைவாய். (18.62) இவ்வாறு, ரகசியங்களை விடவும் ரகசியமான அறிவை நான் விளக்கி இருக்கிறேன். இவற்றைப்  பற்றி முற்றிலுமாக சிந்தித்து பின் நீ விரும்பும் வண்ணம் செய்வாயாக. (18.63)

சரணாகதிப் பாதையே கடவுளிடம் செல்லும் இறுதிவழி

என்னுடைய மிகவும் ரகசியமான உன்னத வார்த்தைகளை மீண்டும் கேட்பாயாக. நீ எனக்கு மிகவும் பிரியமானவன்; ஆகவே,  இதை நான் உன் நன்மைக்காகவே கூறுவேன். (18.64) உன் மனதை என்னில் நிலைப்படுத்து, எனக்கு பக்தியுள்ளவனாய் இரு, எனக்கு சேவை செய், என்னை வணங்கு, அப்போது என்னை நீ நிச்சயமாக அடைவாய்.  நான் உனக்கு உறுதி அளிக்கிறேன் ஏனெனில் நீ எனக்கு மிகவும் அன்பானவன். (18.65) எல்லா செயல்களின் (உடைமை, உரிமை மற்றும் பலன்களின் மேல் உள்ள பற்று) புறம் தள்ளுவாயாக, என் சித்தத்துக்கு வெறுமனே சரணடை அல்லது மகிழ்ச்சியோடு பின்பற்று. நான் உன்னை (எல்லா பாவங்கள் அல்லது கர்மத்தின் பந்தத்தில் இருந்து) விடுவிப்பேன். துயரம் அடையாதே. (18.66)

எல்லா கடமைகளையும் கைவிட்டு, இறைவனிடம் அடைக்கலம் அடைவதின் அர்த்தம் என்னவென்றால், ஒருவன் பலன்களின் மேல் சுயநலமான பற்று வைக்காமல் கடமைகளை இறைவனுக்கு ஒரு காணிக்கையாக செய்ய வேண்டும் மேலும் உதவிக்கும் வழிகாட்டலுக்கும் முற்றிலுமாக அவனையே சார்ந்திருக்க வேண்டும். உண்மையான சுய சரணாகதியுடன் தன்னையே முழுமையாக நம்பியிருக்கும் ஒருவனுக்காக  இறைவன் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறான்.

கடவுளுக்கான மிக உயர்ந்த சேவையும்

சிறந்த கொடையும்

தவவலிமை இல்லாதவனிடமும், பக்தியற்றவனிடமும், கேட்கும் விருப்பம் இல்லாதவனிடமும் அல்லது என்னைப்பற்றி மோசமாகப் பேசுகிறவனிடமும்  இந்த அறிவைப் பற்றி எடுத்துரைக்கக்கூடாது. (18.67) இந்த மிக மேலான தத்துவத்தை (கீதையின்) என் பக்தர்களுக்கு நடுவில் பரப்புகிறவன் (அல்லது பரப்ப உதவுகிறவன்) எனக்கு மிக உயர்ந்த பக்தி சேவையைச் செய்பவனாய் இருப்பான் மேலும் நிச்சயமாக (உன்னத பரகதியை அடைந்து) என்னிடத்தில் வருவான். (18.68) வேறு எவனும் இதைவிட என்னை மகிழ்விக்கும் செயலை செய்ய முடியாது, மற்றும் இந்த உலகில் வேறு எவனும் எனக்கு அதிக அன்பானவனாகவும் இருக்க முடியாது (18.69)

கீதையின் அருள்

நமது புனிதமான உரையாடலைப் படிப்பவர்கள் அறிவு மற்றும் தியாகத்தின் புனித செயலைச் செய்பவர்கள் ஆவர். இது என் வாக்குறுதியாகும். (18.70) இந்தப் புனிதமான உரையாடலை கீதையின் வடிவில் நம்பிக்கையோடும், அற்ப ஆட்சேபணை இல்லாமலும் கேட்கிறவன் பாவத்திலிருந்து விடுபட்டு, தூய்மையான செயல்களும் நல்லொழுக்கமும் உடையவர்களின் உயர்ந்த உலகங்களான சொர்க்கத்தை அடைகிறான் (18.71) அர்ஜுனா, நீ இதை ஒருமனது உடையவனாகக் கேட்டாயா? மாயையினால் பிறந்த அறியாமை முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதா? (18.72) அர்ஜுனன் கூறினான்: உனது அருளால் என் மயக்கங்கள் அழிந்தன; நான் சுய அறிவைப் பெற்றுவிட்டேன்; (உடல் மற்றும் ஆத்மா பற்றிய) என் குழப்பங்கள் தீர்ந்தன; மேலும் நான் உன் கட்டளைக்குக் கீழ்ப்படிவேன். (18.73) சஞ்சயன் கூறினான்: இவ்வாறு, கிருஷ்ண பகவானுக்கும் பரமாத்மா அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற இந்த அற்புத உரையாடலைக் கேட்டு என் மயிர் கூச்செறிந்தது. (18.74) வியாச முனிவரின் (குரு) அருளால் நான்  யோகத்தின் பகவானான கிருஷ்ணனிடம் இருந்து, நேரடியாக மிக ரகசியமான மற்றும் உன்னதமான இந்த யோகத்தை என் கண்களுக்கு முன்பாக (வியாச முனிவர் வழங்கிய மனக்காட்சி மூலமாக) (அர்ஜுனனிடம்) பேசும்போது கேட்டேன். (18.75) அரசனே, கிருஷ்ண பகவானுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற இந்த அற்புதமும் புனிதமுமான உரையாடலைத் திரும்பத்திரும்ப நினைவுகூரும்போது ஒவ்வொரு கணமும் நான் பரவசம் அடைகிறேன், மற்றும் (18.76) கிருஷ்ணனின் அற்புத வடிவத்தை  மீண்டும் மீண்டும் நினைவுகூரும்போது, அரசனே, நான் மிகவும் வியப்படைகிறேன் மற்றும் மீண்டும் மீண்டும் களிகூருகிறேன். (18.77)

அறிவு மற்றும் செயல் ஆகிய இரண்டும் தேவை

எங்கே யோகத்தின் பகவானான (அல்லது வேதத்தில் தர்மம்) கிருஷ்ணனும், கடமை மற்றும் பாதுகாப்பின் ஆயுதங்களோடு அர்ஜுனனும் இருக்கிறார்களோ அங்கு நித்திய செழிப்பும், வெற்றியும், மகிழ்ச்சியும், ஒழுக்கமும் இருக்கும். இது எனது நம்பிக்கை. (18.78)

இவ்வாறு பகவத் கீதை நிறைவடைகிறது

இந்த நூல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு சமர்ப்பணம் செய்யப்படுகிறது

நம் அனைவரையும் அவர் ஆசிர்வதித்து நன்மை, செழிப்பு மற்றும் சமாதானம் அருளட்டும்.

ஓம் தத் சத்

Translated From English By: Dr.Davidson